அப்பா -8
பருத்தி விளைச்சல் புதிது அப்போ..பருத்திப்புழுவை ஒழிக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அப்பாவும் நிறைய முயற்சி செஞ்சுட்டு கடைசியா வீரியமிக்க ஒரு பூச்சி மருந்தை அடிச்சார்.
வீட்டில் எல்லா விஷயமும் சொல்லுவார். முக்கியமாக குழந்தைகளிடம் பகிருவார். பருத்திக்காயில் புழுவை ஒழித்ததில் கொஞ்சம் பெருமை.
பேச்சுவாக்கில் காயில் இருந்து புழு காட்டினால் அஞ்சு ரூபாய் ஒரு புழுக்கு கொடுக்கறேன் ..முடிஞ்சா தேடிப்பாருங்கனு சவாலா சொன்னார். நானும், கசினும் (என்றே நினைவு) புழுவை தேடி பயணத்தை தொடங்கினோம்.
ஒரு ஏக்கருக்கு மேலே சுத்தியாச்சு..பருத்தி செடிகள் உள்ளே புகுந்து புறப்பட்டு வந்தோம்..ஒரு புழு கூட இல்லை.அஞ்சு ரூபாய் கண் முன்னால..சரி வெளில புழு இல்ல..உள்ளே உடைச்சு பார்போமேன்னு ஒண்ணு. ஒண்ணா பருத்திக்காய்களை எடுத்து உடைக்க ஆரம்பிச்சிட்டேன்..நிறைய காய்கள் வேஸ்ட்..
ஒரு புழு கண்டுபிடிச்சி..பெருமையா அப்பாகிட்ட போய் நின்னேன்..அப்பா புழுவை பார்த்துட்டு உண்மையை சொல்லு இது காய் உடைச்சி எடுத்தியான்னு கேட்டார்..நானும் தலைகீழா அஞ்சு ரூபாய்க்காக பொய் சொல்லிப்பார்த்தேன்..ம்ஹூம்..பா ச்சா பலிக்கல..
அஞ்சு ரூபாயை வாங்கினது தனி கதை..ஆனால் இன்னி வரைக்கும் வயலுக்கே போகாம அப்பா அந்த புழுவை பற்றி எப்படி கண்டுபிடிச்சார் என்பதுதான் ஆச்சரியம்..
விவசாயி.
பருத்தி விளைச்சல் புதிது அப்போ..பருத்திப்புழுவை ஒழிக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அப்பாவும் நிறைய முயற்சி செஞ்சுட்டு கடைசியா வீரியமிக்க ஒரு பூச்சி மருந்தை அடிச்சார்.
வீட்டில் எல்லா விஷயமும் சொல்லுவார். முக்கியமாக குழந்தைகளிடம் பகிருவார். பருத்திக்காயில் புழுவை ஒழித்ததில் கொஞ்சம் பெருமை.
பேச்சுவாக்கில் காயில் இருந்து புழு காட்டினால் அஞ்சு ரூபாய் ஒரு புழுக்கு கொடுக்கறேன் ..முடிஞ்சா தேடிப்பாருங்கனு சவாலா சொன்னார். நானும், கசினும் (என்றே நினைவு) புழுவை தேடி பயணத்தை தொடங்கினோம்.
ஒரு ஏக்கருக்கு மேலே சுத்தியாச்சு..பருத்தி செடிகள் உள்ளே புகுந்து புறப்பட்டு வந்தோம்..ஒரு புழு கூட இல்லை.அஞ்சு ரூபாய் கண் முன்னால..சரி வெளில புழு இல்ல..உள்ளே உடைச்சு பார்போமேன்னு ஒண்ணு. ஒண்ணா பருத்திக்காய்களை எடுத்து உடைக்க ஆரம்பிச்சிட்டேன்..நிறைய காய்கள் வேஸ்ட்..
ஒரு புழு கண்டுபிடிச்சி..பெருமையா அப்பாகிட்ட போய் நின்னேன்..அப்பா புழுவை பார்த்துட்டு உண்மையை சொல்லு இது காய் உடைச்சி எடுத்தியான்னு கேட்டார்..நானும் தலைகீழா அஞ்சு ரூபாய்க்காக பொய் சொல்லிப்பார்த்தேன்..ம்ஹூம்..பா
அஞ்சு ரூபாயை வாங்கினது தனி கதை..ஆனால் இன்னி வரைக்கும் வயலுக்கே போகாம அப்பா அந்த புழுவை பற்றி எப்படி கண்டுபிடிச்சார் என்பதுதான் ஆச்சரியம்..
விவசாயி.
No comments:
Post a Comment