Friday, February 13, 2015

காதலர் தினம்.

இந்த தலைமுறை காதலர்கள்.
இன்டர்நெட் வந்தாலும் வந்தது..காதல் என்பது ஜஸ்ட் டைம் பாஸ் அளவுக்கு மாறிக்கொண்டு இருக்கிறது. கமிட்டேட் ஜோடிகள் மிகக் குறைவாகி கொண்டு வருகின்றனர். பெற்றோரிடம் தெரிவித்து அவசரமாக சம்மதம் வாங்கிவிட்டு அவர்கள் ஆயிரம் யோசனை, கவலைகளுடன் குழந்தைகளுக்காக சம்மதம் கொடுத்துவிட்டு திரும்பும் வேளையில் பாதிக்கு மேலான காதலர்கள் இது ஒத்து வரலை என்று பிரிகிறார்கள்..
பல குழந்தைகள் மிகத் தெளிவு..அம்மா கல்யாணம் நீ சொன்னது போலதான்..இதெல்லாம் டேட்டிங்..பாய் பிரெண்ட், கேர்ள் பிரெண்ட்..கமிட் பண்ணிக்கல என்று தெளிவாகவே சொல்லிவிட்டு அவர்களுக்கு பெற்றோர் பணத்தில் கிப்ட் கூட வாங்கி தருகிறார்கள்.
என் தோழி ஒருத்தி என் பையனுக்கு கேர்ள் பிரெண்ட் வைத்துக்கொள்ள சம்மதித்து இருக்கிறேன். (தேவையே இல்லை) ஆனால் கல்யாணம் வரை கமிட் செய்யாதே..சம்பாதிக்கும் வரை பொறுமையாக இரு..இதெல்லாம் இனக்கவர்ச்சி..தப்பில்லை..ஆனால் வாக்கு கொடுக்காதே என்று சொல்லி இருக்கிறாள். இது போன்ற அம்மாக்களை அதிகம் சந்திக்கிறேன்.
என் பையன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வேளையில் சொன்ன வாசகம் இது..எனக்கு மட்டும்தான் கேர்ள் பிரெண்ட் இல்லை என்றான்.. நான் அதிர்ச்சியுடன் ஏன் என கேட்க..ரொம்ப காஸ்ட்லி ம்மா..எனக்கு ஒத்து வராதுன்னு சொல்லிட்டு போயிட்டான். இருக்கு என்றாலும் நான் என்ன செய்ய முடியும்.
IIT தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கிய பையன் பேசினான். நன்றாக படிக்க கேர்ள் பிரெண்ட் வைத்துக்கொள்ளுங்கள் என்று டிப்ஸ் கொடுத்தான். அவள் தினமும் அவனுக்காக நோட்ஸ் எடுத்துக்கொடுத்து..படிக்க ஊக்கம் கொடுத்ததால் இந்தளவுக்கு வர முடிந்தது என்ற ஆசிரியர்களுக்கு மத்தியிலேயே சொன்னான். காதலியுங்கள் என்று சொன்னானா என்று நினைவில் இல்லை.
நான் பதினைந்து வருடம் முன்பு ஒரு தோழியை சந்தித்தேன்..அதெப்படி நீ ஒரே மொழியில், மதத்தில், ஜாதியில் திருமணம் செய்துக்கொண்டாய்..அப்படிக்கூட காதலர்கள் அமைய முடியுமா என்று ஆச்சர்யம் கொண்டாள்..நான் பெற்றோர் பார்த்த திருமணம் என சொல்ல..இந்த காலத்திலா என்று இன்னும் அதிர்ச்சி..இது கிராமத்திலிருந்து காலடி எடுத்து வைத்த எனக்கும் அதிர்ச்சி..காதல் என்று சொன்னாலே, பேசினாலே அடி விழும் காலத்தில் வளர்ந்தவள் வேறு.
கல்லூரியில் ஒரு தோழி..பஸ் ட்ரைவர்..ஏற்கனவே திருமணமானவன். தினமும் பஸ்ஸில் நட்பாகி திருமணம் செய்துக்கொண்டு வந்தாள்..அலைபாயுதே கதை. பொருந்தா திருமணம். ஏமாற்றி இருக்கிறான். அன்று வந்த தோழியின் தாய் கதறலில் கல்லூரியே ஆடியது. ஏம்மா நீங்கெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துட்டடீங்களே என்று கதறி கேட்கும்பொழுது குற்ற உணர்வுடன் தலை குனிந்தோம். நம் சமுக வாழ்வு எத்தனை கொடுரம் என்று உணர்ந்ததால் வந்த தலைக்குனிவும்.
சமீபத்தில் ஊரில் ஒரு காதல் கலப்பு திருமணம். யாரும் அந்த திருமணத்தை பற்றி வம்பு பேசவில்லை. ஜாதி பற்றிக்கூட விசாரிக்கவில்லை. ஊர் அதுவும் ஒரு கிராமம் இந்தளவுக்கு சகஜமாக மாறி இருப்பது மிக ஆச்சரியம்..வெளிநாட்டில் இருந்து என்னை சந்திக்க வந்த மாணவனிடம் பேசினேன்..பெருமையுடன்..எங்க கிராமமே மாடர்னாகி விட்டது. கலப்பு திருமணங்களை பற்றி யாரும் வம்பு பேசவில்லை..சந்தோஷமாக இருக்கிறது எனச் சொல்ல..
போங்க..ஆண்டி..இதெல்லாம் மாடர்னா..பையன், பெண்ணைதானே செஞ்சு இருக்கான் என்று சொல்ல..அப்புறம் என்னடா என்று கேட்டேன்..இப்பல்லாம் பையன், பையனை செஞ்சுக்கிறது , காதல் செய்வதுதான் புரட்சி, மாடர்ன்..அதையும் நீங்கள் ஏத்துக்கணும் என்றான்.
ஒரு நிமிடம் பந்து முகத்தில் அடித்தது..அதிர்ச்சி..இதை எதிர்ப்பார்க்கவில்லை..மெதுவாக சொன்னேன்..நான் மாடர்ன்..இதை ஏற்றுக்கொள்வேன்..அவர்களுக்காக எந்த உதவி வேண்டும் என்றாலும் செய்வேன்..ஆனால் அது என் வீட்டில் நடக்காத வரை என்று உறுதியாக கூறினேன். அவ்வளவு எளிதில் இந்த குடும்ப அமைப்புகளை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது என்று முடித்தேன்.
இனிமே காதல், கலாசாரம், மாடர்ன், ஏற்றுக்கொள்ளல் பற்றியெல்லாம் பேச உங்களுக்கு தகுதி இல்லை என்றுச் சொல்லி அலட்சியமாக பபிள்கம் மென்றுகொண்டு உதடு சுழித்து கிளம்பினான்.