அப்பா -7
எங்க வீட்டில், இரவில் பால் குடிக்காமல் தூங்கக்கூடாது..அக்கா, தம்பிக்கு தூக்க்கதிலேயே அம்மா கொடுத்துவிடுவார்கள். எனக்குதான் கஷ்டம்.
நானும் பால் குடிக்காமல் தவிர்க்க தூங்குவது போல பாவ்லா செய்வேன். இதை பார்த்த அம்மா அப்பாவை கூட்டிக்கொண்டு வருவார்கள்.
அப்பா "தூங்கினா கால் ஆடும், அவ கால் ஆடுதா பாரு"ன்னு சொல்வார்கள்..நானும் உடனே விவரம் தெரியாம கால் ஆட்டிவிடுவேன்..உடனே சிரித்துக்கொண்டே எழுப்பி பால் கொடுத்துவிடுவார்கள்.
இது ரொம்ப நாள் புரியல..தப்பா கால் ஆட்டிட்டோம்..அதான் கண்டுபிடிசிட்டாங்கன்னு யோசித்து விதம், விதமா ஆட்டி பார்ப்பேன்..விவரமா ஆயிட்டேன் என்று வேறு நினைப்பு எனக்கு..இன்னிக்கு வரைக்கும் விவரம் வரல ஏன்னா..
பெரியவன்கிட்ட முயற்சித்தேன்..உடனே அவன் எழுந்து சயிண்டிபிக்கா பேச ஆரம்பிச்சிட்டான்..சின்னதுகிட்ட ஒரு தடவ முயற்சித்தேன்..உடனே தூங்கரப்ப இந்த அம்மா டிஸ்டர்ப் பண்றான்னு ஊரையே கூட்டிடான்..
வழக்கம் போல நான்..ஞே...
எங்க வீட்டில், இரவில் பால் குடிக்காமல் தூங்கக்கூடாது..அக்கா, தம்பிக்கு தூக்க்கதிலேயே அம்மா கொடுத்துவிடுவார்கள். எனக்குதான் கஷ்டம்.
நானும் பால் குடிக்காமல் தவிர்க்க தூங்குவது போல பாவ்லா செய்வேன். இதை பார்த்த அம்மா அப்பாவை கூட்டிக்கொண்டு வருவார்கள்.
அப்பா "தூங்கினா கால் ஆடும், அவ கால் ஆடுதா பாரு"ன்னு சொல்வார்கள்..நானும் உடனே விவரம் தெரியாம கால் ஆட்டிவிடுவேன்..உடனே சிரித்துக்கொண்டே எழுப்பி பால் கொடுத்துவிடுவார்கள்.
இது ரொம்ப நாள் புரியல..தப்பா கால் ஆட்டிட்டோம்..அதான் கண்டுபிடிசிட்டாங்கன்னு யோசித்து விதம், விதமா ஆட்டி பார்ப்பேன்..விவரமா ஆயிட்டேன் என்று வேறு நினைப்பு எனக்கு..இன்னிக்கு வரைக்கும் விவரம் வரல ஏன்னா..
பெரியவன்கிட்ட முயற்சித்தேன்..உடனே அவன் எழுந்து சயிண்டிபிக்கா பேச ஆரம்பிச்சிட்டான்..சின்னதுகிட்ட
வழக்கம் போல நான்..ஞே...
No comments:
Post a Comment