Thursday, October 30, 2014

அமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா? பயணம்-மூன்று..

விசா..

விசாவை பற்றி பக்கம் பக்கமாய் பயமுறுத்தல்கள் வந்துக்கொண்டே இருந்தன..எதையும் பாசிட்டிவாக கருதி முடிவெடுக்கும் எனக்கே நெகடிவ் சிந்தனைகள் வர தொடங்கி இருந்தன..வேறு காலேஜ் எதற்கும் முயற்சிக்கவில்லை..அமெரிக்க கல்லூரியை  நம்பி இந்திய புருஷ கல்லூரிகளை கை விட்ட கதை போல தோன்றியது...

கல்லூரியில் இருந்து மெயில்..டெல்லிக்கு வருகிறோம்.அங்கு ஒரே நாளில் விசா விசாரணைகள் முடிக்கலாம்..நாங்கள் உதவுவோம் என்று கூறினார்கள்..முன்ன்ப்பின்ன பார்த்து இருந்தாதானே தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு..அதுபோல முன்னப்பின்ன யாரும் வெளிநாட்டு பட்டப்படிப்புக்கு கல்லூரிக்கு சென்ற அனுபவம் இல்லாததால் கொஞ்சம் ஆரம்ப தடுமாற்றம்..இதுக்கு ட்ரைனிங் கொடுக்கிறேன் என்று பத்தாயிரம் முதல் அம்பாதாயிரம் வரை பிடுங்கும் நிறுவனங்கள் உள்ளன..சரியாக வலை தளத்தை அலசினால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்..பணமும் தப்பிக்கும்.

     டெல்லி என்றவுடன். இரண்டு டிக்கட் டெல்லிக்கு வாங்கி தோழி ரமாக்கு போன் செய்து சொல்லி..இருவரும் ஊர் சுத்த ரகசிய பிளான் எல்லாம் போட்டாச்சு..எத்தனை டென்ஷன் இருந்தாலும்..சுனாமியில் ச்ச்சும்மிங் அடித்து பழக்கம் என்பதால் தோழி வீட்டுக்கு செல்வது பற்றி அப்படி ஒரு ..மகிழ்ச்சி..

    பையன் என்ன என்னமோ, தேடினான்..யாருக்கோ போன் செய்தான்.. அம்மா விசா என்பது அமெரிக்கன் எம்பசியில் கொடுப்பது..என்னதான் காலேஜ் வந்து நின்றாலும் அங்கு ஒன்னும் செய்ய முடியாது..என்ன ப்ரோசெஸ் இருக்கோ அது வழி சென்றுதான் ஆக வேண்டும் என்றான்..நம்ம பையனா இருந்தாலும் தெளிவா இருக்கானேன்னு நினைத்தேன்..ஆனால் டெல்லி பயணத்தை கைவிட மனமே வரவில்லை..சரி யோசிப்போம்டா என்று சொல்லிவிட்டு போய்விட்டேன்..

வெளியே எங்கோ இருக்கையில் கைப்பேசி மெசேஜ் பாக்ஸ் ஒளிர்ந்து அடங்கியது..பார்த்தால் நம்ம பய சென்னைக்கு டிக்கட் வாங்கி இருக்கான்..அடுத்து மெயில் ஒளிர்ந்தது..பார்த்தா டெல்லி டிக்கெட் எல்லாம் கேன்சல் செய்து இருக்கான்..விசாவை விட ரமா வீடு(வட) போச்சே பீலிங் ஒரு நிமிடம் வந்து போனது..

   அடுத்து சென்னை ரயில்..எப்பவும் சென்டரல் நெரிசல்..ஆனால் சரவண பவன் மணம்  ரொம்பதான் இழுக்குது.. ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டோம்..என் பையனுக்கு விவரம் தெரியும் என்பதால் பெரிதாக எதுவும் வாசிக்கவில்லை..ஆனால் சொத்து விவரங்கள் முதல் கொண்டு ஆடிட்டரிடம் செர்டிபிகேட் செய்துக்கொண்டு போயிருந்தோம்..

ஆம்..முக்கியமான விஷயம்..எத்தனை ரூபாய் அங்கு பீஸ் கட்ட வேண்டுமோ அத்தனை ரூபாயை இங்கு விசாவோடு கணக்கு காட்ட வேண்டும்..பேங் பேலன்ஸ் மிக முக்கியம்  என் பையன் ஸ்காலர்ஷிப் என்பதால் கொஞ்சம் தப்பித்தோம்..இல்லாவிடிம் குறைந்தபட்சம் நாற்பது லட்சம், ஒரு வருட கல்லூரி, உணவு, தங்குமிடம் கட்டணம் கணக்கில் இருக்கவேண்டும்..

       பேங் பேலன்ஸ் அடுத்து பிக்சட் டெபாசிட், அளவீடப்ட்ட தங்க நகைகள், பாண்டுகள், உடனே மாற்றக்கூடிய ஷேர்கள் இவை முக்கியம்..அதை தவிர நோட்டரி பப்ளிக் மற்றும் ஆடிட்டர் கொடுக்கும் சொத்து கியாரண்டிகள் மிக முக்கியமானவை..பயங்கர வேலை கொடுக்கும் விஷயங்கள் இவை..பேங் லோன் என்றால் அதற்குரிய டாகுமென்ட்ஸ் அத்தியாவசியம்..

      மிக முக்கியம் காலேஜ்லிருந்து வரும் அனுமதி கடிதம் மற்றும்
I -20  விசா கடிதம்..அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்..எத்தனை டாலர்கள் என்று..சில சமயம் அத்தனையையும் டாலர் மதிப்பில் போட்டு பேங் ல் இருந்து கடிதம் வாங்கி சேர்க்க வேண்டும்..

       மூச்சு வாங்கிவிடும்.அத்தனை பேப்பர்களையும் சேகரிக்க..ஆனால் வேறு வழியில்லை.. அப்பா, அம்மாக்கே  இவங்கதான் அப்பா ,அம்மா என்று போலிசும் , மாஜிஸ்ட்ரேட் அதிகாரியும், நோட்டரி பப்ளிக்கும் கொடுக்க வேண்டி இருக்கு..இவர்கள் என் கல்யாணத்தை..ஏன் வீட்டைக்கூட பார்த்தது இல்லை..ஆனால் கொஞ்சம் செலவு செஞ்சா  என் பையன் எனக்கு பிறந்தவன் என்று சொல்ல வைக்கலாம்..

 மிக கவனமாக இருக்க வேண்டிய இடம் அமெரிக்க எம்பசி.

      காலை கிளம்பி..எல்லா கடவுள்களையும் துணைக்கு அழைத்து..அமெரிக்க சுவாமிகள் பெயர்கள் அப்ப தெரியாது..இல்லாவிட்டால் ப்ளஷிங் கணேஷ்கிட்டயும், பிட்ஸ்பர்க் வெங்கட்க்கிட்டயும் ஒரு அப்ளிகேஷன் போட்டு இருக்கலாம்..அப்ப அவர்கள் அறிமுகமாகவில்லை..ஏசு அமெரிக்க கடவுளா, இஸ்ரேல் கடவுளா என்று பெருங்குழப்பம்..வேளாங்கண்ணி மாதா முழுக்க இந்தியனைஸ் செய்யப்பட்டு இருந்தாள்.. ஆனால் சென்னையில் எங்கோ விசா கோவில் இருக்கு..அங்கு அப்ளை செய் என்று கூறினார்கள்.. அப்ப அப்ப அக்னாஸ்டிக் மண்டையை தட்டாவிட்டால் வேண்டுதல்கள் உள்ளே வந்து உக்கார்ந்து விடும்..தொட்டில் பழக்கம்..

முதலில் ஜெமினி மேம்பாலம்..எம்பசிக்கு செல்ல தயாராகும் வேளையில் அப்பாயின்ட் பேப்பரை கவனித்தால் அது வேறு இடத்தை குறித்தது.. பையனை முறைத்தால் அவன் எனக்கு சென்னை பற்றி ஒன்னும் தெரியாது என்று ஜகா வாங்கினான்..உடனே ஆட்டோ பிடித்து போனால்..இரண்டு வரிசை..எட்டு மணி, எட்டரை மணி..என்று..ஒன்பது மணி வரிசையை காணும்..விசாரித்தால் எட்டரையில் நில்லுங்க என்றார்கள்..நின்று கொண்டே இருந்தால்..எட்டு உள்ள போய் இன்னொரு வரிசை தயாராக இருந்தது. எட்டரைக்கு  டாகுமென்ட்ஸ் செக் செய்ய டை போட்ட டிப் டாப்பு இளைஞர்கள் வந்தார்கள்..சில யுவதிகளும் ட்ரெயினிங்ல் இருந்தார்கள்..

அவர்கள் மேடம் நீங்க ஏன் நிக்கறீங்க என்று வினவ..நான் மைனர் கார்டியன் என்றேன்..சரி என்றுவிட்டு பக்கத்தில் உள்ள பெரிய வரிசையை காட்டி ஒன்பது மணி அங்கு போங்க என்று கூற..திரும்ப கடைசியில் சேர்ந்தேன்..நம் நேரம் அப்பவும் வரிசையில் கடைசி இடம்தான்..முன்னால போய் டான் ன்னு நின்னாலும் இதேதான் நடக்கும்.. ஆனால் வரிசையில் அரட்டை அடித்து பிரெண்ட் பிடிக்கும் பழக்கம் போகவில்லை..ஒருவர் விசிட்டர், டிபண்டன்ட், ஐ-டி மூன்று கதைகள் தயாராக இருந்தன..வரிசை கதைகள் என்று எழுத ஆரம்பித்தால் விசா பற்றியே புத்தகம் போடவேண்டும்.அத்தனை அரட்டைகள்  அரங்கேறுகின்றன..  போன் அனுமதி இல்லை..இல்லாவிட்டால் அனைவரும் அதைத்தானே தடவிக்கொண்டு இருப்பார்கள்..இப்பொழுது எல்லாம் பேச ஆள் கிடைக்குமா என்று ஆட்களை துழாவும் சமயங்கள் அரிதாகி வருக்கின்றன..

  அது வெறும் கை ரேகை, கரு விழி, போட்டோ  பதியும் இடம்..அவ்வளவுதான்..உடனே நம்மை பற்றிய விவரங்கள் ஒரு எண்ணில் ஏறிவிடும்..அமெரிக்காவின் எந்த மூலையில் இருந்தும் நம் கைரேகை காப்பி அவர்களிடம் இருக்கும்..நம் பாட்டி , தாத்தாவை பற்றிக்கூட விவரங்கள் வைத்து இருப்பார்கள் போல..

  நம் ப்ரேவேசி தொலைவது பற்றி எல்லாம் யாருக்கும் கவலைப்பட நேரம் இல்லை..முதல் ஸ்டிக்கர் முதுகில் ஓட்ட துவங்கும் இடம் என்பது அந்த ஆபிசில் வரிசையில் நிற்கும் யாரும் அறிவதில்லை..அறிந்து என்ன செய்யபோகிறோம்..படிப்பு, பிழைப்பு எத்தனையோ இருக்க இந்த அரசியல் நமக்கு தேவையும் இல்லை..

மறுநாள் விசா தேர்வு..அங்கு காலையில் இருந்தே வரிசை..உயரமான காம்பவுண்ட் வால்..முள்வேலி , ஆங்காங்கு குழாய் போன்ற கண்காணிப்பு கேமாராக்கள்..காமிரா சுழலும் ராணுவ வசதி உள்ள ஒரு போலிஸ் வாகனம்..சுற்றி நிற்பவர்களை துரத்த அவ்வப்பொழுது வரும் ஜீப் ட்ராபிக் போலிஸ்..ஆஹா..நம்ம ஊர் நவீன ஜெயில் போல இருக்கே..மாட்டிக்கிட்டு இருக்காங்களா,,இல்லை உள்ள நிஜமா வேலை செய்யறாங்களா என்ற சந்தேகம் வந்தது..எத்தனை பேரை பயம் காட்டறாங்க...அதே சமயம் யாருக்கோ பயந்துக்கிட்டு ஒவ்வொரு நாடுலையும் வேலை செய்யறாங்க இல்ல..அப்படின்னு  சின்னதா தோணிச்சு..அப்படியே அடக்கிட்டேன்..நோ, நோ..பையன் படிக்கணும்..கிரேட் கண்ட்ரி, க்ரேட் மக்கள்..அடக்கி வாசி..இது என் மைண்ட் வாய்ஸ்..


விசா கிடைச்சுதா? என்ன கேட்டாங்க? அடுத்த பதிவில்..8 comments:

விசு said...

Wow...I didnt know that you Blog. Great writing. Thats a pleasant surprise.

கிருத்திகாதரன் said...

நன்றி ..ரொம்ப நாளா இருக்கேன்..ஆனால் அப்ப அப்ப வருவேன்..

S.Raman, Vellore said...

உங்கள் வலைப்பக்கத்திற்கு முதல் முறையாக வருகிறேன். நன்றாக உள்ளது.

Rathnavel Natarajan said...

அமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா? பயணம்-மூன்று..
விசா.. - Kirthika Tharan.

அமெரிக்க கல்லூரியை நம்பி இந்திய புருஷ கல்லூரிகளை கை விட்ட கதை போல தோன்றியது... = விசா வாங்க, வெளி நாட்டில் படிக்க, செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் - அருமையான நகைச்சுவை நடையில் சொல்லியிருக்கிறார். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Kirthika Tharan.

கவிதை பூக்கள் பாலா said...

அனுபவங்களை அழகாய் ஆழமாய் எழுது நடை அருமை .......

Avargal Unmaigal said...

ஹலோ இது பேஸ்புக்கு இல்லை வலைதளம் அதனால பதிவு போடும் போது அதற்கேற்ற போட்டோவும் போடனும். இந்த பதிவிற்கு ஏற்ற படம் எது என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கும் அதற்கு உதவவே நான் வந்துள்ளேன்.

இந்த பதிவிற்கு ஏற்ற சிறந்த படமாக நான் ரெகமெண்ட் பண்ணுவது உங்க பேங் பேலன்ஸ் அடுத்து பிக்சட் டெபாசிட், அளவீடப்ட்ட தங்க நகைகள், பாண்டுகள், உடனே மாற்றக்கூடிய ஷேர்கள் தான்

கிருத்திகாதரன் said...

ஆஹா @avarakal unmaikal..உங்க பத்திரிக்கை பேரு உண்மைகள்..அதுக்காக..அம்புட்டு உண்மையாகவா? நாங்க இருப்பது இந்தியாவுல..எங்க இஷ்டம்.மாலை கூட மஞ்ச பை ல மறைச்சு வைப்போம்..அக்காக்ங்...

Anonymous said...

அருமயான பதிவு நல்ல வரிகள் தொடரட்டும் உங்கள் பணி இனிய வாழ்த்துக்கள் !!!