ஜன்னல் -நாலு..
தலைமை கோட்டை சுவர் கம்பீரமாக நின்றது..சுற்றி கார்பரேட் ஆபிஸ் புல்லட் ப்ரூப் கண்ணாடி சுவர்கள் சுற்றி வளைத்து சரியான டிரெஸ் கோடில் நின்றுகொண்டு இருந்தன..
வட்ட மேஜை மாநாடு..மிக ரகசியமாக எல்லா சுவர்களின் ஐ-டிக்கள் நிறங்கள் சரி பார்க்கப்பட்டு உள்ளே விடப்பட்டன..அப்பார்மென்ட் சுவர் தலைவர் முதலில் நின்றது..எல்லாம் Gated Community செய்துவிட்டோம்..சில வீடுகளை தரை மட்டமாக்கி விட்டால் போதும்..அத்திப்பட்டிகிராமம் மட்டும்தான் மிச்சம் என்றது..பக்கத்தில் இருந்த சுவர்..அதுதான் கெசட் ல இல்லையே ஏன் வாய்விட்டாய் என்று கல் தோளை தட்டிற்று..
கார்பரேட் சுவர்கள் மகிழ்ச்சியாக ஆரவாரம் ஜல்லி செய்தனர்...எல்லா மனிதர்களையும் அடைத்து ஆயிற்று..அடுத்து..
நாங்கள் விவசாய வேலி சுவர்கள்..விவசாயம் எல்லாம் சுவருக்குள்..உங்கள் சொந்த நிலங்கள்..விவசாயிகளுக்கு இனி நிலம் இல்லை..
ஆஹா, ஆஹா..என்று விவசாய காரபரேட் தலைமை சுவர் கல் தட்டிற்று..
நாங்கள் அரசாங்க சுவர்கள்..கோட்டை சுவர் சொல்படி எல்லா அதிகாரிகளும் நம் கையில்..
அடுத்து ஹோட்டல், கடைகள் அனைத்தும் அடங்கிய மால் சுவர்கள்..எல்லா வியாபாரமும் நம் மூலம் மட்டுமே..
கம்பீரமாக வந்த வெள்ளை சுவரை அனைவரும் மரியாதையோடு பார்த்தனர்..அத்தனை மருத்துவமனைகளும் நம் கையில்..ஒரு நோயாளி கூட தப்பிக்கவில்லை..வெளியே எங்கும் போக முடியாது..
வரிசையாக தொழிற்சாலைகள், மீடியாக்கள், அரசாங்க அலுவலகங்கள், வழிபாடு இடங்கள்..கண்ணுக்கு தெரியாத மெல்லிய தொடு திரை போல உள்ள ஆன்லைன் சுவர்கள்..பாங் சுவர்கள் எல்லாம் தத்தமது ரிப்போர்ட் சமர்ப்பித்தன...
கோட்டை சுவரும், கார்பரெட் சுவர்களும் எழுந்தது..நாம்தான் உலகை ஆள்கிறோம்..மனிதர்களுக்கு இது தெரியவேண்டாம்..அவர்கள் அப்படியே செயல்படட்டும்..ஏமாளிகள்..
ஒரு சுவரின் சந்தேகம்..நாம்தான் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்தாயிய்ற்றே.இன்னும் எதற்கு அவர்கள் உதவி?
வேண்டும், வேண்டும்..அவர்கள் உழைப்பு இல்லாமல் ஒரு சுவர் கூட எழும்ப முடியாது..அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கட்டும்..உழைப்பதற்கு நாமே காசு கொடுப்போம்..மால், உணவு பொருள், மருத்துவமனை, ரோட் டாக்ஸ் , டால், பொது டாக்ஸ் எல்லாம் உற்பத்தி பொருட்கள் எல்லாம் நம்மிடம் வாங்குவான்..அவனே சந்தை..ஆனால் அவன் என்றுமே நம் தொழிலாளி..புரிகிறதா..
ஆஹா, ஆஹா கல் தட்டிற்று ஆணவமாக கார்பரேட் சுவர்கள்..
தூரமாக ஒரு சுவர் ஓடிக்கொண்டு இருந்தது..குழந்தைகள் கிறுக்கிய ஒற்றை பள்ளிசுவர்..குழந்தைகளை மட்டுமாவது என்ற துடிப்போடு..
No comments:
Post a Comment