Sunday, November 2, 2014

அமெரிக்க பயணம்..கானல் நீரா, பாலைவன சோலையா...பாகம் நாலு..

விசா பார்ட் 2

விசாவில் நிறைய வகைகள்  இருக்கு..மாணவர்கள் விசா, பிசினஸ் விசா, விசிட்டர் விசா, டிபண்டன்ட் , H1B ,  இம்மிகரன்ட் என்று..இதில் மிக எளிதானது விசிட்டர் அல்லது டூரிஸ்ட் விசா..அதில்தான் நான் அப்ளை செய்தேன்.

பையன் சென்றது மாணவர் விசா.. பெரிய பேங் லாக்கரில் இருப்பது போல் இரும்புக்கதவு..ஜெமினி மேம்பாலம் அருகே  நானும் உள்ளே போனேன்..என்னை ரொம்ப ஏற இறங்க சந்தேகமாக பார்த்தார்கள்..பதினெட்டு வயதுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு மைனர் கார்டியன் கூட செல்ல வேண்டும்..ஆனால் நான் அம்மா என்று சொன்னத்துக்கு நம்பாமல் போனது எனக்கு மகிழ்ச்சியும் பையனுக்கு டென்ஷனும் ..புடைவைக்கட்டிக்கொண்டு கொஞ்சம் வயசான மாதிரி வான்னு சொன்னா கேக்கறியா என்று டென்ஷன் ஆகிவிட்டான். இடம் அது போல..சின்ன சந்தேகம் வந்தால் கூட விசாவை ரிஜக்ட் செய்வார்கள் என்று பயம்...

சில சமயம் இப்படியாவது போகனுமா..நம்ம நாட்டில் என்னதான் இல்லை என்று அலுப்பு வரும்..சரி காரியத்தில் இறங்கியாச்சு..ஒரு கை பார்த்துடுவோம் என்று மேலே செய்வோம்..அத்தனை பெரிய இரும்பு கதவை தாண்டி போனால்..அந்த கதவு வெறும் காம்பவுன்ட் சுவருக்கு..உள்ளே மரமெல்லாம் வைத்து கொஞ்சம் வெளி இருந்தது..அதற்கு  பிறகு கட்டிடம்..நல்லா பயந்துக்கிட்டுதான் இருக்காங்க போல..பாதுகாப்பு..உள்ளே பேப்பர் தவிர எதுவும் அனுமதி கிடையாது..பணம் கொஞ்சம் செலவுக்கு..அவ்வளவுதான்..பெல்ட் கூட கழட்டி செக் செய்யும் இடம். ஒரே ஒரு பைல்..தண்ணீர் கூட அனுமதி இல்லை..அதனால் வீட்டில் அத்தனையும் வைத்துவிட்டு வந்தோம்.

கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட கவுண்டர்கள்..ஆங்கிலம்  தவிர சொந்த மொழியில் பேசவும் வாய்ப்பு உண்டு. தமிழ் வேண்டும் என்றால் முன்பே அதற்கு ஏற்றவாறு அனுமதி வாங்கி கொள்ளல்லாம்..ஆனால் மாணவர்களுக்கு நல்ல ஆங்கிலம் தெரிந்து இருப்பது அவசியம். வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். இரு மாணவர்களை கொஞ்சம் உற்று கவனித்தேன்..அமெரிக்கர்கள், இன்டர்வியூ எடுப்பவர்கள் மைக் வைத்துக்கொண்டு இருந்தார்கள்..ஆனால் பெரும்பாலான இந்தியர்கள்  மைக்கை குழந்தையாக இருக்கும் பொழுதே முழுங்கி விட்டதால் தேவை இல்லை..அப்படியே பேசினால் போதும்..

ஒரு வட இந்திய மாணவன்..மேற்படிப்பு ஆங்கிலம் உ.பி ஆங்கிலம்..டெக்னிகலாக நிறைய படிப்பு பற்றியும், ப்ராஜக்ட் பற்றியும் கேள்வி கேட்டார்கள்..நல்லாத்தான் பதில் சொன்னான்..ஆனால் விவசாயி மகன்..சொத்து நிலங்களாக காட்டினான் போல..ரிஜக்டட்..ஆங்கில உச்சரிப்பு மைனஸ் பாயின்ட். ப்ச்

பக்கத்து கவுண்டர்...கொஞ்சம் முப்பது வயதுக்கு மேல்..நிறைய கேள்வி கேட்டார்கள்..சரியா பதில் சொல்லல ரிஜக்டட் என்றார்கள்..அவன் எனக்கு பயம்..முதல் முறை என்றான்..இல்லை எட்டாம் முறை என்று கோவமாக சொன்னார்..மேல் நாட்டவருக்கு அதுவும் அரசாங்கத்தில் , மிகப்பிடிக்காத விஷயம் பொய் சொல்வது.. உண்மையை ஒத்துக்கணும்..அது மிக முக்கியம்..ஏதாவது ஒரு டாகுமென்ட் பொய் என்று தெரிந்துவிட்டால் ஜென்மத்துக்கும் ப்ளாக் மார்க் இருக்கும். நிகின்கிட்ட கூட பெயர் குழப்பத்துக்கு எது கேட்டாலும் உண்மைய சொல்லு இல்லாட்டி தெரியலன்னு சொல்லு..ஆனால் பொய்யா எதுவும் சொல்லாதே..வாக்கும் கொடுக்காதே என்றேன்..

பொய் எந்தளவுக்கு வாழ்க்கையை பாதிக்கும் என்பது விசா வேளையில் தெரியும். நிகின் எழுந்து சென்றான்..அம்மா வராதே..இங்கயே அம்மா வராங்க அங்கயும் கூட வருவாங்களா என்று கேக்கக்கூடும்..எனவே அங்கயே உக்கார்ந்துக்கோ என்று சொல்ல வேடிக்கை பார்த்தேன்..மிக எளிய கேள்விகள்..எப்படி படிப்ப அது போலதான்..என்ன பண்ண போறே..இந்தியா வருவியா? என்று..

விசா கொடுப்பவர்களின் முக்கிய நோக்கம் முக்கால்வாசியை ரிஜக்ட் செய்துவிட்டு மிக திறமையானவர்களை அவர்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதுதான்.  ஆனால் பெரும்பாலும்  செட்டில் ஆவதை விரும்ப மாட்டார்கள்..அதனால் என்ன நோக்கமாக இருந்தாலும் இந்தியா திரும்பி வருவேன் என்பதை ஓங்கி சொல்ல வேண்டும்.. பிறகு இன்னொரு மாணவர் வீட்டில் இருந்தாலும் பிரச்சனை.. நிறைய நுணுக்கமான விஷயங்கள்..கொஞ்சம் வசதியாக இல்லாவிட்டாலும் ரிஜக்ட் செய்ய வாய்ப்பு அதிகம்..இங்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை என்ற காரணத்துக்காக ரிஜக்ட் செய்வார்கள்..முக்கியமாக மாணவர்கள் சின்ன காலேஜ்ல் அட்மிஷன் கிடைத்தால் குடைச்சல் அதிகம்..நிஜமாகவே படிக்க போகிறார்களா இல்லை தப்பித்து வேலைக்கு போய் சம்பாதிக்க போய்விடுவார்களா என்று...(அப்படி வேலை செய்பவர்களின்  நிலைமையையும் பார்த்தேன்..எழுதுகிறேன்) எதுவும் பேச வாய்ப்பு இல்லை..இல்லை என்றால் இல்லைத்தான்..திரும்ப பணம் கட்டி அப்ளை செய்யலாம்..ஆனால் லட்சக்கணக்காக அப்ளை செய்பவர்கள் அனைவரையும் அனுப்ப முடியாது..ஏற்கனவே சட்டப்படி இல்லாமல் குடியேறுபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை..

எனக்கு தெரிந்து வயதான பெற்றோர்களை கூட ரிஜக்ட் செய்கிறார்கள்..சரியாக உரையாட தெரிந்து இருக்க வேண்டியது மிக அவசியம்.நேர்த்தியான தோற்றம், தன்னம்பிக்கையான பதில்கள், வில்லங்கம் இல்லாத சர்டிபிகேட்கள், உண்மை இவை இருக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து வீட்டு வேலை செய்ய வேலைக்காரார்களை பெற்றோர் போல, சொந்தம் போல பொய் டாகுமென்ட்ஸ் தயாரித்து அனுப்புவதல்லாம் நடந்து இருக்கிறது..மாணவர்களாக, டூரிஸ்ட் களாக போய் தப்பித்து வேலை செய்ய போய்விடுவது உண்டு..
 எப்படியாவது போனால் போதும்..பிழைத்து விடலாம்.என்ற நம்பிக்கை..Illegal immigrants  அதாவது சட்டப்படி இல்லாமல் குடியேறுபவர்கள்  அத்தனை கண்காணிப்பு உள்ள நாட்டில் தப்பிக்க முடியுமா? நடமாட முடியுமா? அவர்களின் கதை கேட்டேன்..அனுபவம் தொடர்களில் ..


பையன் விசா கிடைத்துவிட்டது அம்மா என்றான்..நம்ப முடியவில்லை..பெங்களூருக்கு போஸ்டல் ல வரும்..அப்ப தெரியும் எத்தனை வருஷம் என்று சொன்னான்..வரும் வரை பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தேன்..தன்னம்பிக்கையா , நல்ல ஆங்கிலத்தில் பொறுமையா பதில் சொன்னேன்..என்னை வாழ்த்திவிட்டு விசா வரும் என்றார்கள் என்றான்..அந்த நொடி ஈன்ற பொழுதாக இருந்தாலும் வெளியே வந்து விக்கி, விக்கி அழ ஆரம்பித்து விட்டேன்,,அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை..விசா இல்லாவிட்டால் இன்னும் நாலு வருஷம் நம்மோடு இருப்பானே என்று ஒரு மனம் இருந்து இருக்கு..எல்லா டென்ஷனும் போய் பிரியப்போகிறான் என்ற துக்கம் வந்துவிட்டது..பெற்றோராக கூடை விட்டு பறக்கும் குழந்தையை அனுப்பி வைப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை..முதல் தீபாவளி கூட கொண்டாடி ஆகி விட்டது..குழந்தையை தூரத்தில் அனுப்பிவிட்டு..அவனுக்கு அது புரியவில்லை சந்தோஷமாக எல்லாருக்கும் போன் செய்துக்கொண்டு இருந்தான்..சரி நல்ல விஷயமாக செல்கிறான் என்று கண்ணை துடைத்துக்கொண்டு மனதை தேற்றி..நெருக்கமானவர்களுக்கு போன் செய்ய ஆரம்பித்தேன்..

விசா கையில் வந்தவுடன் எனக்கு அப்ளை செய்யவேண்டும்..நடுவில் மிகப்பெரிய பிரச்சனை..டிக்கட் கேன்சல் செய்யும் அளவுக்கு போய்விட்டது..அடுத்த பதிவில்..

4 comments:

Rathnavel Natarajan said...

அமெரிக்க பயணம்..கானல் நீரா, பாலைவன சோலையா...பாகம் நாலு..
விசா பார்ட் 2 =
Kirthika Tharan = எனக்கு தெரிந்து வீட்டு வேலை செய்ய வேலைக்காரார்களை பெற்றோர் போல, சொந்தம் போல பொய் டாகுமென்ட்ஸ் தயாரித்து அனுப்புவதல்லாம் நடந்து இருக்கிறது..மாணவர்களாக, டூரிஸ்ட் களாக போய் தப்பித்து வேலை செய்ய போய்விடுவது உண்டு.. எப்படியாவது போனால் போதும்..பிழைத்து விடலாம்.என்ற நம்பிக்கை..Illegal immigrants = நமது M.P.க்களே கூட்டிச் சென்றார்களே. = அருமையான, அனைவரும் தெரிந்த் கொள்ள வேண்டிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் அருமை மகள் Kirthika Tharan.

Avargal Unmaigal said...

விசா என்பது இங்கு வர அனுமதியே..இப்படி கஷ்டப் பட்டு விசா வாங்கி அமெரிக்கா வந்து இறங்கினாலும் விமான நிலையத்திலே குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பபடும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த குடியுரிமை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டால்தான் அமெரிக்க காற்றை சுவாசிக்க முடியும்.

அடிக்கடி வரும் வயதான பெற்றோர்கள் ஏர்போட்டில் வைத்தே திருப்பி அனுப்பபடும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன

Santhose said...

It is hard to get USA visa. But once you entered into this country you could extend the student visa as long as you studying here. There is no restriction.

Anonymous said...

சுப்பரா எழுதறீங்க...! தொடருங்கள்....