பாஸ்டனில் இமிக்ரேஷன்
ஆபிசர் "உன் கணவர் ரொம்ப கொடுத்து வைத்தவர்..லக்கி" என்று கொஞ்சம் அழுத்தமாக சிரித்துக்கொண்டு கூற..மிக்க
நன்றி என்று புன்னகையோடு நகர்ந்துவிட்டேன்..சில வார்த்தைகள் டீன் ஏஜ் பசங்களுக்கு
அதுவும் அம்மாவை பார்த்து சொல்வது என்ன உணர்வில் பதியும் என்று தெரியவில்லை...அவன்
ஏன் உன்னை பார்த்து அப்படி பேசறான் என்று கேட்டது மட்டுமல்லாமல் அவர் பேசிய
வார்த்தைகள் பல இடங்களில் பயணம் முழுக்க காமடிகளாக, குட்டி பாராட்டாக!!!!
மாற்றப்பட்டு வந்துக்கொண்டே இருந்தது..ஊருக்கும் போன் பண்ணி.நீ ரொம்ப லக்கியாம்
என்று சொல்லப்பட்டது .. ஆஹ மொத்தம் அது
என்ன அர்த்தத்தில் உதிரப்பட்டது..எந்த அர்த்தத்தில்
உணர்ந்துக்கொள்ளப்பட்டது..என்றே புரியவில்லை..மரங்களில் இருந்து உலர்ந்து பறக்கும்
இலைக்கு தெரியாது..எங்கு, எதற்கு உரமாக போகிறோம் எங்கு , எதுவாக முளைக்க் போகிறோம்
என்று..சில சொற்களும்
அப்படிதான்..விளையாட்டாக இருப்பினும்.. பயணம் முடியும் வரை வந்தது.. லக்கிதான்..
பாஸ்டனில் இரண்டு மணி நேரம் முன்னாடியே தோழி மோகனா அவர்கள் குடும்பமும், ஊர் தோழியின் மகன் ஹரேஷ் ம்..வந்து இருந்தனர்..அவர்கள் அந்த சமயத்தில் செய்து இருக்கும் உதவிகள் மிகப்பெரிது.. எங்கு தங்குவது..என்ன செய்வது என்று எந்த திட்டமும் இல்லை..போய் பார்த்து கொள்ளலாம்..இல்லாவிடில் காலேஜ் பக்கத்தில் புக் செய்துக்கொள்ளலாம் என்று எளிதாக நினைத்து இருந்தேன்..ஒரு நாட்டின் அமைப்பை பற்றி தெரியாமல் இப்படி எல்லாம் போவது என்னை போன்ற துணிச்சல்காரர்களால்தான் (அசட்டு) முடியும்..அதுவும் இல்லாமல் நட்புகளின் நம்பிக்கைகள் வேறு.. வாங்க பார்த்துக்கலாம் ..எத்தனை அழகான அன்பு மனிதம்..
ஏற்கனவே அந்த பகுதியில் இருந்த முகநூல் நட்பு பாருகுமார் தங்கை தமிழிடம் நேரில், போனில் பேசி இருந்தேன்..அதை தவிர என் போஸ்ட் பார்த்துவிட்டு பாஸ்டனில் இருந்து ரோகிணியும் மெசேஜ் செய்து இருந்தார்.. நியுஜெர்சியில் வசிக்கும் தோழி பெண், உறவுகள், நட்புகளும் பேசி இருந்தனர்..வாழ்க்கையில் சேர்த்து வைத்த பொக்கிஷங்களில் நட்பு பொக்கிஷம் எனக்கு மிக முக்கியமானது...எழுதும் வேளையில் மனம் முழுக்க அன்பும், நன்றியும் தளும்புகிறது..
யாரும் சாப்பிடாமல் காத்து இருந்தனர்..போனவுடன் நேராக ஹோட்டல் அழைத்து சென்றனர்..பெயர் தோசா பேக்டரி.டவுன் டவுனில் (down town) இருந்த இந்திய ஹோட்டல்...உள்ளே நுழைந்தவுடன்..இந்திய சூப்பர் மார்கட்டில் கிடைக்கும் அத்தனை பொருள்களும் இருந்தது..பொரி முதல் MTR வரை..எல்லாம் கிடைக்கும் என்று சொல்லி இருந்தாலும்..நேரில் இந்திய கடையை பார்க்கும் வரை மிகப்பெரிய கவலை..
முக்கியமாக பானி பூரிகள்..அழகாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பூரித்து போய் விட்டேன்..எங்கு போனாலும் இந்த பானி பூரி புத்தி போவதே இல்லை.. நார்த் இந்தியன் தாலி, தோசை எல்லாம் மிக அருமையாக இருந்தது..காலேஜ் பக்கத்தில் என்பதால் மனம் நிம்மதியாக உணர்ந்துது..பணத்தை விட சில உணவு பழக்கங்கள் நமக்கு முக்கியமாக இருக்கின்றன..பையன் ஏதாவது சாப்பிடனும் போல இருந்தால் எங்கு போவான் என்ற யோசனைத்தான்..ஒரு அம்மாவாக அரித்துக்கொண்டே இருந்தது..அவனுக்கு எல்லா வகை உணவு பழக்கமும் உண்டு என்றாலும்..இந்திய உணவு முக்கியமாக வெஜிடேரியன் உணவு கிடைக்கவேண்டுமேன்று எனக்கு ..
வீட்டில் யாரும் வெஜிடேரியன் பழக்கம்தான் வேணும் என்று கட்டுப்படுத்த போவது இல்லை..இருப்பினும் எதற்கு மாற வேண்டும் என்ற எண்ணம்தான்.. பசங்களுக்கு சொல்வேன்...நாற்பது வயதுக்கு மேல் நிறைய மனிதர்கள் நான் வெஜ் லிருந்து வெஜ் க்கு மாற ஆசைப்படுகிறார்கள்..ஆனால் பழக்கத்தால் விட முடிவது இல்லை..அதனால் முடிந்தவரை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று..ஆனால் என்றைக்கும் அவர்கள் முடிவில் தலை இடுவதில்லை என்ற கொள்கை உண்டு..ஆனால் அந்த முடிவு எடுத்தால் ஜீரணிப்பது கடினம்தான்.. ஒஜு கொஞ்ச நாள் முன்பு சிக்கன் வேணும், சாப்ட்டு பார்க்கணும் என்று அடம்பிடிப்பான்..இப்பல்லாம் நான் உயிர்களை கொல்ல மாட்டேன் என்று வீர வசனம்...தவறோ சரியோ..நம் வழக்கங்களை மாற்றிக்கொள்ள அத்தனை எளிதில் மனம் இடம் கொடுப்பதில்லை..
அங்கிருந்து நேராக இரு கார்களில் கிளம்பினோம்..பாஸ்டன் ஹார்பர் என்ற இடத்துக்கு..கோட்டையும், புறாக்களும், புல்வெளியும் இடமே மிக அழகாக..நிறைய சைக்கிள் மனிதர்கள்.. ஆங்காங்கு இந்தியர்கள்..அத்தனை இந்திய முகங்களை எதிர்பார்க்கவில்லை.. அமெரிக்கா என்றால் பொது இடங்களில் முத்தமிட்டுக்கொண்டும், நம் கண்ணுக்கு கொஞ்சம் மோசம் என்று சொல்லக்கூடிய உடைகளையே அணிந்து இருப்பார்கள் என்று நமக்கு போதிக்கப்பட்டு இருக்கும் விஷயம்..எனவே நிறைய ஹாலிவுட் முத்த காட்சிகளை , உடைகளை எதிர்பார்த்துக்கொண்டு போனேன்..ஆனால் பூங்காவில் அனைவரும் குடும்பத்துடன் மிக சந்தோஷமாக வந்து இருந்தனர்..இந்தியாவில் பார்க்கும் அளவுக்கு கூட ஜோடிபுறாக்கள் காணவில்லை.. கொஞ்சம், கொஞ்சமாக அமெரிக்க பிம்பம் உடைய ஆரம்பித்தது..நிறைய பிம்பங்கள் நல்லதும், கெட்டதும் உடையப்போவதை பற்றி அறியவில்லை அப்பொழுது..அந்த காட்சிகள் பார்த்தேனா இல்லையா ...இல்லை அத்தனை செலவு செய்து போய்விட்டு அந்த பக்கம் உள்ள அமெரிக்காவை தரிசிக்காம்லே வந்தேனா? சொல்கிறேன்.. பாஸ்டன் ஹார்பருக்கும், காந்திஜிக்கும் உள்ள தொடர்பையும் சேர்த்தும்..அடுத்த பதிவில்..

10 comments:
உங்க கூடவே பயணம் செய்தது போல ஒரு உணர்வு கிருத்தி
//ஆபிசர் "உன் கணவர் ரொம்ப கொடுத்து வைத்தவர்..லக்கி" என்று கொஞ்சம் அழுத்தமாக சிரித்துக்கொண்டு கூற.///
மனைவி பக்கதில் இல்லையென்றால் கணவர் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று இங்கு நாங்கள் பேசுவதுண்டு அதைதான் அவர் லக்கி என்று சொல்லி இருக்கிறார் ஆனால் நீங்கள் வேறுமாதிரியாக எடுத்து கொண்டீர்கள் போல இருக்கு...
///நிறைய ஹாலிவுட் முத்த காட்சிகளை , உடைகளை எதிர்பார்த்துக்கொண்டு போனேன்..ஆனால் பூங்காவில் அனைவரும் குடும்பத்துடன் மிக சந்தோஷமாக வந்து இருந்தனர்..இந்தியாவில் பார்க்கும் அளவுக்கு கூட ஜோடிபுறாக்கள் காணவில்லை..///
அய்ய நீங்க தப்பான இடத்தில் போய் ஹாலிவுட் முத்த காட்சிகளை எதிர்பார்த்து இருக்கீங்க...இதை பார்க்கில் பார்க்க கூடாது கல்லூரியிலும் பார்களிலும்தான் பார்க்க வேண்டும்
3727
நீங்கள் இங்கு வந்ததை உங்களின் பேஸ்புக் ஸ்டேடஸுக்கள் மூலம் அறிந்தேன்.. உங்களை கூப்பிடலாமா என்று நினைத்தேன் நமக்குள் அவ்வளவு அறிமுகம் இல்லாததால் அது நன்றாக இருக்காது என்று நினைத்து இருந்துவிட்டேன் அதுமட்டுமல்லாமல் நான் கூப்பிட்டு நீங்க வந்துட்டா அதுக்கு அப்புறம் என்மனைவிகிட்ட யாரு பூரிக்கட்டையால் அடிவாங்குவது. சுமாராக இருக்கும் பெண்ணை கூப்பிட்டாலே அடிவாங்கும் நான் அழகான உங்களை கூப்பிட்டால் கைகால் போய்விடும் என்று பயம் வந்துவிட்டது ஹும் கல்யாணம் ஆனவர்கள் எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது பாத்தீர்களா???
சிறப்பாகச்செல்கிறது தொடர்! இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்! ஒருவித எதிர்பார்ப்போடு செல்கையில் எதிர்பார்ப்பு நிறைவேறாவிடில் கொஞ்சம் ஏமாற்றம் வருவது சகஜமே!
அமெரிக்க பயணம்-எட்டு.. = ஆங்காங்கு இந்தியர்கள்..அத்தனை இந்திய முகங்களை எதிர்பார்க்கவில்லை.. அமெரிக்கா என்றால் பொது இடங்களில் முத்தமிட்டுக்கொண்டும், நம் கண்ணுக்கு கொஞ்சம் மோசம் என்று சொல்லக்கூடிய உடைகளையே அணிந்து இருப்பார்கள் என்று நமக்கு போதிக்கப்பட்டு இருக்கும் விஷயம்..எனவே நிறைய ஹாலிவுட் முத்த காட்சிகளை , உடைகளை எதிர்பார்த்துக்கொண்டு போனேன்..ஆனால் பூங்காவில் அனைவரும் குடும்பத்துடன் மிக சந்தோஷமாக வந்து இருந்தனர்..இந்தியாவில் பார்க்கும் அளவுக்கு கூட ஜோடிபுறாக்கள் காணவில்லை.. கொஞ்சம், கொஞ்சமாக அமெரிக்க பிம்பம் உடைய ஆரம்பித்தது..= Kirthika Tharan = அருமையான பயண தொடர் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் Kirthika Tharan.
Are you at boston or nearabouts?
We came to Andover a year ago. Our tour to Boston was quite enjoyable. Did you ride that bus and boat ?
Wonderful.
subbu thatha.
www.subbuthatha.blogspot.com
உங்களுடைய இந்த அனைத்து பதிவுகளையும் எடுத்து அச்சிட்டு என் மனைவியிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கிறேன். அவர் வரும் மார்ச்சில் அங்கு செல்ல இருக்கிறார். மிக நல்ல பதிவு. நன்றி. உசிலம்பட்டி ஆண்டிபட்டி நெல்மணிகள் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அந்த ஊர்களுக்குச் சென்றிருக்கிறீர்களா? அல்லது கேள்வி ஞானமா?
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Desktop Showrooms in Chennai
Printer prices in chennai
Buy Tablets online chennai
Laptop stores in chennai
Projectors price in Chennai
Buy pendrive online India
External hard disk price in Chennai
Laptop accessories online chennai
Best laptops in Chennai
Tablet showroom in Chennai
Inverters dealers in Chennai
Server dealers in Chennai
Post a Comment