புத்தக வெளியீட்டு விழா..
புத்தகம்:காகித படகில் சாகச பயணம்..
ஆசிரியர்:பெ.கருணாகரன், புதிய தலைமுறை இதழ் ஆசிரியர்.
இடம்: முகநூல்..
தலைமை விருந்தினர்கள்..நாம் அனைவரும்.
நேரம்: இதை வாசிக்கும் நேரம்...வெளியிடும் நேரம்: புதன் பத்து மணி.
முதலில் நான் வாசகி..ஒரு புத்தகத்தை எப்படி வேணாலும் அணுகுவேன்..ஒரு பக்கம் எடுத்து படிப்பேன்..உள்ளுக்குள் இழுத்தால் அந்த புத்தகம் பாஸ்...சில புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து வாசிப்பது வழக்கம். அல்வாவை லபக் என்று விழுங்காமல் டயட்ஐயும்,ரசனையையும் முன்னிட்டு மணிக்கணக்கில் சாப்பிடும் வேளையில் அல்வாவின் உண்மையான ருசி தென்படும்..அதில் என்ன போட்டு இருப்பார்கள்..திருநெல்வேலி தண்ணீருக்கு உள்ள ருசியா..இல்லை விறகடுப்பா..இல்லை கைவண்ணமா..இத்தனை நெய் உடம்புக்கு ஆகுமா.. என்று அதிகம் யோசிக்க வைக்கும்...
இரண்டு விதமாகவும் ஒரு புத்தகத்தை முதன் முறையாக படித்தேன்..வேகமாக படித்துவிட்டு திரும்ப ஆற அமர அந்த அந்த நேரத்தில் அவரின் மன நிலை, சூழல் எல்லாம் யோசித்து படித்தேன் எப்படி படித்தாலும் சுவையாகவே இருக்கும் எழுத்து. அற்புதமான எழுத்து சமையல்காரர் பெ.கருணாகரன்.
முகநூலில் அறிமுகமான நண்பர்..அவரின் வேறு தளங்கள் பற்றி அதிகம் அறியவில்லை. எப்பவும் அறிவு ஜீவி களமாக இல்லாமல் நகைச்சுவை, மொக்கைஸ் , நல்ல அரட்டை..அப்ப அப்ப கவிதை, சில சமயம் வாசிப்பு என்று ரசனையுடன், பொழுது போக்கு தளமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து..அதே தளத்தில் அதே கருத்தில் இவர் பக்கமும் இருந்தது மிக பிடித்து விட்டது. இந்த புத்தகத்தில் வந்த அத்தனை பதிவுகளையும் ஒன்று விடாமல் வாசித்து இருக்கிறேன். அத்தியாயம் ஒன்று எழுதியவுடன் நோடிபிகேஷனில் வைத்துக்கொண்டு தவறாமல் படித்து இருக்கிறேன்..ஆனால் புத்தக வாசிப்பு போல எலக்ட்ரானிக் வாசிப்பு மனதுக்கு மிக அருகில் வர முடியவில்லைதான்..ஒப்புக்கொ ள்கிறேன்.
தலைப்பு கேட்டு கேட்ட பதிவு கூட இன்றும் நினைவில் உள்ளது..நானும் அவசரமாக மனதில் தோன்றியதை எழுதி விட்டு வந்தேன்..போட்டிப்போட்டுக்க ொண்டு அவரவர் சொன்னார்கள்.அப்பொழுது தெரியவில்லை..இந்த தலைப்பு முக நூலையே அசைக்க போகிறது என்று..ஹையோ நாமும் ஒழுங்கா யோசிச்சு சொல்லி இருக்கலாமே என்று தோன்ற ஆரம்பிக்கிறது..அழகிய தலைப்பை முகநூல் முழுக்க காணும் வேளையில்..அழகிய புத்தகத்துக்கு மேலே காணும் நேரத்தில்..என்ன ஒரு அழகான தலைப்பு.. முகநூல் பாஷையில் சொல்வதென்றால், அலட்சியமாக அணுகியதால வந்த தட் வட போச்சே மொமென்ட்.. பட் செம தலைப்பு மொமென்ட் ம்..
ஒரு புத்தக மதிப்புரை என்பது புத்தகத்தை படிக்க தூண்ட வேண்டும் அல்லது உண்மையாக நல்லா இருக்கா, வாசிக்கும் அனுபவம் எப்படி என்று வாசகனுக்கு புரிய வைக்க வேண்டும் என்பது என் எண்ணம்..இந்த புத்தகம் வாசிப்பானுபவம் கொடுப்பது மட்டுமல்ல கூடவே அவரின் வாழ்கை பயணத்தை காட்டுவது மட்டுமல்லாமல் இதழியல் துறைகளில் உள்ள அந்த அந்த காலகட்டம், ஒரு தினசரிக்கும் வார இதழ் செய்திகளுக்கும் உள்ள வேறுபாடு, கட்டுரை, கதைகள் உருவாகும் விதங்கள் என்று போய்க்கொண்டே இருக்கிறது.
அதே சமயத்தில் ஒரு சாமானியனின் வாழ்வை பதிவு செய்து கொண்டே போகிறார்..நடுத்தர குடும்பத்தில் ஓரளவுக்கு மேலே வர வேண்டுமென்றால் அதில் உள்ள போராட்டங்கள் மலைக்க வைக்கிறது...என்னதான் பெண்ணியம் பேசினாலும் இந்தியாவில் ஆண்களுக்கு உள்ள பொருளாதார நிர்பபந்தங்கள் எழுத்துகளின் வழியே உணர முடிகிறது..ஒரு பெண்ணால் ஒரு வருடம் வேலையில்லாமல் வாழலாம்..தொழில் மாற்றிக்கொள்ளலாம்..சமூகம் எந்த நிர்பபந்தமும் அவள் மேல் திணிப்பது இல்லை..ஒரு ஆணால் பொருள் ஈட்டாமால் ஒரு நிமிடம் கூட உக்கார முடியாது இந்த சமூக கட்டமைப்பில்..அதை தாண்டி ஜெயிக்க போராடுவது மிக கடினம். அந்த வலிகளை வாழ்க்கை மூலம் பதிவு செய்த கணங்கள் மனதை அசைத்து பார்க்கிறது.. நடுத்தர வர்க்க மனிதர்களின் தினசரி அழுத்தங்கள் இந்த புத்தகத்தில் காலத்தை காட்டும் வரலாறாக பதியப்பட்டு இருக்கிறது.. இதை எந்த புத்தகத்திலும் கண்டது இல்லை. நம் எல்லாருக்குமான புத்தகமாக மனதுக்கு மிக நெருங்கி விடும் தருணம் அது.
அனைத்து பொருட்களும் போட்டு சமைத்த பக்குவமான பிரியாணியை பரிமாறி இருக்கிறார். அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருப்பதால் எளிதாக ஜீரணமும் ஆகும். ஆனால் சுவை நாக்கில் நின்றுகொண்டு இருக்கும்..அதே சமயத்தில் உணர்வுகளை கொட்டி சமைத்து இருப்பதால் நேராக வயிறுக்கு போகாமல் உணவு இதயத்தையும் அசைத்து விடுகிறது. முக்கியமாக குடும்ப காட்சிகளில்..கண்ணீர் துளிகள் இல்லாமல் கடக்க முடியவில்லை..
இந்த உரையை பக்காவாக பிளான் செஞ்சு அழகாக அவர் விகடன், குமுதம் கட்டுரைகளை மணிக்கணக்காக ரசனையுடன் எடிட் செய்வதை போல எடிட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்..ராக்கூத்து செய்தாவது உழைக்க வேண்டும் என்று மனதில்..ஆனால் தினசரிகளின் வழக்கம் போல டெட்லைன் நெருங்கி விட்டது..எனவே பெ.கருணாகரன் சார் அலுவலகத்தில் அச்சக அதிகாரி வந்து வாங்கி கொண்டு ஓடுவது மனதில் ஒப்பிட்டுக்கொண்டு (ஆஹா இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல..இது என் மைன்ட் வாய்ஸ்..நாமெல்லாம் பேஸ்புக் இனம்..இப்படிதான்) அவசர அவசரமாக டைப்பி அனுப்புகிறேன்..ஆனால் புத்தகத்தில் மெய்..இல்லை பொய் மறந்து போய் உண்மையாக தங்கி விட்டதால் வந்த அவசரம்.. அமேசான் காடுகளின் புத்தகத்தில் ஈரோடு கதிரின் மகள் விமர்சனம் புதுமையாக இருந்தது என்று குறிப்பிட்டு இருப்பார்..அடுத்த புத்தகத்தில் நம் பெயரை குறிப்பிடும் அளவுக்கு ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்றால்..மண்டைக்கு பல்பு எரியாதவர்கள் சங்கம் என்னை வா,வா என்று அழைத்துக்கொண்டு சென்று விட்டது.
பொய் கலக்காமல் ஒரு வாழ்கையை, அதுவும் பல இதழ்களில் பயணித்த அனுபவத்தை மனதை தொடும் வகையில் அந்த காலகட்டத்தை கண் முன்னால் கொண்டு வந்தும் , கைப்பிடித்து அழைத்து சென்றும் , மனதை தொட செய்தும் வந்த எழுத்து. படித்து அனுபவிக்க பரிந்துரை செய்கிறேன்.. பேருண்மையை தரிசித்த அனுபவம். நன்றி
புத்தகம்:காகித படகில் சாகச பயணம்..
ஆசிரியர்:பெ.கருணாகரன், புதிய தலைமுறை இதழ் ஆசிரியர்.
இடம்: முகநூல்..
தலைமை விருந்தினர்கள்..நாம் அனைவரும்.
நேரம்: இதை வாசிக்கும் நேரம்...வெளியிடும் நேரம்: புதன் பத்து மணி.
முதலில் நான் வாசகி..ஒரு புத்தகத்தை எப்படி வேணாலும் அணுகுவேன்..ஒரு பக்கம் எடுத்து படிப்பேன்..உள்ளுக்குள் இழுத்தால் அந்த புத்தகம் பாஸ்...சில புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து வாசிப்பது வழக்கம். அல்வாவை லபக் என்று விழுங்காமல் டயட்ஐயும்,ரசனையையும் முன்னிட்டு மணிக்கணக்கில் சாப்பிடும் வேளையில் அல்வாவின் உண்மையான ருசி தென்படும்..அதில் என்ன போட்டு இருப்பார்கள்..திருநெல்வேலி
இரண்டு விதமாகவும் ஒரு புத்தகத்தை முதன் முறையாக படித்தேன்..வேகமாக படித்துவிட்டு திரும்ப ஆற அமர அந்த அந்த நேரத்தில் அவரின் மன நிலை, சூழல் எல்லாம் யோசித்து படித்தேன் எப்படி படித்தாலும் சுவையாகவே இருக்கும் எழுத்து. அற்புதமான எழுத்து சமையல்காரர் பெ.கருணாகரன்.
முகநூலில் அறிமுகமான நண்பர்..அவரின் வேறு தளங்கள் பற்றி அதிகம் அறியவில்லை. எப்பவும் அறிவு ஜீவி களமாக இல்லாமல் நகைச்சுவை, மொக்கைஸ் , நல்ல அரட்டை..அப்ப அப்ப கவிதை, சில சமயம் வாசிப்பு என்று ரசனையுடன், பொழுது போக்கு தளமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து..அதே தளத்தில் அதே கருத்தில் இவர் பக்கமும் இருந்தது மிக பிடித்து விட்டது. இந்த புத்தகத்தில் வந்த அத்தனை பதிவுகளையும் ஒன்று விடாமல் வாசித்து இருக்கிறேன். அத்தியாயம் ஒன்று எழுதியவுடன் நோடிபிகேஷனில் வைத்துக்கொண்டு தவறாமல் படித்து இருக்கிறேன்..ஆனால் புத்தக வாசிப்பு போல எலக்ட்ரானிக் வாசிப்பு மனதுக்கு மிக அருகில் வர முடியவில்லைதான்..ஒப்புக்கொ
தலைப்பு கேட்டு கேட்ட பதிவு கூட இன்றும் நினைவில் உள்ளது..நானும் அவசரமாக மனதில் தோன்றியதை எழுதி விட்டு வந்தேன்..போட்டிப்போட்டுக்க
ஒரு புத்தக மதிப்புரை என்பது புத்தகத்தை படிக்க தூண்ட வேண்டும் அல்லது உண்மையாக நல்லா இருக்கா, வாசிக்கும் அனுபவம் எப்படி என்று வாசகனுக்கு புரிய வைக்க வேண்டும் என்பது என் எண்ணம்..இந்த புத்தகம் வாசிப்பானுபவம் கொடுப்பது மட்டுமல்ல கூடவே அவரின் வாழ்கை பயணத்தை காட்டுவது மட்டுமல்லாமல் இதழியல் துறைகளில் உள்ள அந்த அந்த காலகட்டம், ஒரு தினசரிக்கும் வார இதழ் செய்திகளுக்கும் உள்ள வேறுபாடு, கட்டுரை, கதைகள் உருவாகும் விதங்கள் என்று போய்க்கொண்டே இருக்கிறது.
அதே சமயத்தில் ஒரு சாமானியனின் வாழ்வை பதிவு செய்து கொண்டே போகிறார்..நடுத்தர குடும்பத்தில் ஓரளவுக்கு மேலே வர வேண்டுமென்றால் அதில் உள்ள போராட்டங்கள் மலைக்க வைக்கிறது...என்னதான் பெண்ணியம் பேசினாலும் இந்தியாவில் ஆண்களுக்கு உள்ள பொருளாதார நிர்பபந்தங்கள் எழுத்துகளின் வழியே உணர முடிகிறது..ஒரு பெண்ணால் ஒரு வருடம் வேலையில்லாமல் வாழலாம்..தொழில் மாற்றிக்கொள்ளலாம்..சமூகம் எந்த நிர்பபந்தமும் அவள் மேல் திணிப்பது இல்லை..ஒரு ஆணால் பொருள் ஈட்டாமால் ஒரு நிமிடம் கூட உக்கார முடியாது இந்த சமூக கட்டமைப்பில்..அதை தாண்டி ஜெயிக்க போராடுவது மிக கடினம். அந்த வலிகளை வாழ்க்கை மூலம் பதிவு செய்த கணங்கள் மனதை அசைத்து பார்க்கிறது.. நடுத்தர வர்க்க மனிதர்களின் தினசரி அழுத்தங்கள் இந்த புத்தகத்தில் காலத்தை காட்டும் வரலாறாக பதியப்பட்டு இருக்கிறது.. இதை எந்த புத்தகத்திலும் கண்டது இல்லை. நம் எல்லாருக்குமான புத்தகமாக மனதுக்கு மிக நெருங்கி விடும் தருணம் அது.
அனைத்து பொருட்களும் போட்டு சமைத்த பக்குவமான பிரியாணியை பரிமாறி இருக்கிறார். அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருப்பதால் எளிதாக ஜீரணமும் ஆகும். ஆனால் சுவை நாக்கில் நின்றுகொண்டு இருக்கும்..அதே சமயத்தில் உணர்வுகளை கொட்டி சமைத்து இருப்பதால் நேராக வயிறுக்கு போகாமல் உணவு இதயத்தையும் அசைத்து விடுகிறது. முக்கியமாக குடும்ப காட்சிகளில்..கண்ணீர் துளிகள் இல்லாமல் கடக்க முடியவில்லை..
இந்த உரையை பக்காவாக பிளான் செஞ்சு அழகாக அவர் விகடன், குமுதம் கட்டுரைகளை மணிக்கணக்காக ரசனையுடன் எடிட் செய்வதை போல எடிட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்..ராக்கூத்து செய்தாவது உழைக்க வேண்டும் என்று மனதில்..ஆனால் தினசரிகளின் வழக்கம் போல டெட்லைன் நெருங்கி விட்டது..எனவே பெ.கருணாகரன் சார் அலுவலகத்தில் அச்சக அதிகாரி வந்து வாங்கி கொண்டு ஓடுவது மனதில் ஒப்பிட்டுக்கொண்டு (ஆஹா இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல..இது என் மைன்ட் வாய்ஸ்..நாமெல்லாம் பேஸ்புக் இனம்..இப்படிதான்) அவசர அவசரமாக டைப்பி அனுப்புகிறேன்..ஆனால் புத்தகத்தில் மெய்..இல்லை பொய் மறந்து போய் உண்மையாக தங்கி விட்டதால் வந்த அவசரம்.. அமேசான் காடுகளின் புத்தகத்தில் ஈரோடு கதிரின் மகள் விமர்சனம் புதுமையாக இருந்தது என்று குறிப்பிட்டு இருப்பார்..அடுத்த புத்தகத்தில் நம் பெயரை குறிப்பிடும் அளவுக்கு ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்றால்..மண்டைக்கு பல்பு எரியாதவர்கள் சங்கம் என்னை வா,வா என்று அழைத்துக்கொண்டு சென்று விட்டது.
பொய் கலக்காமல் ஒரு வாழ்கையை, அதுவும் பல இதழ்களில் பயணித்த அனுபவத்தை மனதை தொடும் வகையில் அந்த காலகட்டத்தை கண் முன்னால் கொண்டு வந்தும் , கைப்பிடித்து அழைத்து சென்றும் , மனதை தொட செய்தும் வந்த எழுத்து. படித்து அனுபவிக்க பரிந்துரை செய்கிறேன்.. பேருண்மையை தரிசித்த அனுபவம். நன்றி
3 comments:
ஒரு பெண்ணால் ஒரு வருடம் வேலையில்லாமல் வாழலாம்..தொழில் மாற்றிக்கொள்ளலாம்..சமூகம் எந்த நிர்பபந்தமும் அவள் மேல் திணிப்பது இல்லை..ஒரு ஆணால் பொருள் ஈட்டாமால் ஒரு நிமிடம் கூட உக்கார முடியாது இந்த சமூக கட்டமைப்பில்..அதை தாண்டி ஜெயிக்க போராடுவது மிக கடினம் = அருமை. வாழ்த்துகள்.
வாழ்க்கை சூழல் என் எழுத்தை தடுத்தது, எழுதியதை பதிய என் வேலை தடுகிறது . ஆணால் பொருள் ஈட்டாமால் ஒரு நிமிடம் கூட உக்கார முடியாது இந்த சமூக கட்டமைப்பில்..அதை தாண்டி ஜெயிக்க போராடுவது மிக கடினம்....... நிதர்சனத்தை மனக்கண்முன் நிறுத்தும் வார்த்தைகள்
என்னை அறியாமல்
நீர் கசிவு ஏற்பட்ட விழித்தொட்டியாய் ...
வணக்கம்
வசனமாக்கிய வரிகளை படிக்கையில்
ஓடோடி ஓடோடி புத்தகத்தை படிக்க சொல்லுகிறது..சிறப்பாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment