வெளிநாடு..மேற்கத்திய கலாசாரம்..என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.கிட்டத்தட்ட ஒரு மாதம் இருந்தேன் அமெரிக்காவில் நிறைய முத்த காட்சிகள் பார்ப்போம் கணவன் மனைவியோ, ஜோடிகளோ அவ்வபொழுது முத்தமிட்டுக்கொண்டு இருப்பார்கள்..மிக சகஜம் என்று மனதை தயார் செய்துகொண்டு சென்று இருந்தேன்..
நான் கொஞ்சம் அதிகமாக சுற்றி இருக்கிறேன் என்று தோன்றுகிறது..கிட்டத்தட்ட ஏழு மாநிலங்கள்..போகும் ,வரும் வழிகளை கணக்கில் எடுத்தால் பத்து மாநிலங்களை கடந்து இருக்கிறேன்..ஆயிரகணக்கான மைல்கள் பயணம்..
சுற்றுலா இடங்கள், பார்க், பஸ், மெட்ரோ, கார் என்று எல்லாவிதமான பயணத்தையும் மேற்கொண்டேன்..
கிட்டத்தட்ட எண்பது நாட்டு பெற்றோர்களை ஒரே இடத்தில் சந்ததிக்க வாய்ப்பு....அவர்களுடன் டீ பார்ட்டியில் கலந்துக்கொண்டேன்..அதில் பத்து நாடுகளின் அம்மாக்கள் ஒன்றாகவே மூன்று நாட்கள் சுற்றினோம்..கேக்கவா வேண்டும்..நாள் முழுக்க அவரவர் நாட்டு கதைகள்..
கல்லூரி மூலை முடுக்கு எங்கும் சுற்றினேன்..நம்ப முடியாது..நம் ஊர் பள்ளிகள் வாசலில் கூட சில ஜோடிகள் பார்ப்பேன்..ஆனால் கிட்டதட்ட நான்கு, ஐந்து கல்லூரிகள் சுற்றி இருந்தன..அங்கு அதிகம் நடந்து போயும் ஒரு ஜோடி கூட பார்க்கவில்லை..பார்த்த ஆணும, பெண்ணும் கூட ஜோடிகளாக காட்சி தரவில்லை..
மிக சகஜமாக இருக்கிறார்கள்..பேசுகிறார்கள்..ஹாஸ்டல் கூட ஆணுக்கு தனி , பெண்ணுக்கு தனி இல்லை..ஆனால் பயம் இல்லை..ஒரு ஆணை பார்த்து இரவில் கடந்து போவது மிக சகஜம்..ஒருவரை ஒருவர் ஏறிட்டு கூட பார்ப்பது இல்லை..
வெயில் அபூர்வம் என்பதால் வைட்டமின் -டி உடம்புக்கு தேவை..அதனால் கல்லூரி வளாகத்தில் கூட சன் பாத் எடுத்துக்கொண்டுருக்கும் அழகான மாணவிகளை பார்த்தேன்..என்னை தவிர ஒருவரும் அவர்களை ஏறிட்டு கூட பார்க்கவில்லை..
ஒருவரின் கை நீட்டும் தூரத்துக்கு மேல் யாரும் அருகில் வருவது இல்லை..உச்சபட்ச ப்ரேவேசி என்ன என்பதை அங்குதான் காணலாம். தேவை இல்லாமல் எந்த ஆணியையும் பிடுங்குவது இல்லை..அதே சமயம் தங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது இல்லை..
போன முறை பெற்றோர் மீட்டிங் நடந்த பொழுது என்ன நிகழ்ச்சி என்று கேட்டேன்..அண்டர்வேர் ரன் நடப்பதாக சொன்னான்..அதுவும் அங்கு பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை..சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது..யாரும் யாரையும் இது தவறு, சரி என்று கலாச்சார விஷயங்களுக்கு சுட்டிக்காட்டுவதில்லை..
அமெரிக்காவிலும் கிராமங்கள் உண்டு..கடலோர நகரங்களில் எல்லாம் ஏற்றுகொள்ளபடும்..ஆனால் உள்நாடுகளில் கதை வேறு..மிக உச்சபட்ச கன்செர்வேடிவ் குடும்பங்கள் உண்டு..அவர்கள் ஸ்லீவ் லெஸ் அணிய மாட்டார்கள்..ஆண்களும் உடை கட்டுபாட்டை மேற்கொள்வார்கள்..அவர்களை குறிப்பிட்ட உடைகளில் மட்டுமே காண முடியும்..
மோகனா அவர்களுடன் ஒரு வாரம் எங்கு பார்த்தாலும் அதே கேள்வியைத்தான் கேட்டேன்..நான்கு கல்லூரிகள், சில நிகழ்ச்சிகள் , மன்ஹாட்டன் முழுக்க சுற்றி வந்தும் ஒரு முத்தக்காட்சி கூட கண்ணில் பட வில்லை..இருவரும் கேலியாக லட்சகணக்கில் செலவு செய்து நிஜ அமெரிக்காவை பார்க்காமலே போய்விடுவேன் போல இருக்கே என்று கூட பேசிக்கொண்டோம்..
கடைசியாக பார்த்தேன்..சில மெட்ரோ ரயிலில், மற்றும் பஸ் பயணத்தில்..அதுவும் காதலர்கள்..இயற்கையாக..யாரும் கவனிக்கக்கூட இல்லை..நானும் காணாதது போல இருந்துவிட்டேன்.. அப்படி இருப்பது கொஞ்சம் நமக்கு கடினம்..அவர்கள் அனுபவித்து கொடுக்கும் பொழுது கொஞ்சம் திரும்பி பார்க்க தோன்றுகிறது நம் இந்திய மனப்பான்மையில்..ஆனால் நாகரிகம் என்று ஒன்று இருக்கே..ஆனால் இரவு பார்ட்டிகள் நடக்கும் உலகம் வேறு. அதற்குள் செல்லவில்லை நான்.
முத்தம் என்பது பெரும்பாலும் சாதரணமாக ஹக் செய்து..கன்னத்தோடு லேசாக உரசுவதொடு அன்பை காட்டுவதை செய்துவிட்டு விலகுகிறார்கள்..அத்தனை எளிதில் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முடியாது..ஒரு மெல்லிய சுவர் இருக்கும்..ஒவ்வொருவரின் மனதுக்குள்..எல்லாருக்குள்ளும் ஒரு தனிமை உணர்வு ப்ரேவேசி என்ற பெயரில் போர்த்தப்பட்டு இருக்கும்..அவர்களுக்கு அன்பை வெளியே காட்ட வேண்டிய அவசியம் அதிகம்..இல்லாவிடில் இன்னும் அதிகபட்ச தனிமை உணர்வு அவர்களை சூழும்..
நம்மை போல எளிதாக எங்கு வேணாலும், எப்படி வேணாலும் ஒட்டி பழகி, கலந்து கொள்வதை போல அவர்களால் முடிவதில்லை..எளிதில் கை கொடுக்கும், பேச முடியும் அவர்களால் மனதுக்குள் யாரையும் அனுமதிக்க முடிவதில்லை..நம்மை போல அன்பு செலுத்த என்றைக்கும் இயலாமல் போகிறது..
எது சரி, எது தவறு என்று இல்லை...மேற்கத்திய கலாசாரம் என்ன என்று பலரிடம் கேட்டேன்...ரயிலில் இரு பெண் சொன்னாள்.." .Mrs.கிர்த்திகா அமெரிக்காவை பொருத்தவரை தனி கலாசாரம் என்பது இல்லை..இது குடியேறிகள் நாடு..ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டு வருகிறார்கள் என்றாள்..அதனால் ஒன்று அதற்கு கலாசாரம் என்பது இல்லை..இல்லாவிடில் இங்கு இருக்கும் அனைத்து மக்களின் கலாச்சாரங்களின் கலவை ..இரண்டி ஒன்று" என்ற விடை அளித்தாள்..
அடுத்து இன்னொருவரிடம் கேட்டேன்..ஐரோப்பிய கலாச்சார பின்னணி வேறு..அங்கு குடும்பங்கள் மேல் மதிப்பு அதிகம்..ஆனால் இங்கு கம்மி என்றார்,..49% டைவர்ஸ் இங்கு உண்டு என்றார்.அப்ப ஐம்பது சதவிகிததுக்கு மேல் ஒருவனுக்கு ஒருத்தியாக்கதானே வாழ்கிறார்கள் என்றேன்..அதுவும் அஞ்சு வருடங்கள் பழகி பார்த்துவிட்டு ஒத்து வந்தால் மட்டுமே திருமணம்..மிக அதிகமாக கலந்து ஆலோசித்தே குழந்தை..இப்படியாகத்தான் இருக்கிறது..டைவர்ஸ் என்பது கடைசியான முடிவுதான்..ஆனால் தனியாக வாழும் பெண்கள் மிக அதிகம்.அவர்களுக்கு சமூக, அரசாங்க பாதுகாப்பும் இருக்கிறது. யாருடைய வாழ்கையும் யாராலும் விமரிசிக்கப்படாது..பல இளைஞர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமல் பதினெட்டு வயதில் வெளியேறி மிக கஷ்டப்பட்டு வாழ்க்கையை கற்றுக்கொண்டு முப்பது வயதில் திருந்தி சரியான வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்..டாட்டு வை உடம்பு முழுதும் குத்திக்கொண்டு , ஊர் சுற்றல், போதை பழக்கங்கள் எல்லாவற்றையும் முயற்சிப்பார்கள் அதற்கு வாய்ப்பும் உண்டு..ஆனால் இங்கு அப்படியெல்லாம் நாம் முயற்சித்து கூட பார்க்க முடியாது. அதுவும் பெண்கள் யோசிக்கவே முடியாது..நம் சமூக அமைப்பு வேறு..அவர்கள் ஒரு பாதுககாப்பான முன்னேறிய அமைப்பில் இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
குடும்பம் என்ற அமைப்பு அத்தனை மோசமாக உடைபடவில்லை உலகம் முழுவதும்..அதை விட இன்னொரு சிறந்த கண்டுபிடிப்பு சமுகத்தில் இல்லாததால் அதையே கடைப்பிடிக்கிறோம்.. ஆனால் பெண்கள் மிக அடக்கப்படும் சமூகங்களில் குடும்பம் என்ற அமைப்பு மேல் அவநம்பிக்கை அதிகம் தோன்றும்..அப்பொழுது பெண்கள் தங்களை சுற்றி கட்டிய சுவரை உடைத்துக்கொண்டு வெளியேறும்போது மிக அதிக அடிகள் சமூகத்துக்கு ஏற்படும்..அதை தாங்கிக்கொள்ளமுடியாமல் இன்னும் உடை, கலாசாரம், பால் பாகுபாடு என்று வன்முறைகள் கட்டவிழித்து விடப்படும்..இன்னும் முடக்க முயற்சிப்பார்கள்..
இந்த எதிர்வினைகள் நடக்க, நடக்க அந்த பக்கம் பலமாகும்..இயற்கை எதையும் பேலேன்ஸ் செய்யும் ஆற்றல் பெற்றது..உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி நெல் மணிகள் இன்னும் இயற்கையின் தொண்டைக்குழியில் உறுத்திக்கொண்டு இருக்கலாம்..அதை வெளியே எடுக்கிறோம் பொழுது கொஞ்சம் எச்சிலும் தெறிக்கலாம் ..போக, போக எது தேவை, தேவையில்லை என்று சமூகம் கட்டமைத்துக்கொள்ளும்..
நாம் ஒரு பெரிய கால மாற்றத்துக்கு சாட்சியாக அமர்ந்து இருக்கிறோம் என்றே தோன்றுகிறது..எதையும் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லாமல் சாட்சியாக இருப்பது கூட பல இடங்களில் பல நிகழ்வுகள், நன்மைகள் நடக்கவும், நடக்காமல் இருக்கவும் உதவி செய்யும்..
எதுவும் கடந்துதான் போகும்.
6 comments:
அமெரிக்கா பற்றி நீங்கள் எழுதிய பதிவுகளில் இதுதாம் மிக அருமை, நீங்கள் பார்த்ததை கேட்டதை உள்வாங்கி அதை அழகாக எளிமையாக சொன்ன விதம் மிக பாராட்டுக்குரியது அமெரிக்க்க பற்றி தவறான எண்ணங்களை கொண்டவர்கள் இதைப்படிக்கும் போது நிச்சயம் அந்த எண்ணைங்களை மாற்றிக் கொள்வார்கள்
அமெரிக்க பயணம்-ஒன்பது..முத்தக்காட்சியும், நானும்.=அமெரிக்காவிலும் கிராமங்கள் உண்டு..கடலோர நகரங்களில் எல்லாம் ஏற்றுகொள்ளபடும்..ஆனால் உள்நாடுகளில் கதை வேறு..மிக உச்சபட்ச கன்செர்வேடிவ் குடும்பங்கள் உண்டு..அவர்கள் ஸ்லீவ் லெஸ் அணிய மாட்டார்கள்..ஆண்களும் உடை கட்டுபாட்டை மேற்கொள்வார்கள்..அவர்களை குறிப்பிட்ட உடைகளில் மட்டுமே காண முடியும்..= Kirthika Tharan - அருமையான அமெரிக்க பயணத் தொடர். = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Kirthika Tharan.
மிக நேர்த்தியான பதிவு.... கலச்சாரம் பற்றி பற்பல உண்மைகள், தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன... வாழ்த்துக்கள்...
பயணக்கட்டுரை அருமை. முகநூலில் உங்களை பின் தொடர்கிறேன்.உங்களின் அமெரிக்க தொடர்பான சில புகைப்படங்களை முன்பே பேஸ்புக்கில் பார்த்தேன். நீங்கள் வலைப்பூ எழுதுவது தற்போதுதான் தெரியும்.
121மிக நல்ல பதிவு. எதெற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டுபவர்களால் இனி அது முடியாது. வருங்காலங்களில் (அது 2015 ஆக கூட இருக்கலாம்) இந்தியாவின் முத்தக்கலாச்சாரம் அமெரிக்காவில் பரவி விட்டதாக செய்திகள் வந்தாலும் வரலாம் (வரும்)
தயவுசெய்து இந்திரா காந்தி சர்வதேசப் பள்ளியைப்பற்றி ஏதாவது எழ்ட முடியுமா? அறிய ஆவலாக இருக்கிறேன்.
நான் விரைவில் தொடங்கவிருக்கும் எனது இலங்கை பற்றிய கட்டுரைத் தொடரைப் படிப்பீர்களா?
இலங்கைவேந்தன் பாரி
Post a Comment