Wednesday, April 3, 2013

CBSE & ICSE பாடங்கள் குறை நிறைகள்


CBSE மற்றும் ICSE பாடங்கள் குறைகளும் நிறைகளும் ஒரு சிறு அலசல்.

குழந்தைகளின் கல்வி இன்று மிக முக்கியமாகக் கருதப்படுகிற காலத்தில் எந்த பாடத்திட்டம் (சிலபஸ்) நல்லது நமக்குத் தேவை என்ற குழப்பம் பெற்றோருக்கு அதிக அளவில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காத எந்தப் பள்ளியும் நல்ல பள்ளிதான். ஆனால் அடுத்து படிக்கப் போகும் திட்டத்துக்கு ஏற்றவாறு நாம் பாடத்திட்டத்தைத் தேர்ந்து எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

CBSE பாடத்திட்டம் நிறைகள்.

இப்போது மத்தியக் கல்வி அமைச்சகத்தால் திருத்தி அமைக்கப்பட்ட முறையால் நிறைய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் மாணவர்களுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காமல் இருபதற்காக அமைக்கப்பட்ட CCE கிரேடிங் முறை. வருடம் முழுதும் கவனித்து (asses) செய்து மாணவர்களுக்கு க்ரேடு மதிப்பு அளிக்கும் (மதிப்பெண்கள் இல்லாத )உள்ள முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதுபோல பத்தாம் வகுப்பு பரீட்சை முறையும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளி அளவிலேயே பரிட்சைகள் வைக்கப்படுகிறது. பொதுத் தேர்வு முறையில் இருந்து மாற்றப்பட்டுகொண்டு வருகிறது. கிரேடிங் முறை மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

CBSE பள்ளிகள் இந்தியா முழுதும் அதிக அளவில் உள்ளதால் அடிக்கடி இடமாற்றம், பணி மாற்றம் செய்பவர்களின் முதல் விருப்பமாக உள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட பாடமுறை எளிதாக உள்ளதால் அனைவரும் நல்ல க்ரேடு வாங்கும் வாய்ப்பு.

பத்தாம் வகுப்பில் அதிகப் பாடங்கள், பேப்பர்கள் கிடையாது.

இந்தியா முழுதும் நடத்தும் போட்டி தேர்வுகள் பெரும்பாலும் CBSE கல்வி முறை அடிப்படையிலேயே கேட்கப்படுவதால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தை தேர்வு செய்கிறார்கள். முக்கியமாக IIT,AIEEE, (அந்த தேர்வு முறைகளும் இப்போது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது )

டேலேன்ட் எக்சாம்ஸ் போன்ற போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் CBSE பாடத்திட்ட முறையிலேயே அமைகிறது.

சில ஸ்காலர்ஷிப் தேர்வுகளும் இந்த பாடத்திட்ட முறையிலேயே அமைகிறது.

மதிப்பெண்கள் ISC (ICSE) பாடத்திட்டத்தை விட அதிகம் பெற வாய்ப்பு.

லிங்க் http://cbseacademic.in/curriculum.html.

சில குறைகள்.

அறிமுகப்படுத்தபட்ட CCE முறையில் உள்ள குழப்பங்கள்.

புதிய முறையால் ப்ராஜெக்ட் செய்யச் சொல்லி மாணவர்களின் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வது. அதனால் படிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாதது.

பாடதிட்டங்களிலும்,மொழிப் பாடங்களும் மாணவர்கள் விருப்பப் பாடங்கள் தேர்ந்து எடுத்து கொள்ள வாய்ப்பு குறைவு.

மாநில அளவில் நடைபெறும் கல்லூரித் தேர்வுகளில் போதுமான மதிப்பெண்கள் எடுக்க முடியாதது.

ICSE சில நிறைகள்:-

பெரு நகரங்களில் ICSE பள்ளிகள் அதிகம் உள்ளதால் அங்கு இருப்பவர்கள் எந்தப் பாடத்திட்டத்தை எடுக்கலாம் என்ற குழப்பம் வரும்.

ICSE பாடங்கள் CBSE பாடங்களை விட அதிக விஷயங்களை தொட்டு செல்லும்.

இந்த பாடத்திட்டம் சில உலக நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறையில் ஆங்கிலப் பாடம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிறப்பாகவும் இருக்கிறது.

சில விருப்பப் பாடங்களை தேர்வு செய்யவும் உரிமை மாணவர்களுக்கு உள்ளது.

முக்கியமாக எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. CBSE முக்கியமாக கணக்கும், அறிவியல் பாடங்களை முதன்மையாக கொண்டு செயல்படும். இங்கு விருப்ப பாடங்கள் science, maths, language, arts, home science, agriculture, fashion design,cookery போன்றவைகளும் உள்ளன.

வெறும் பாடங்கள் மட்டும் அல்லாமல் முழு வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவது.

பாடத்திட்டங்கள் அவ்வப்பொழுது மேம்படுத்தப்படுகிறது.

மேனேஜ்மென்ட் பாடத்திட்டங்களை எடுக்கும் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் பாடத்திட்டம்.

அதிக செயல்முறைப் பாடங்கள் கொண்டிருப்பது.

வொகேஷனல் பாடங்களையும் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு.

ஆங்கிலம் சம்பந்தப்பட்ட போட்டி தேர்வுகளில் இந்த பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிறந்து விளங்குவது.

அறிவைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு, ரெபரன்ஸ் செய்து படிக்க வாய்ப்பு.

சில குறைகள்.

CBSE முறை அளவுக்கு அதிக மதிப்பெண்கள் பெற முடியாதது.

பாடங்கள் அதிக அளவில் உள்ளதால் சில மாணவர்களால் கையாள முடிவதில்லை.

போட்டித் தேர்வுகள் இந்த பாடத்திட்ட அடிப்படையில் அமைவதில்லை.

அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் இந்தியா முழுமைக்கும் இல்லாதது.

தனித் தேர்வுகள் கிடையாது.

மாநில அளவில் உள்ள கல்லூரிகளில் சேர போதுமான மதிப்பெண்கள் பெற முடியாதது.

பாடத்திட்டங்கள் பற்றி அலசினாலும் பள்ளி செயல்படும் விதம், ஆசிரியரின் முயற்சி, தகுதிகளும் முக்கியம் பெறுகிறது. எந்த பாடத்திட்டம் இருந்தாலும் நல்ல முறையில் சொல்லித்தரப்படாவிட்டால் மாணவர்கள் சிறந்து வருவது கடினமே. எனவே அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் ஒரு பள்ளியை, பாடத்திட்டத்தை பெற்றோர்கள் தேர்வு செய்யவேண்டி உள்ளது.

1 comment:

Valentin said...

Boisz się od razu grać na pieniądze? Trenuj w trybie demo!https://top10casinoexpert.pl/casino/unique-casino/