Tuesday, April 30, 2013

கல்வி தொடர்..டெக்னோ பள்ளிகள் ஒரு சிறு அலசல்.

கல்வி தொடர்..டெக்னோ பள்ளிகள் ஒரு சிறு அலசல்.

IIT என்றாலே வட இந்திய மாணவர்கள் என்று இருந்த நிலைமை போய், இன்று அதிக ஆந்திர மாணவர்கள் ..எப்படி வந்தது இந்த மாற்றம் ? 

முன்பு IIT நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டுமென்றால் வடபகுதி மாணவர்களே சிறப்பாக எழுதி நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள். சமீப காலங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாணவர்கள் மிகப்பெரிய விகிதத்தை IIT ல் பெற்று வருகிறார்கள். இது எப்படி சாத்தியமானது ? இங்கும் வணிக கல்விதான்.. மிகச் சிறந்த கோச்சிங் (டெக்னோ பள்ளிகள் ) பள்ளிகள் விஜயவாடாவில் ஆரம்பித்து இப்போது தென் இந்தியா முழுக்க கிளைகளை பரப்பி வருகின்றன.

டெக்னோ ஸ்கூல் என்று அழைக்கப்படும் இப்பள்ளிகள் சிறு வயது மாணவர்களை குறி வைத்து செயல்படுகிறது அவர்களின் தாரக மந்திரம் “to catch students young”. ஆறாம் வகுப்பில் இருந்து IIT, மற்றும் இந்திய அளவிலான ஒலிம்பியாட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவது இவர்கள் வேலை.

இங்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் சிந்திக்க முடியாது. சில பள்ளிகள் காலை ஏழில் ஆரம்பித்து இரவு வரை கோச்சிங் தருகின்றன. பல பள்ளிகளில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை..ஏன் சில பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை..பொது மைதானத்துக்கு பெயருக்கு அழைத்து செல்வார்கள். விளையாட்டை விளையாட்டாக எடுத்து கொள்ளும் பள்ளிகள்.

போட்டி என்று வந்து விட்டால் ஸ்ட்ரெஸ் என்பதை தவிர்க்க முடியாதது. மிக இளவயதில் போட்டிக்கு தயார் படுத்துவது மாணவர்களை எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் கொண்டு விடும் என்று அறியாமலே பெற்றோர்கள் போட்டி போட்டு கொண்டு இந்த பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பல மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவு வளர குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பாவது வந்திருக்க வேண்டும். ஆனால் பெற்றோர்களின கனவை மாணவர்களை துரத்த செய்வது தான் நிலைமை.

ஆனால் இந்த டெக்னோ பள்ளிகள் IIT யின் தேர்வுமுறைகளை நன்கு புரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்கிறார்கள். கொஞ்சம் திறமை, அதிக கடின உழைப்பு இருந்தால் இந்த பள்ளிகள் மாணவர்களை IIT க்குள் அனுப்புவது உத்திரவாதம். ஆயிரக்கணக்கில் பெற்றோகள் இந்த பள்ளிகளை குறிவைத்து படைஎடுப்பதால் மாணவ இயந்திர தயாரிப்பு பழுதில்லாமல் நடைபெறுகிறது.

நாம் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க விரும்புகிறோமே தவிர எந்த துறை என்று கூட முடிவு செய்வதில்லை. எலெக்ட்ரானிக்ஸ் இல்லையா ஐ-டி ...இல்லையா கம்ப்யூட்டர் என்று கண்ணை மூடிக்கொண்டு மந்தை மனப்பான்மையில் இருப்பதால் இந்த பள்ளிகளை நாடி எப்படியாவது புகழ்பெற்ற கல்விநிறுவனங்களில் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து படித்தால் போதும் என்ற எண்ணம.அதில் மாணவர்க்கும் ஆர்வம் பற்றிய கேள்விகள் மழுங்கடிக்கபடுகின்றன. மாணவர்களும் எந்த கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு படிப்பு பற்றிய சிந்தனையில் மூழ்கடிக்கபடுகின்றனர்..இல்லாவிடில் மூளை சலவை செய்யபடுகின்றனர்.

கல்வி வணிக சூழலில் இருந்து வெளிய வரவேண்டும். மாணவர்களை பணம் சம்பாதிக்கத் தானே தயார்படுத்துகிறோம் என்று கூற முடியாத நிலை..அதற்கும் உத்திரவாதம் இல்லை..முடிவில் இளவயதை அருமையான பள்ளி பருவத்தை சாகடிக்கும் பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும்.

புகழ்பெற்ற டெக்னோ பள்ளிகளின் லிங்க்.

http://srichaitanyaschool.net/

http://www.narayanaetechnoschools.com/

இவை இரண்டும் மிகபுகழ் பெற்ற டெக்னோ பள்ளிகள்.அதை தவிர இந்த பள்ளிகளும் உள்ளன.

http://www.vaishnavitechnoschools.com/VTSIntro.ASPX
http://www.aksharaschool.com/
http://www.blueyetechnoschools.com/Academics.html
http://www.kkrgowtham.com/

இவற்றை தவிர்த்தும் பள்ளிகள் உள்ளன..அதை தவிர்த்து ராமையா போன்ற புகழ்பெற்ற கோச்சிங் சென்டர்கள் உள்ளன. இந்த பள்ளிகளின் தளங்களை பார்வை இடும்பொழுது மூன்றாம் வகுப்பில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்துகிறோம் என்ற வாசகங்கள் கொஞ்சம் அதிர்சிக்கரமாகதான் இருக்கு. அனைவரும் IIIT ல் படிக்க வேண்டும் என்றால் இத்தனை கல்விநிறுவனங்கள் திறப்பதுபோல IIT கல்லூரிகள் திறக்க வேண்டும். அப்போதே தயார் ஆகும் மாணவர்கள் IIT க்குள் நுழைய முடியும். கேள்விக்குறியான மாணவர்கள் வாழ்க்கை ?????? எங்கே போகிறோம் ?? கேள்விக்குறிகள்தான் இங்கு விடை சொல்கிறது.

No comments: