Tuesday, April 30, 2013


போட்டி தேர்வுகள் ஒரு சிறு அலசல்.
 
IITJEE
போட்டி தேர்வு :

இந்தியாவில் மிகவும் பெருமை வாய்ந்த போட்டி, கடுமையான போட்டி தேர்வு.  மாணவர்களை விட பெற்றோர்களின் கனவு ....டி யன் என்று சொல்லி கொள்வதில் அத்தனை பெருமை,  ஆனால் அதற்காக உழைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை லட்சகணக்கில் ஆனால் தேர்வு ஆகி உள்ளே செல்ல போவதோ ஆயிரங்களில மட்டுமே. உலகத்திலேயே மிகுந்த போட்டி மிகுந்த தேர்வு IIT ENTRANCE தேர்வுதான்.

அங்கு சென்று என்ன சாதிக்க போகிறார்கள் என்பது வேறு விஷயம் ஆனால் அங்கு உள்ளே செல்வதே பெரும் சாதனைதான். எத்தனையோ கோடிகளில் பணம் புழங்கும் மிக பெரிய வியாபாரமாக மாறிவிட்டது இந்த கோச்சிங் கிளாஸ்கள். அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தனி தனி கோச்சிங் உண்டு..அனைத்துக்கும் சேர்த்து பேக்கேஜ் கூட உண்டு.
இதில் மிக புகழ் வாய்ந்த இடம் ராஜஸ்தான் கோட்டா பள்ளிகள். அந்த சிறு நகரம் கோச்சிங் கிளாஸ்களுக்கு பெயர் பெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து அங்கு வந்து படிப்பவர்கள் அதிகம் . சிறு வயதில் இருந்தே  சேர்க்கை நடைபெறுகிறது. ஆறாவதில் இருந்து,பிறகு ஒன்பாதவது அதுவும் இல்லாவிட்டால் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கை நடைபெறும்..இதெல்லாம் பள்ளி சேர்க்கை அல்ல வெறும் ஐ.ஐ.டி கனவுடன் வளரும் மாணவர்களுக்கான கோச்சிங்.

இங்கு பான்சல், ரிசோநன்ஸ்,ஆர்யன் ,கேரியர் பாயின்ட் இன்னும் பல பெருமை வாய்ந்த கோச்சிங் சென்டர்கள் உள்ளன. இதில் சிறந்த சென்டர்களில்  சேர நுழைவு தேர்வு உண்டு.  அந்த நுழைவு தேர்வு பற்றி பயம் வந்துவிடும் அல்லவா..கவலையே வேண்டாம் அதுக்கும் கோச்சிங் கொடுக்க கோட்டாவில் வசதி உண்டு. வருடத்திற்கு அறுபதாயிரம் மாணவர்களுக்கு குறையாமல் கோட்டாவில் தயார் ஆகிறார்கள். அத்தனை மாணவர்களும் மிக கஷ்டப்பட்டு படிக்கிறார்கள்.ஒவ்வொரு சென்ட்டரும் பெரும்பாலும் நன்கு படிக்க கூடிய மாணவர்களையே தேர்ந்து எடுக்கும்.

அங்கு பணம் கட்டி உள்ளே போய்விட்டால் ஐ.ஐ.டி.சீட் கிடைப்பது பற்றி ஒரு கியாரண்டியும் கிடயாது..ஆனால் பன்னிரெண்டாவது போகும் முன்னே சிலர் கூறிவிடுகிரார்கள். NITக்கு மட்டும் தயாரக சொல்லிவிடுவதால் ஒரு வசதி. பாடங்களை மட்டும் படிப்பது அல்லாமல் விடாமல் IITJEE தேர்வுக்கு தயாரக வேண்டும். இடைவிடாத தேர்வுகள், பாடத்திட்டங்கள் போன்றவற்றை  கால அட்டவணைகளாக அச்சடித்து கையில் கொடுத்துவிடுவார்கள்...சாப்பிட ஒதுக்கும் நேரம் கூட இந்த கால அட்டவணையில் இடம்பெறும். கோட்டாவில் ஒரு நாளைக்கு மாணவர்கள் ஆறு மணி நேரம் தூங்கினால் பெரிய விஷயமே .அத்தனை விஷயங்கள் படிக்க இருக்கும். எனக்கென்னமோ IITஉள்ளே போனால் கூட இத்தனை கஷ்டப்பட்டு கற்று கொள்வார்கள் என்று தெரியவில்லை. அத்தனை பாடங்கள் இங்கு படிக்கவேண்டும்.

இந்தியா முழுவதிலும் இருந்து கோட்டாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் அதிகம்..அதனால்  அது ஒரு கல்வி வியாபார கேந்திரமாக மாறிவிட்டது. நம் நாமக்கல் மாவட்டங்கள் இதற்கு முன் ஒன்றுமே இல்லை. அத்தனை பெரிய வியாபாரம் கார்பரேட் அளவில் நடைபெறுகிறது. ,நிறைய மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக விட்டு விட்டு வரும் அவலமும் நடக்கிறது.

இதற்கு நேரெதிராக புகழ்பெற்ற FIITJEE கோச்சிங் கிளாஸ் (இந்தியா முழுதும் FFITJEEக்கு கிளைகள் உள்ளன )  இருக்கும் பாட்னாவில் ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு சூப்பர் தேர்டி (super thirty ) என்ற கோச்சிங் நடத்தி வருகிறார். இங்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏன் முப்பது மாணவர்களுமே IIT க்கு செல்வது வருடா வருடம் நடக்கிறது. இவரது நூறு சதவிகித ஒற்றை மனித சாதனையை எந்த வியாபார கல்வியாலும் முறியடிக்க முடியவில்லை.

ஆனந்தகுமார் என்பவரால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி பல விருதுகளை அள்ளி சென்று இருக்கிறது இந்த சூப்பர் தேர்டி. இந்தியாவின் மிக சிறந்த கோச்சிங் சென்டர் ஆக அறியப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதனாக  நூற்றுகணக்கான நன்கு படிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்க்கையில ஒளி ஏற்றி வருகிறார். இவர் மூலம் IIT கல்வி நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்த பெரும்பான்மை மாணவர்கள் முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவர்கள். இப்படியும் கற்று கொடுக்கலாம் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துவோம். எல்லாவற்றையும் வியாபாரம் ஆக்கினாலும் இதிலும் நல்ல முறையில் சேவை செய்யமுடியும் நல்ல மாணவர்களுக்கு உதவ முடியும் என்று எடுத்துக்காட்டிய ஆனந்தகுமார் போன்ற நல்ல உள்ளங்களால் இந்தியா மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

http://www.youtube.com/watch?v=TYyIE3tstJ4

http://super30.org/


No comments: