பயணம் ஆறு..
பதிவு இழுத்துக்கிட்டே போவதால் இன்னிக்கு கொஞ்சம் பாஸ்ட் பார்வேர்ட்... பக்கத்தில் உக்கார்ந்து இருந்த தாத்தா வெற்றிலை போட்ட லாகவத்தையும், துப்புவதையையும் கவனித்து எழுதினால் அது டாகுமெண்டரி ஸ்டைல்...நாம ஹரி ஸ்டைல் இல்லாவிட்டாலும் கத்தி ஸ்டைலில் போகலாம் என்று,.என்ன கொஞ்சம் இழுத்து அறுக்கும்...ஆனால் வசூல் கியாரண்டி இல்ல..
பதிவு இழுத்துக்கிட்டே போவதால் இன்னிக்கு கொஞ்சம் பாஸ்ட் பார்வேர்ட்... பக்கத்தில் உக்கார்ந்து இருந்த தாத்தா வெற்றிலை போட்ட லாகவத்தையும், துப்புவதையையும் கவனித்து எழுதினால் அது டாகுமெண்டரி ஸ்டைல்...நாம ஹரி ஸ்டைல் இல்லாவிட்டாலும் கத்தி ஸ்டைலில் போகலாம் என்று,.என்ன கொஞ்சம் இழுத்து அறுக்கும்...ஆனால் வசூல் கியாரண்டி இல்ல..
ப்ளைட் டிக்கெட் வாங்குவது பற்றி.. நிறைய செலவாகும் விஷயம். இங்கு மிக கவனமாக இருக்க வேண்டும். வாரக்கடைசி, விடுமுறை நாட்களில் வாங்குவது அதிகம் செலவாகும்..முக்கியமாக ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் மிக அதிக விலை வைத்து இருப்பார்கள்..அங்கும் எல்லாமே திட்டமிட்டு செய்வதால் நாமும் நான்கு மாதங்கள் முன்னாடியே வாங்கி வைத்து விடுவது மிக உத்தமம்.
அடிக்கடி ஒரே வெப்சைட்டில் தேடினால் நமக்கு டீல்ஸ் வராது..அப்படி ஒரு செட்டிங்க்ஸ்ல இருக்கும்.தேவையானவர்களுக்கு டீல்ஸ் காட்டாது..அதனால் கொக்கு போல காத்து இருக்கணும்..நிறைய இணைய தேடல் தேவை...ஏதோ ஒரு இடத்தில் டீல் கிடைத்தால் படக் என்று புக் செய்து விடுவது உத்தமம்..எங்களுக்கு லூப்தன்னாசாவில் கிடைத்தது..இல்லாவிடில் இன்னும் அம்பதாயிரம் அதிகம் ஆயிருக்கும்.
அது போல காத்திருக்கும் நேரம், ப்ளைட் மாற்றும் நேரம் போகும் வழி எல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும்..சில சமயம் ஒரே ப்ளைட் , ரெண்டு ஏன் நாலு மாற்றுதல்கள் கூட இருக்கும்,..பணம் குறைவு என்பதற்காக புக் செய்துவிட்டு கஷ்டப்பட முடியாது..ட்ராவல்ஸ் வழியாக புக் செய்தால் கண்டிப்பாக இருபதாயிரம் முதல் லட்ச்கணக்கில் அதிகமாகும்..நாமே நன்கு அலசி ஆராய்ந்து புக் செய்வது நலம். பெரும்பாலும் நேரடியாக விமான நிறுவன வலைத்தளத்தில் செய்வது இன்னும் நல்லது. ஆனால் விலையை ஒரு இடத்துக்கு நாலு இடமாக செக் செய்து கொள்ளலால்ம்..ஒரு பத்து நாட்கள் கையில் வைத்துக்கொண்டு எந்த நாள் மலிவாக இருக்கிறதோ அன்றுக்கு ப்ளாக் செய்வது இன்னும் நலம்.
விமானத்தில் போகும் வேளையில் தண்ணீர் அனுமதி இல்லை..ஆனால் தண்ணீர் பாட்டில் காலியாக கொண்டு செல்வது நலம்.. ஜூஸை விட அதிக பணம் கொடுத்து தண்ணீர் வாங்கணும்..இல்லாவிடில் குரங்கு குனிந்து ஒரு போசில் தண்ணீர் குடிப்பது போல அங்கு இருக்கும் குழாய்களில் குடிக்க வேண்டும்.
விமானத்தில் போகும் வேளையில் தண்ணீர் அனுமதி இல்லை..ஆனால் தண்ணீர் பாட்டில் காலியாக கொண்டு செல்வது நலம்.. ஜூஸை விட அதிக பணம் கொடுத்து தண்ணீர் வாங்கணும்..இல்லாவிடில் குரங்கு குனிந்து ஒரு போசில் தண்ணீர் குடிப்பது போல அங்கு இருக்கும் குழாய்களில் குடிக்க வேண்டும்.
ஆங்..பையன் டைபாயிட்..கொஞ்சம் சரியாகி இருந்தது..உடனே மளமளவென்று ஒரு செட் குளிர்கால உடைகள் (கமர்ஷியல் ஸ்ட்ரீட் வெஸ்டர்ன், ஈஸ்டர்ன் ஸ்டோர்ஸ்ல எல்லாம் இருக்கும்) ..தேவையான உடைகள், புதுசா ஷூ, பெல்ட் என்று ஒன்று விடாமல் இடுக்கில் எனக்கும் வாங்கி ஆயிற்று..திரும்ப அலைச்சலில் ஜுரம்..திரும்ப டைபாயிட்..கேன்சல் செய்ய வேண்டும் என்றால் டிக்கட் இல்லை அடுத்து வேறு விமானம் பார்த்தால் இன்னும் லட்சகணக்கில் அதிகம் செலவிட வேண்டும்..
சரி என்று கல்ச்சர் டெஸ்ட் க்கு அனுப்பிவைத்துவிட்டு கிளம்ப வேண்டிய வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டோம்..
நான் மிகவும் நம்பிக்கை வைத்து செய்யும் செயல்கள் கண்டிப்பாக நன்றாக நடக்கும்..மிகப்பெரிய நம்பிக்கை வைத்தால் நிறைவேறியே தீரும்..எங்க வீட்டில் அதிர்ஷ்டம் அவளுக்கு உண்டு என்பார்கள்..ஆனால் எல்லா இடங்களிலும் என் நம்பிக்கை என்னை மீட்டுக்கொண்டே வந்து இருக்கிறது..இந்த நொடி வரை என்னுடைய அதிர்ஷ்டம் என்கிற நம்பிக்கை என்னை கைவிட்டதில்லை..
கல்ச்சர் டெஸ்ட் லேட் ஆகிக்கொண்டு இருந்தது..ஆனால் சிம்ப்டம் நார்மலாக இருந்ததால் பிரச்சனை இல்லை என்று கிளம்பியாச்சு.. ஆனால் மனதுக்குள் கவலையுடன்.. விமான நிலைய போட்டோவில் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தாலும் உள்ளே அரிக்கும் கவலைகளை யார் அறிய முடியும்?
சொந்தபந்தங்கள் வழியனுப்ப பிராங்க்பர்ட் வழியாக சின்னவனிடம் மனதை விட்டுவிட்டு கிளம்பினேன்.முன்னாடியே போன் செய்து இருந்தேன்..நண்பர்களுக்கு..நடுவில் செக் இன் ல் நடந்தது என்ன?
2 comments:
வணக்கம்
அமெரிக்க செல்லும் யாவருக்கும் பயன் பெறும் பதிவு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பணம் குறைவு என்பதற்காக புக் செய்துவிட்டு கஷ்டப்பட முடியாது..ட்ராவல்ஸ் வழியாக புக் செய்தால் கண்டிப்பாக இருபதாயிரம் முதல் லட்ச்கணக்கில் அதிகமாகும்..நாமே நன்கு அலசி ஆராய்ந்து புக் செய்வது நலம். பெரும்பாலும் நேரடியாக விமான நிறுவன வலைத்தளத்தில் செய்வது இன்னும் நல்லது. ஆனால் விலையை ஒரு இடத்துக்கு நாலு இடமாக செக் செய்து கொள்ளலால்ம்..ஒரு பத்து நாட்கள் கையில் வைத்துக்கொண்டு எந்த நாள் மலிவாக இருக்கிறதோ அன்றுக்கு ப்ளாக் செய்வது இன்னும் நலம்.
Post a Comment