சென்னையில் இருந்து விசா பெங்களூருக்கு அனுப்பி விடுவார்கள்.. இரு
நாட்கள் கழித்து போய் வாங்கிக்கொண்டு வர வேண்டும்..ஒரே கட்டிடத்தில் கனடா, ஆஸ்த்ரேலியா,
இங்கிலாந்து விசா கொடுக்கும் நிறுவனங்கள் இருந்தன. அவுட் சோர்ஸ் செய்து
இருக்கிறார்கள் போல் ..எனக்கு விசா வாங்க போகும் வேளையில் பையன் தோழன் ஒருவன்
ஈரான் .. இஸ்லாமிய பெயர்...அவனுக்கு அலபாமாவில் முழு ஸ்காலர்ஷிப் ல் சீட் கிடைத்து
இருந்தது..ஒரு ஈரானிய மாணவனுக்கும் அமெரிக்காவில் இடம் உண்டு..ஆனால் விசா உண்டா?
இருவரும் ஒரே கியூவில் நிற்கிறோம்..டிப் டாப்பாக உடை அணிந்துகொண்டு மிக அழகாக வந்து இருந்தான்..ஆயிரம் அரசியல்கள் இருக்கலாம்..ஆனால் இங்கு ஒரு மாணவனின் வாழ்க்கை மிக முக்கியம்..என் பையனும், அவனும் அடிக்கடி சேர்ந்து படிப்பார்கள்..எனவே அவர்கள் மேல் அதிக வாஞ்சை உண்டு..
வரிசையில் ஓரு சமூக சேவகி..மெக்சிகோ போகறாரம்..அப்படியே தங்கையை பார்க்க அமெரிக்கா போக வேண்டும்..என்று..ஹைதராபாத்தில் இருந்து ஒரு மாணவி..பெற்றோர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்பதை எதிர்த்து அமரிக்காவில் மேல்படிப்புக்கு சீட் வாங்கி இருந்தார்..விசா இல்லாவிட்டால் திருமணம் என்று சொல்லி இருக்கிறார்கள்..மிகப்பெரிய கவலை அந்த பெண்ணுக்கு..ஒரு பெண் குழந்தையாக அந்த பெண்ணுக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்ற மனம் முழுதும் நினைவு..
பையன் நண்பணிடம் பேசிக்கொண்டே இருந்தேன்..அவன் பதட்டம் குறைந்ததோ..இல்லை ஆண்டி நிப்பாட்டுவாங்களா என்று யோசித்தானோ தெரியாது..ஆனால்..பொறுமையாக பேசினான்..ஒரே ஒரு அறிவுரை மட்டும் கூறினேன்..உன்னுடைய டாக் (tag) ஐ நீ எப்படி நினைத்தாலும் அத்தனை எளிதாக எடுத்துவிட முடியாது...எனவே என்ன பேசினாலும் கோவமே பட வேண்டாம்..டென்ஷன் ஆகவே ஆகாதே..உனக்கு எதிரா எது சொன்னாலும்..வேறு எதாவது வேண்டுமென்றே சீன்டினாலும் உன்னுடைய கூல்ன்ஸ் ஐ விட்டு விடாதே..பதினெட்டு வயது பையனுக்கு மிக கஷ்டம்தான்..ஆனால் உன் எதிர்காலத்துக்கு எது நல்லது என்று நன்றாக யோசிதுக்கொள்..நிமிட கோபம், டென்ஷன் அத்தனையும் கெடுக்க வாய்ப்பு இருக்கு என்று சொன்னேன்..
இருவரும் சேர்ந்தே உள்ளே சென்றோம்.. புடவை கட்டிக்கொண்டு..கொஞ்சம் முடியெல்லாம் இறுக்கிக்கொண்டு வயதான லுக்கில் போக சொல்லி பையன் ஆர்டர்..வேறென்ன நிறைவேற்றினேன்..என்னிடம் என்னது பதினாறு வயதில் கல்லூரியில் சேர்கிறானா? என்று ஆச்சர்யம் காட்டினார் அதிகாரி.. அங்கெல்லாம் வயதாகி கல்லூரிகளில் சேர்வது மிக சகஜம்.சில கல்லூரி .ஹாஸ்டலில் மனைவி கூட தங்கிக்கொள்ள வசதி உண்டு.பிறகு கல்லூரியின் பெற்றோர் அழைப்பு , விமான டிக்கட் எல்லாவற்றையும் காட்டியப்பிறகு பத்து வருடத்துக்கு விசிட்டர் விசா கொடுத்து விட்டார்கள். ஆனால் அந்த ஈரானிய பையன் இரண்டு மணி நேரம் ஆகியும் வெளிவரவில்லை..அவன் அம்மாவோ மொழி தெரியாத சென்னையில் மவுன்ட் ரோடில் நிற்கிறார்கள்..அவரை விட்டு விட மனம் இல்லை..ஆனால் அவசரமாக தோழிகளை பார்த்துவிட்டு, வேலைகளை முடித்துவிட்டு இரவு மெயிலை பிடிக்க வேண்டும்.
அவருக்கு தேவையாக பிஸ்கட் கொஞ்சம், நீர் எல்லாம் வாங்கினேன்...கூலாக காட்டிக்கொண்டாலும் டெண்ஷனின் உச்சத்தில் இருந்தார்..மதியம் வரை பையன் கான்சலேட் விட்டு வெளி வரவில்லை..போன் எதுவும் அனுமதி இல்லாததால் எந்த விதத்திலும் தொடர்புக்கொள்ள முடியாது..இந்த பையனின் டாகுமென்ட்ஸ் துபாய் அலுவலகத்தில் செக் செய்யப்படும்.பக் பக் என்று நேரம் சென்று கொண்டு இருந்தது..
கடைசியாக இரண்டு மணிக்கு போன் வந்தது..ஆண்டி விசா இரண்டு வருடம் கொடுத்து இருக்காங்க என்று. மனிதர்கள் மேல் கொஞ்சம் நம்பிக்கை வந்த நேரம்..ஒரு நன்றாக படிக்கும் பையனின் படிப்பு எந்த அரசியலிலும் சிக்கி சீரழியக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்த தருணம் அது.
நான் விசா வாங்கும் நேரத்தில்.நண்பர் அப்படியே கனடா விசா வாங்குகள் டொரோண்டோ, நயாகரா சென்று வரலாம் என்று கூறி இருந்தார்.பெங்களூர் அலவலகத்தில் உள்ளே எட்டி பார்த்தேன்..அமரிக்கா அளவுக்கு கெடுபிடிகள் இல்லை..பதினைந்து முதல் இருவது நாட்கள் என்று சொல்ல..மீண்டும் எந்த அலைச்சலிலும் சிக்கி கொள்ள விரும்பாத மனம்..விலகி வந்தேன். அங்கு இருந்த ஒரு கல்வி கவுன்சிலர் தோழியானார்..கனடா மைக்றேஷன் எளிது..தாய், தந்தை கூட கூட்டிப்போகலாம்..எளிதில் குடியுரிமை கிடைக்கும் நாடு..சமூக,அரசாங்க பாதுகாப்பும் அதிகம், வேலை கிடைப்பது மிக எளிது என்ற காரணங்களால் மாணவர்கள் கனடாவுக்கு படையெடுப்பது அதிகரித்து உள்ளது என்ற தகவல்கள் தந்தார்.
அங்கேயே மாட்ரிக்ஸ் போன் கார்ட் இருவது நாளுக்கு அமெரிக்க நம்பர் நாலாயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கொண்டேன்.. ஆனால் அதைவிட கம்மியாக கூட கிடைக்கிறது என்று தோழி சொன்னார்.
உறவினர் ஒருவர் மகளுடன் போய் தங்கி இருக்கிறார்..சரியான முறையில் இன்சூரன்ஸ் செய்யவில்லை..அங்கு உடல்நலம் கெட்டுவிட்டது..கால் விரலை எடுக்க முப்பத்தியாறு லட்சம் செலவு செய்து இருக்கிறார்..மெடிக்கல் பற்றி நிறைய இருக்கு..அது பற்றி மட்டும் தனிப்பதிவாக விரைவில். .எனவே விசாரித்து எல்லாமே கவர் ஆகும் பாலிசி எனக்கு ஒன்றும்..பையனின் பாலிசி இருவது நாட்கள் கழித்தே ஆரம்பிக்கும் என்பதால் அவனுக்கு குறைந்தபட்சமாக ஆறு மாத மாணவர் மருத்துவ பாலிசியும் எடுத்துக்கொண்டோம்..
ஒரு நாள் கூட மெடிக்கல் பாலிசி இல்லாமல் அமெரிக்க மண்ணில் கால் வைக்க கூடாது என்ற கருத்தில் எங்க வீட்டு டாக்டர் உறுதியாக இருந்தார்..எல்லாம் ரெடி..பையன் நடுவில் பல்வேறு NGO க்களுக்கு சென்று வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருந்தான்..ஏதோ ஒரு தண்ணியை குடிக்க..கிளம்பும் ஓர் மாதம் முன்பு சரியான ஜுரம் ஆரம்பித்தது.
ஒரு வாரம் சரியாகவில்லை..இனிமேல்தான் ஷாப்பிங் செல்லணும்..உடை கூட இரண்டு வருட பிசியில் சரியாக வாங்கவில்லை..காலேஜ் போகும் வேளையில் வாங்கலாம் என்று தள்ளி போட்டாச்சு..இவனோ சரியான ஜுரத்தில்..ப்ளட் டெஸ்ட் ரிசல்ட்..டைபாயிட்..இ-போலா உச்சத்தில் இருந்த நேரம்..ஜுரம் என்றால் திரும்பி வர வேண்டியதுதான்..
டிக்கட் கேன்சல் செய்யாமல் கிளம்பினோமோ? அடுத்த பதிவில்...

10 comments:
.மெடிக்கல் பற்றி நிறைய இருக்கு..அது பற்றி மட்டும் தனிப்பதிவாக விரைவில். ....அமெரிக்கா செல்லும் நம்மவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Kirthika Tharan அவர்களுக்கு நன்றி

அமெரிக்க பயணம்...கானல் நீரா, பாலைவன சோலையா? ஐந்து.= Kirthika Tharan - ஆனால் அந்த ஈரானிய பையன் இரண்டு மணி நேரம் ஆகியும் வெளிவரவில்லை..அவன் அம்மாவோ மொழி தெரியாத சென்னையில் மவுன்ட் ரோடில் நிற்கிறார்கள்..அவரை விட்டு விட மனம் இல்லை..ஆனால் அவசரமாக தோழிகளை பார்த்துவிட்டு, வேலைகளை முடித்துவிட்டு இரவு மெயிலை பிடிக்க வேண்டும்.
அவருக்கு தேவையாக பிஸ்கட் கொஞ்சம், நீர் எல்லாம் வாங்கினேன்...கூலாக காட்டிக்கொண்டாலும் டெண்ஷனின் உச்சத்தில் இருந்தார்..மதியம் வரை பையன் கான்சலேட் விட்டு வெளி வரவில்லை..= உங்கள் மனிதாபிமான, timely help க்கு வாழ்த்துகள். எழுதி முடித்ததும், திரும்பவும் edit செய்து தக்க படங்கள் சேர்த்து ஒரு புத்தகமாக போடுங்கள். = எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Kirthika Tharan.
வாழ்த்துகள் மேடம் ...அருமையான பதிவு
This Documentation can be a Wonderful Guide (in the form of a book) to Travellers!
Kudos to Kirthika!
சுவாரஸ்யம்
கமெண்ட் ரிபீட் ஆனதால் நீக்கி விட்டேன்
வணக்கம்
பயணம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment