பயணம் பத்து..
எங்கு பார்த்தாலும் ச்வட்ச் பாரத் ஸ்லோகன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பையன் கூட சொல்கிறான்....காந்திஜிக்கு பிறகு மோடிதான் இந்தியாவில் என்று..நல்ல விஷயத்தை கையில் முதன் முறையாக எடுத்து இருப்பது மட்டும் இல்லாமல்..மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததும் பெரிய விஷயம்தான்..
இங்கு பெங்களூரில் குப்பை போடும் இடங்களில் போஸ்டர்கள்..அபராதம் வசூலிக்கப்டும் என்ற எச்சரிக்கைகள்..குப்பை காம்பவுண்டுகளில் வெள்ளை அடிக்கப்பட்டு குப்பை போடுவதை தடுக்க B.B.M.P பாடுப்பட்டுக்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இரவில் காய்கறி கடை குப்பையை கவரில் கட்டி வீசுவது சத்தமில்லாமல் நடக்கிறது.
நான் வாஷிங்கடனில் குப்பை சேகரிக்கும் இடம் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் தோழி குடும்பம் அழைத்துக்கொண்டு சென்றார்கள்..
குப்பை சேகரிக்கும் கிடங்கில் ஒரு துளி குப்பையை கூட பார்க்க முடியாமல் மிக சுத்தமாக இருந்தது.பழைய சோபாக்கள் , அட்டைப்பெட்டிகள் ஒரு புறம், காய்கறி குப்பைகள் ஒருபுறம், பிளாஸ்டிக் குப்பைகள், பேட்டரி உள்பட எலக்ட்ரானிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பர் கழிவுகள் என்று தனி தனியே வைத்து இருந்தனர்..
நான் சென்றது ஒரு வட்டத்தில் உள்ள குப்பைகளை சேகரித்து ரீ சைக்ளிங் செய்யும் இடம்..ஊழியர் அன்பாக வரவேற்று விளக்கம் கொடுத்தார்..காய்ந்த எரியும் குப்பைகள் போகும் இடத்தை காட்டினார்..அங்கு சிறிய மின் தயாரிப்பு நிலையம் இருந்தது..அத்தனையும் எரித்து மின் தயாரிக்கிறோம் என்றார்..இந்தியாவின் மின் பற்றாக்குறையையும், குப்பை கிடந்குகளையும் நினைத்துக்கொண்டேன்..
அடுத்து ஈர குப்பைகள்..அத்தனையும் உரம்.அங்கு இருக்கும் மக்கள் வந்து எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு உபயோக்கிக்க இலவசமாகவே தருகின்றனர்.. பிளாஸ்டிக், பேப்பர்..ஒன்றை கூட விடுவதில்லை..அதனையும் ரீ சைக்ளிங் செல்கிறது..மெடிக்கல் குப்பைகள் கவனமாக கையாளப்படுகிறது..எல்லாமே பொறுப்பாக நடைபெறுகிறது..தாங்கள் வீசும் குப்பைக்கு தங்கள் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது என்று அறிந்து மக்களும் பொறுப்பாக இருக்கிறார்கள்..
ஈர குப்பை, காய்ந்த குப்பையை கூட பிரித்து போடும் பொறுமை பலருக்கு இங்கு இல்லை..
எத்தனை இயக்கம் வந்தாலும் மக்களிடம் பொறுப்புணர்வு..நம்முடைய நாடு , நம்முடைய இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு வர வேண்டும்..குப்பை சேகரிக்கும் முறையை..குப்பை கிடங்குகளை சரிபடுத்தாமல் எத்தனை கோஷம் போட்டாலும் அது வீணாகாத்தான் போகும்..
கழிவறை கட்டுவதோ, குப்பைகளை போடாமல் தடுப்பதோ பெரிய விஷயம் இல்லை..அடுத்து பராமரித்தல் என்ற விஷயம் இருக்கிறது..நம்மிடம் பொறுப்பு இருக்கிறதா என்று அரசும், மக்களும் கேட்டுக்கொள்ளும் நேரம்...
இருக்கிறதா?

2 comments:
///எங்கு பார்த்தாலும் ச்வட்ச் பாரத் ஸ்லோகன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பையன் கூட சொல்கிறான்....காந்திஜிக்கு பிறகு மோடிதான் இந்தியாவில் என்று..நல்ல விஷயத்தை கையில் முதன் முறையாக எடுத்து இருப்பது மட்டும் இல்லாமல்..மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததும் பெரிய விஷயம்தான்..///
அதிக விளம்பரத்தை பார்த்து உங்கள் பையன் இப்படி நினைத்து இருக்கலாம். ஒன்றுமட்டும் உறுதி இந்தியாவின் தலைவர்களாக யாரு வந்தாலும் சரி அவர்கள் நாட்டிற்காக ஏதும் செய்யப் போவதில்லை அது இந்தியாவின் சாபக்கேடுங்க
இன்று நான் ஒரு பதிவு போட்டிருக்கேன் என் வலைத்தலத்தில் அதை படித்து பாருங்க அப்ப உங்களுக்கு புரியும் மோடி சொல்வதும் செய்வதும் என்னவென்று. அந்த பதிவு நான் எழுதியது அல்ல அது கூகுல் ப்ளஸில் இன்னொருவர் எழுதியது அதை எழுதியவர் அனுமதி பெற்று அதை பதிவு செய்து இருக்கிறேன்
ஒவ்வொருவருக்கும் குப்பைகளை வீதியில் வீசக்கூடாது என்ற எண்ணம் வரவேண்டும்! அப்போதுதான் இந்தியா சுத்தமாகும்.
Post a Comment