நம்பிக்கை...
ஒரு வார்த்தை..அதில் என்ன இருக்க போகிறது..
ஆனால் அதில்தான் எல்லாமே அடங்கி இருக்கு..
எப்படி இருக்கீங்க அப்படின்னு யாரையாவது கேட்டா....ஏதோ இருக்கேன் என்றோ ..என்னமோ போகுது இல்லாட்டி ஏதாவது பிரச்சனைகள் என்று கொட்ட ஆரம்பிப்பார்கள்..ஆனால் நல்லா இருக்கேன்..சந்தோஷமா, நம்பிக்கையா இருக்கேன் என்று சொல்பவர்கள் மிக குறைவு..
தசை சிதைவு நோய்..கொஞ்ச நாளில் உன்னால் நடக்க முடியாது, நிற்க முடியாது..உனக்கு குணப்படுத்த முடியாத நோய் என்றெல்லாம் சொன்னால் எப்படி முடங்குவோம்..அதுவும் பெற்றோர்கள்..
அதை எல்லாம் மீறி இரு மனுஷிகள் நிமிர்ந்து இருக்காங்க..அவர்கள்தான் வானவன் மாதேவி,, இயல் இசை வல்லபி..
கீதா இளங்கோவன்..அவர்களுடனான சந்திப்பை ஒரு டாகுமேன்ட்ரியாக எடுத்து வெளியிட முடிவு செய்ய..இன்று வந்து இருக்கிறது.." நம்பிக்கை மனுஷிகள் " குறும்படம்....
இதுதான் வாழ்க்கை என்றவுடன் எப்படி பெற்றோர்களையும் மேலே கொண்டு வந்து தங்களையும் மேம்படுதிக்கொண்டார்கள் என்று தெரிகிறது..
அவர்களை பார்க்கும் பொழுது அப்படியே மனம் குழைந்து , நெகிழ்கிறது ச்சே..எப்பேர்ப்பட்ட வாழ்க்கை..எப்படியெல்லாம் தவற விடுகிறோம் என்று சம்மட்டியால் அடித்து தெளிந்தத்தை போல உணர்வு..சில உணர்வுகளை எழுத்தால் பகிர்வதை விட..பார்த்து தெளிய வேண்டும்..
தனக்கு வந்த கஷ்டங்களை மீறி , தங்கள் வாழ்க்கையே போரட்டாமாக இருக்கும் நேரத்தில் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற மனம் எத்தனை அற்புதமானது..
ஆதவ் ட்ரஸ்ட்..அதுவும் கார்பரேட் உதவியே வேண்டாம் என்றும் பொழுதில் தனித்து தெரிகிறார்கள்..லவ் யூ பெண்களே..உச்சி முகர தோன்றுகிறது
எல்லா நேரங்களிலும் வாசிப்பும், அன்பும், அக்கறையுமாக தங்களையும் மேம்படுத்திக்கொண்டு அடுதவர்களையும் மேம்படுத்தும் சகோதரிகளே ..உங்களுக்கு என்ன செய்துவிட முடியும் எங்களால்..
செய்யலாம் என்றுதான் ஆதவ் ட்ரஸ்ட் இருக்கிறது..நம்மால் ஆன உதவிகளை அதற்கு செய்து நம்பிக்கை மனுஷிகளை இன்னும் மிளிர வைக்க முடியும்..ஆமாம் அடுத்தவருக்கு உதவி செய்வதால் தாங்கள் மிளிர்கிறார்கள்..அவர்களுடன் கை கொடுத்து மேலும் நாமும் அழகாக ஒரு வாய்ப்பு..
இந்த லிங்க் ஐ உங்கள் கருத்தோடு பகிர வேண்டிக்கொள்கிறேன்..நம்பிக்கை என்றும் ஜெயிக்கும்...என், நம் நம்பிக்கையும்..
https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4
...