Monday, March 21, 2016

ஒரே ஒரு நிறைய ஊரிலே..

உலக கதை சொல்லல் தினம்.

தாய், தந்தை பிறக்கும் பொழுதே கதை சொல்லிகள் பிறந்து விடுகிறார்கள். டி.வி பிறக்கும் முன்பு பிறந்து விட்டதால் கதைகளுக்கு நடுவே வாழ்ந்தவள். ஒரு கொள்ளு பாட்டி விளையாட்டுகளில் எக்ஸ்பர்ட்..சொன்ன இடத்தில சோழி விழும், உருட்டிய இடத்தில தாயம் நிற்கும். இன்னொரு பெரிய பாட்டியோ கதைகள். அவர் சொன்ன கதைகள் கற்பனையை மிக அதிகம் தூண்டுபவை.

ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களால் வார்த்து,வளர்த்து எடுக்கப்படுகிறார்கள். கதை சொல்லல் மேல் இன்னும் ஆர்வம் வந்ததிற்கு காரணம் விழியன் என்றால் கதை சொல்லும் நிகழ்வு என்று பெங்களூரில் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் பிரபு பாராட்டுக்குரியவர்.

மிக முக்கிய வேலை கொடுத்த தரன், மறுநாள் தேர்வு, வாசலில் ஒஜுவை விளையாட கூப்பிட வந்தசிறுவர் குழாம், 25 கி.மி தூரம் எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்த என்னால் மனமுருகி கேட்டுக்கொண்டிருந்த SBB யின் இளைய நிலாதாவைத்தான் சமாளிக்க முடியவில்லை. நட்புகள் வேறு ஸ்டேடஸ்களாக போட்டு இந்த மாலையை மிஸ் பண்ணிட கூடாது என்கிற அளவுக்கு மனதை இலகுவாக்கி வைத்தார்கள்.

எப்படியோ திடப்படுத்தி ஒஜுவை அவன் குழாமில் இருந்து பிரித்து அந்த ஏரியா பெயர் புதிதாக இருந்ததால் கூகிள் மேப் ல் தடவி தடவி எனக்கு மிக பரிச்சியமான சாலையில் சென்றுக் கொண்டிருந்தேன்.

முதலில் ராஜேஷ் அருமையாக ஆரம்பித்தார். மரமே இல்லாத ஊரில் விறகு வெட்டிக் கதை. நூறு வருடங்கள் பின் மரமில்லா வாழ்வை கற்பனை செய்ய தூண்டியது. அடுத்து பிரபுவின் வண்ணத்துப்பூச்சியும், எறும்பும் என்ற கி.ரா கதை மனதில் நின்றது. வரும் வழியில் ஹோர்டிங்கில் ஒரு வண்ணத்து பூச்சி பார்த்துவிட்டு ஒஜு அம்மா இதானே போய் அழுதுச்சு என்றான். நிகழ்வில் நிறைய தமிழ் வார்த்தைகள் அறிமுகம் ஆகின. முக்கியமா மொச்சைக்கொட்டை என்றால் என்ன என்று மொபைல் இமேஜ் ல பார்த்து தெரிந்துக் கொண்டனர்.அடுத்து அ, ஆ வைத்து ஒரு விளையாட்டு. பெங்களூரை பொறுத்தவரை தமிழ் சொல்லிக்கொடுக்காமல் ஒரு தலைமுறை வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் பொழுது தமிழ் மேல் குழந்தைகளுக்கும் அதிக ஆர்வம் வரும். அங்கும் ஃபேஸ் புக் மூலம் ஒருவருக்கு அறிமுகம ஆகிருந்தேன். இணையத்தின் இணைப்புகள் மனதில் இனிமையாக.அடுத்து நான் எங்கள் பாட்டி சொன்ன கதை சொல்லவா என்றேன். நிஜமாக எந்த தயாரிப்பும் இல்லை. சொல்லவும் யோசனை இல்லை. ஏன் என்றால் நிகழ்வு பார்த்துவிட்டு எப்படி அதுப் போல நாமும் செய்யலாம், குழந்தைகள் தமிழ் கதைகள் மேல் எந்தளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதே நோக்கம்.

பிரபு சொல்லுங்க என்றதும் மிக பரிச்சியமான கொழுக்கட்டை கதை சொன்னேன். அதில் எண்கள், உடல் உறுப்புகள் பெயர் எல்லாம் இருக்கும். 

"அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு காது உண்டோடி,
அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு மூக்கு உண்டோடி
அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு வாயும் உண்டோடி"

என்று வரிசையாக போகும். நாயகர்களுக்கு குழந்தைகளுடன் கலந்து பெயர் வைக்கப்பட்டது. பெரிய கதை. முடிந்தளவு சுருக்கியே சொன்னேன். ஆனால் அந்த நிமிடங்கள் உலகமே மறந்து விட்டது. குழந்தைகளும் நானும் ஒரு உலகத்தில் கொழுக்கட்டைகள், ரோஜா, பிள்ளையார் என்று பயணித்தோம். திட்டமிடாமல் கூட அழகாக அமைந்தது. நான் நயன்தாரா போல ஆக்ஷன் செய்வதாக நினைத்துக் கொண்டு கலாபவன் போல செய்ததை குழந்தைகள் ரசித்து சிரித்தார்கள். இருப்பினும் கொண்டாட்டம் குறைவில்லாமல்.
அடுத்த முறை இன்னும் இதை எடுத்து செல்ல ஆர்வ விதை மனதினுள். ஒஜு வரும் பொழுது கதைகளை பற்றி பேசிக்கொண்டே வந்தான். இதே கதையை எத்தனையோ முறை தனியாக சொல்லி இருக்கேன். ஆனால் இந்த முறை இன்னும் ஆர்வமாக கேட்டு இருக்கிறான். எல்லாருடனும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கும் பொழுது குழந்தைகளின் ஆர்வம் இன்னும் கூடியே இருக்கிறது.

அடுத்து கதை கேட்க நேரமில்லாமல் ஓடி வர வேண்டியதாகி விட்டது. இருப்பினும் மனது நிகழ்வை சும்ந்தப்படியே. வீட்டுக்கு வந்தவுடன் ராஜேஷ் அவர்களின் பையன் கதைக்கு feedback கொடுத்து மனதை நெகிழ செய்து இருந்தான். அதே கதையை தெலுங்கில் சொல்லி அசத்தி இருந்தான். அந்த விடியோ பதிவில் இருக்கும் குரலின் கற்பனையும், கதையும் மிக அதிக நாள் ஒலிக்கும்.

கதை சொல்லல் வீடை தாண்டி பொதுவெளியில் வர வேண்டிய அவசியம் உணர்கிறேன். இதை இன்னும் முன்னெடுத்து செல்லல நண்பர்களோடு கை கோர்க்கும் ஆர்வம் மேலெழும்புகிறது. ஒவ்வொருவருக்கும் தனி தனியே நன்றி சொல்ல மனம் விரும்புகிறது. மிக அழகிய மாலைக்கு நன்றி.

ஒரு இளைய நிலாதான் மிஸ் செய்தேன். அங்கு இருபதுக்கும் மேல் குழந்தை நிலாக்கள் மனதில் பொழிந்துக் கொண்டே இருந்தனர். இப்பவும் அவை தளும்பிக்கொண்டே இருக்கிறது. கொழுக்கட்டை கதையை விரைவில் பகிர்கிறேன். அதும் ஒரு குட்டி நிலாவின் ஒளியில் மனம் தடுமாறித்தான் போனது. வேறென்ன வேண்டும்.

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நாளை நினைவுபடுத்தி பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி.. படித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Prabhu said...

Nandri...super...

Prabhu said...

Nandri...super...

chandrasekaran said...

கதை சொல்லி அருமை.

Rajesh said...

Arputhamana pathivu

Anuprem said...

அடடா சூப்பர்....

எனக்கும் உங்க கதை கேட்கணும் போல ஆசையா இருக்கு ...

'பரிவை' சே.குமார் said...

அருமை.

ushasoundar said...

அருமை கிருத்திகா

ushasoundar said...

அருமை கிருத்திகா