நான் எங்கதான்
போறது?
எங்கப் போனாலும் என்னை போராளியாக்கி பார்க்காம
விடறதில்லைன்னு உலகமே கங்கணம் கட்டிகிட்டா
நான் எங்கே போறது?
ஊருக்கு போயிட்டு இன்னிக்கு பெங்களூரு
வந்தாச்சு..எப்பவும் OLA கார் அல்லது ஆட்டோ புக் பண்ற வழக்கம்..திடீர்னு
மனசுக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற கம்புயுனிஸ்ட் பூனை முழிச்சிகிட்டு..கார்பரெட்
முதலைகளை நாம் ஆதரிக்க கூடாதுன்னு மியாவ், மியாவ் ன்னு சுரண்டிச்சி..
சரி..அது கத்தினா சும்மா காதுல வாங்காம
போயிருக்கனும்ல..போவாம அது சொன்ன பேச்சை கேட்டு..தனியொரு ஆட்டோவை வாழ வைச்சு
பாரதத்தை காப்பாற்ற பொட்டியும் கையுமா கிளம்பிட்டேன்.
ஆட்டோக்காரர்கிட்ட "மீட்டர் ஆகித்திறே பர்த்தினி"
என்றேன்.."ஒந்து ஓரை பெலகே இல்வா"..என்றார்(மீட்டர் விலைல ஒன்றரை பங்கு கொடுக்கணும்)
சரின்னு ஏறி உக்கார்ந்தேன்..முன்னாடி போற ஆட்டோ கூப்பிட்டு
ஏம்பா இப்படி சத்தம் வருது..இது இதெல்லாம் செக் செய்ன்னு சொன்னார்..சரி நல்ல
மனுஷர்..நல்ல ஆட்டோன்னு நினைச்சேன்..
ஒரு ரவுண்டு அடிச்சுது..இரண்டு கி.மீ..சரி போகட்டும்னு
பார்த்தேன்.. கட கடவென்று மீட்டர் எகிறியது..விடிகாலை பெங்களூர் குளிர் உறைக்கவே
இல்லை..மனசு கொதிக்குது..என்னடா இது சோதனை என்று..
போகும் பொழுது 150 ரூபாய் கொடுத்த OLA புத்தம் புது ஹுண்டாய் டாக்சி ..அவரின் பணிவு எல்லாம்
மனசுக்குள் திரும்ப தூங்கப் போன
கம்ப்யூனிஸ்ட் பூனையை பெருச்சாளியாக
கடித்து குதறியது..
சரியாக வீட்டுக்கு வந்தது..325 அதைத்தவிர அதில் பாதி..கிட்டத்தட்ட ஐநூறு ரூபாய்..வெறும்
பன்னிரண்டு கி.மீ க்கு..
வரும் வழியில் காமிராவை மியுட் ல் வைத்து ஆட்டோ
ஓட்டுனரின் ஐ.டிய போட்டோ எடுத்துக் கொண்டேன்..இறங்கும் முன். அதற்கு முன் என்று
மீட்டரின் போட்டோ எடுத்துக்கொண்டேன். வீட்டில் இருந்து ஏறிய இடம் வரை உள்ள தூரம்
காட்டும் கூகிள் மேப் போட்டு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.
என் பாதுகாப்பு வளையத்துக்கு வரும் வரை என் போராளி முகத்தை
மறைத்து வைத்தேன். வீட்டின் அருகில் இறங்கினேன்..இது நம்ம ஏரியா..
எஷ்டு கொடு பேக்கு..என்று பேக்கு போல முகம் வைத்துக்
கொண்டு கேட்டேன்..
மீட்டர் துட்டு one and half கொடி
சாக்கு..என்றார்..( இதுல போதும்னு வேற டயலாக்) களத்தில் இறங்கியாச்சு..
"இருவதினாலு கி.மீ க்கு நான் மாரத்தஹள்ளி தாண்டி
போவேன்..என்ன நினைசிகிட்டு இப்படி பண்றீங்க.. எப்படி மீட்டர் இப்படி ஓடுது?
நான் வேற வழில வந்தேன்..கூகிள் வேற வழி காட்டுது
இல்ல..உங்க வழியை கூகிள் மேப் ல போட்டுதான்
காட்டறேன்..சரி அப்படியே வச்சுப்போம்..என்ன சுத்தி சுத்தி போனாலும் அந்த இடம் 15 கி.மி க்கு மேல போவாது" இது நானு.
இன்னாம்மா என்னங்கற ..அப்படின்னு கொஞ்சம் அவர் எகிற..
அமைதியா நான்
எந்த நடவடிக்கைலயும் இறங்க விரும்பல..பிரச்னை செய்ய விரும்பல..இந்தாங்க இருநூறு ரூபாய்..விடிகாலையில் ஒட்டியதுக்கு..உங்க
பணம் எனக்கு வேண்டாம்..அதேப் போல அடுத்தவங்க பணத்தை நீங்க பறிக்க நினைக்காதீங்க..இப்படில்லாம்
செய்யறதாலதான் பெரிய கம்பனிகளை மக்கள் நம்பறாங்க..உங்க மேல நம்பிக்கையை
வளர்த்துக்க பாருங்க.(கிட்டத்தட்ட நான் நல்ல மூடுல இருக்கேன்.தப்பிச்சு போயிடு )என்ற
தொனியில சொன்னேன்..
லிப்ட் ல் கால் வைக்கும் பொழுது பின்னாடி முதுகை பார்த்துக் கொண்டிருந்த இரு கண்கள்
ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது..
ஆமா என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? உலகை திருத்தறேன்னு
ஏதாவது சொன்னேனா? ஜாலியாதானே இருக்க ஆசைபடறேன்..நான் வெறும் முத்து, தங்கம்,
பவுனு..ச்சே..டக்குனு வரல..ஆங்... மாணிக்கம்.. பாட்சா காட்ட வைக்கறீங்களே...நியாயமாரே..
7 comments:
எங்கேயோ போயிட்டீங்க..!
Why don' t you lodge a compliant with the authorities with the details
இதை பகிர்கிரேன்...மேம் உங்கள் அனுமதியோடு....
இப்படி நீங்கள் செய்வதெல்லாம் கட்சி ஆரம்பிக்கிறதுக்காக என்று ஊர்ல பேசிக்கிறாங்க.. அப்படி ஏதாவது ஆரம்பிச்சா கட்சி பொருளாளராகவோ அல்லது கொள்கை பரப்பு செயலாளராகவோ இருக்கம் நம்பள்கி ரெடி
நாமும் கால் டாக்ஸி புக் செய்ய வேண்டியது தான். சில ஆட்டோக்காரர்களின் அராஜகம் தாங்கவில்லை.
நன்றி.
நல்ல அனுபவம். விரைவில் போராளியாகிட வேண்டியதுதான். மக்களுக்கு வழிகாட்ட....
If there is an "App" that would give the distance travelled using GPS it would be helpful to tackle these autowalahs.
Post a Comment