ஒரு அழகிய மாலை..உங்ககிட்ட பேசணுமே ..இன்பாக்ஸ் ஒளிர்ந்தது. அவ்வப்பொழுது சந்தித்த பெயர்தான்..ஆனால் நெருங்கிய பழக்கமில்லை. ஆனால் நம்பி நம்பர் கொடுத்து பேசத் தோன்றியது. யாரை எப்போ எதுக்கு எப்படி சந்திக்கறோம், சில விஷயங்களில் நட்பாகிறோம் என்பது புரியாத புதிர்தான்.
அவர் பேசிய விஷயங்கள் தலைக்குள் ஏற கொஞ்ச நேரங்கள் ஆனது. ஆனால் பேச பேச ஆச்சர்யம. இதிலும் இவ்ளோ விஷயம் இருக்கிறது என்று வியப்பு. அவரிடமிருந்து சில விஷயங்களை நானும்..என்னிடமிருந்து கொஞ்சம் கூடுதல் துணிச்சலையும் கொடுத்து, வாங்கிக் கொண்டோம். அந்த சமயத்தில் பலர் குழப்பி விட கடைசியில் என் நினைவு வந்து இன்பாக்ஸ் செய்து இருக்கிறார். நீண்ட நேர உரையாடலில் கொஞ்சம் இன்னும் தெளிவும் துணிவும் கூடியிருக்கலாம்.
மறுநாள் போலிஸ் பேசி உள்ளனர். ஸ்பாட் பற்றி விசாரித்து உள்ளனர். இவர் அழகாக, தீர்மானமாக பேசினார். தான் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தை கஷ்டப்படுவது எந்தத் தாயால் சகிக்க முடியும். எதிராளிகளை அவதூறு பேசாமல் உறுதியாக தனக்கு நேர்ந்த பிரச்சனையை மட்டும் பேசியுள்ளார். இன்னொரு விஷயம் இது கடவுள் நம்பிக்கை, மதம் சார்ந்தது என்பதால் அவர் மிகுந்த கவனமாக பேசி உள்ளார். அதைத் தவிர ஒரு அமைப்பும் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உறுதி அளித்துள்ளனர. போலிசுக்கு செல்லாவிட்டால் இதெல்லாம் குற்றமில்லை..யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..யார் வீட்டிலும் அத்து மீறலாம்..எதற்கும் அனுமதி தேவையில்லை என்றாகி விடும் என்பதே எண்ணமும்.
சம்பவம் நடந்த பொழுது பிள்ளையார் சதுர்த்தி விழா..பக்கத்து தெருவினர் மிக விமர்சையாக கொண்டாட விரும்பினர். சென்னையின் பரபரப்பான அதே சமயத்தில் கொஞ்சம் அமைதியும் உள்ள நகரத்தின் முக்கிய பகுதி. கொண்டாட்ட உற்சாகம் இப்பொழுதெல்லாம் மிகுதியாக ஆகி சிலருக்கு என்ன செய்கிறோம் என்றே தெரிவதில்லை. இவர் ஆசை ஆசையா குழந்தை போல வளர்த்த மரத்தின் ஒருப் பகுதி பிள்ளையாரை சிறிது மறைத்து உள்ளது. (அப்படி தெரியவில்லை இருப்பினும் மறைத்ததாக எண்ணி உள்ளனர்) கிளைகளை வெட்ட இவரிடம் அனுமதி வாங்கி உள்ளனர். இவர் யோசிக்கிறேன் என்று சொல்ல..மீறி கொஞ்சம் கிளைகளை வெட்டுகிறோம் என்று மரத்தில் ஏறி உள்ளனர். எல்லாரும் கொடுத்த உற்சாகத்தில் மரத்தில் ஏறிவர் இவர் சொல்ல சொல்லக் கேக்காமல் இவரின் வருத்தம், கோபம், ஆற்றாமை எல்லாவற்றையும் உதறிவிட்டு கூட்டம் கொடுத்த சத்தத்தில் கொஞ்சம் தான் செய்வது என்னவென்று அறியாமல் வெட்டியே விட்டார். எக்கச்சக்க கிளைகளை. சில கூடுள்ள கிளைகளும் அடக்கம்.
கணவரும், அவரும் வீட்டுக்கு வரும்பொழுது வைத்த மரம்..வெளியில் தெருக்காரர்களும் கார் நிறுத்துவார்கள்..அவர்களுக்கும் நிழல் கொடுத்து வந்திருக்கிறது. இவர் திரும்ப திரும்ப மரத்தை வெட்டுப்படாமல் காப்பாற்றுவது பற்றிய கவலை,, காம்பவுண்டுக்குள் அத்து மீறி வெட்டியவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சென்றது இரண்டும் இவரை பாதித்து இருக்கிறது. அதைத் தவிர அது உணர்வோடு கலந்த மரம்.
நிழல் என்ற அமைப்பு இருக்கிறது. http://www.nizhaltn.org/ அதன் ட்ரஸ்டி திரு. ஷோபா மேனன் அவர்கள் போலீசில் தகவல் சொல்ல அறிவுறுத்தி உள்ளார். சுற்றம், நட்பு எல்லாரும் இதற்கு எதிர்ப்பு. தேவையில்லாமல் அக்கம்பக்கத்தை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று. மரத்துக்கு அதுவும் கிளைகளுக்கு போய் பேச வேண்டுமா என்று.
அன்றுதான் எனக்கு போன் செய்தார். நீண்ட நேரம் பேசினோம். நான் மெசேஜில் கொடுத்தது ஒரு ஹக் அல்லது அணைப்புதான். மறுநாள் போலீசில் நிதானமாக போய் பேசினார். அவர்களை குற்றம் சொல்லாமல் மரத்தையும் அதன் பிணைப்பையும், அதன் வளர்ந்த விதத்தை..அதை வெட்டியதால் அவர்களுக்கு நடந்த மன சங்கடங்கள் ..கொஞ்சமாக வெட்ட அனுமதி அளித்தும் இப்படி அத்து மீறியது எல்லாம் தெரிவித்து இருக்கிறார்.
அன்றுதான் எனக்கு போன் செய்தார். நீண்ட நேரம் பேசினோம். நான் மெசேஜில் கொடுத்தது ஒரு ஹக் அல்லது அணைப்புதான். மறுநாள் போலீசில் நிதானமாக போய் பேசினார். அவர்களை குற்றம் சொல்லாமல் மரத்தையும் அதன் பிணைப்பையும், அதன் வளர்ந்த விதத்தை..அதை வெட்டியதால் அவர்களுக்கு நடந்த மன சங்கடங்கள் ..கொஞ்சமாக வெட்ட அனுமதி அளித்தும் இப்படி அத்து மீறியது எல்லாம் தெரிவித்து இருக்கிறார்.
போலிஸ் அவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து இருக்கிறது. இனி வெட்ட மாட்டோம் என்று வாக்கு அளித்து இருக்கிறார்கள். வருத்தமும் தெரிவித்து கலைந்து சென்று உள்ளனர்.
மரம் வெட்டுவதை பற்றி புகார் அளித்தால் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மரம், மனிதம் விலங்கு என்று இல்லாமல் உணர்வோடு பிணைந்த எல்லாமே உயிரோடு இருப்பவைதான். ஏற்கனவே கான்கரிட் காடுகளில் இருக்கும் ஒன்று இரண்டு மரங்களையும் வெட்டிவிட்டு என்ன சாதிக்க முடியும்? இதில் மரம்தானே என்று விடாமல் இதற்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிருபித்த என் தோழி சுமதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மரம் காப்போம்..கிளைகளையும் சேர்த்தே..
3 comments:
எதற்காக மரத்தின் மேலுள்ள பகுதிகளை வெட்டினார்கள்...
நிழல் அமைப்பிற்கும் அதன் பின் போலீசுக்கும் சென்ற சகோதரியை வாழ்த்துவோம்.
மரம் காப்போம்.
மரம் காப்போம்
அவர்களை குற்றம் சொல்லாமல் மரத்தையும் அதன் பிணைப்பையும், அதன் வளர்ந்த விதத்தை..அதை வெட்டியதால் அவர்களுக்கு நடந்த மன சங்கடங்கள் ..கொஞ்சமாக வெட்ட அனுமதி அளித்தும் இப்படி அத்து மீறியது எல்லாம் தெரிவித்து இருக்கிறார். = இதே மாதிரி எங்கள் வீட்டு வாசலில் இருந்த எலுமிச்சை மரத்தை வெட்டினார்கள், சாமி வாகனம் வருகிறதென. ஜாதித் துவேஷம். = பலகை -
உணர்வின் நிழல். = இன்னும் அந்த வேதனை மனதில் இருக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் அருமை மகள் Kirthika Tharan
Post a Comment