இப்பொழுது கியூப் டைஸ் என அழைக்கப்படும் ஆறு சதுர முக பக்கங்கள் கொண்ட
தாய விளையாட்டுக்கும் நம் இந்திய தாய விளையாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. நம்
தாயக்கட்டைகள் நான்கு முகங்கள் உடையது.
மரம் மற்றும் உலோகங்களில் ஆன விளையாட்டு பொருள்.
அந்த காலத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டுகள் அனைத்துமே ஒரளவுக்கு எளிதாக அனைத்து இடத்திலும் விளையாடும் வண்ணம் இருந்தன. உள்ளரங்கு விளையாட்டுகள் எனப்படும் இண்டோர் கேம்ஸ் க்கும் அதிகம் செலவழிக்க தேவை இருந்ததில்லை. மனிதர்களுக்கு மதிப்பு இருந்த காலம். விளையாட மனிதர்கள் இருந்தால் போதும்..எதையாவது வைத்து கொண்டு விளையாடிவிடலாம். விலையுர்ந்த பொம்மைகளும் ,ஐ-பாட், ப்ளே ஸ்டேஷன்களும் தேவைப்படாத காலங்கள் பொற்காலங்கள்தான். அடுத்த தலைமுறையை வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு சரியாக வளர்க்க முடியவில்லையோ என்றும் உணர வேண்டி இருக்கிறது.
பைன் மோட்டார் ஸ்கில்ஸ் எனப்படும் கை மற்றும் விரல்கள் மூளைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையிலும் உண்டு. இரு கைகளால் உருட்டி போடும்பொழுது இரு பக்க மூளையை தூண்டும் பயிற்சி தொடக்கத்திலையே கிடைக்கிறது. தாயம் சூது எனவும் சொல்லப்படுவது உண்டு. தாயக்கட்டை பார்க்க எளிதான விளையாட்டாக , சிறு குழந்தை கூட விளையாட முடிந்ததாக இருந்தாலும் இதில் கூட ஆட்ட திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும். சகுனி தருமரை தோற்க அடித்தது போல. தருமர் தருமத்தின் நினைவில் இருந்தார். சகுனி தாயத்தின் நினைவில் இருந்ததால் விளையாட்டில் ஜெயிக்க முடிந்தது. யாராக இருந்தாலும் விளையாட்டை அர்ப்பணிப்போடு விளையாடுபவர்களுக்கு விளையாட்டு வேடிக்கை ஆகாமல் வெற்றியை அள்ளித்தரும்.
புறாக்கு போரா என்று வடிவேலு சொன்னது போல ஒரு தாயத்தால் நாடே போய் குருஷேத்திர போர் வந்தது. நமக்கு பகவத் கீதையும் கிடைத்தது. எனவே தாய விளையாட்டு நம் ரத்தத்தோடு பின்னி பிணைந்தது. எத்தனையோ யுகங்களாக விளையாடி கொண்டு வருகிறோம். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. உடனே ஆப் ஸ்டோரில் தேடி ஸ்மார்ட் போனில் குழந்தைகளுக்கு கொடுப்பதை விட அவர்களோடு அமர்ந்து விளையாண்டால் உறவுகளும் மேம்படும். தொலைக்காட்சி நேரமும் குறையும்.
இந்த விளையாட்டுக்கு பின் மிகபெரிய வரலாறும் உண்டு. இந்தியாவில் மட்டுமில்லாமல் கிரேக்கம், எகிப்து போன்ற நாடுகளிலும் விளையாடி செய்து உள்ளார்கள். கிரேக்கத்தில் முதன் முதலாக ஆடு எலும்பில் தாயக்குழி போட்டு தாயக்கட்டை செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் ஆறு சோழிகள், அல்லது ஒரு பக்கம் தேய்த்த புளியங்கொட்டைகள் வைத்தும் விளையாடுவது உண்டு. நான்கு சோழிகள் திரும்பி இருந்தால் நான்கு என்று கணக்கில் வரும். அதை தவிர மரத்தால், உலோகத்தால் ஆன தாயகட்டைகள் பல்வேறு விதங்களில் வந்துவிட்டன. கேசினோவில் கூட தாயத்தை வைத்துதான் டைஸ் கேம் என்று சக்கை போடு போடுகிறார்கள். எந்த விளையாட்டிலும் இருக்கும் சூதை கண்டுபிடிக்கும் மனித மனம். டைஸ் எடுத்து ஒரு பக்கம் லேசாக தேய்த்து விட்டால் நாம் போட நினைக்கும் எண்ணை போடலாம். சூதுக்கே சூது செய்யவும் மனிதன் அறிவான்.
தாயக்கட்டங்கள் தரையில் பெரும்பாலும் வரையப்படும். எங்கள் பாட்டி வீட்டில் அந்த காலத்தில் ஒரு இடத்தில் ஒரு இடத்தில வரையப்பட்டு இருக்கும். சிலர் மரத்தில் செய்து வைத்து இருப்பார்கள். துணியில் கூட வடிவம் செய்து வைத்து கொள்வது உண்டு. நிறைய வகைகளில் விளையாடலாம். இதில் பழிவாங்கும் படலம் கூட உண்டு. ஒருவரை பின் வைத்து துரத்தி வெட்டி வீழ்த்துவது இலக்காக இருக்கும். வெறி பிடித்து விளையாடிய காலங்கள் நினைவில அசை போடுகின்றன. உணவு, தூக்கம் கூட போய் விளையாடும் விளையாட்டு. அந்தளவுக்கு ஜெயிக்கும் உத்வேகம் கொடுக்கும். இதில் கணக்கும் கற்று கொள்ளலாம். ப்ராபபிளிடி தியரி தாயங்களில் அடங்கி உள்ளது.
இது ஒரு வித கட்டம். இரண்டு முதல் நான்கு நபர்கள் வரை விளையாடலாம்.
ஒருவருக்கு ஆறு ஆட்ட காய்கள் வைத்து கொள்ளலாம். ஆட்ட ஆரம்பத்தில் நடுவில் வைத்து கொள்ள வேண்டும். தாயம் போட்டே ஆட்ட காயை வெளியே கொண்டு வர வேண்டும். தாயக்கட்டை அல்லது சோழிகளை போட்டு எந்த எண் வருகிறதோ அத்தனை கட்டங்கள் நகர்த்த வேண்டும்.
நடுவில் இருக்கும் சதுர கட்டத்தில் இருந்து ஆட்டத்தை துவங்க வேண்டும். தாய கட்டையில் போடும் எண்ணிக்கைக்கு தகுந்தாவாறு ஆட்டகாயை நகர்த்த வேண்டும். வழியில் எதிர் அணியின் ஆட்ட காய் இருந்தால் வெட்ட வாய்ப்பு வரும். குறுக்கு கோடு போட்ட கட்டங்களில் வெட்ட முடியாது. அது சேப்டி ஜோன் .
ஒரு காய் முழுக்க ஒரு சுற்று வந்துவிட்டால் அது ஆட்டக்காரர் அந்த காயை தக்க வைத்து கொள்ளலாம். முதலில் ஆறு காய்களையும் ஒரு சுற்று முடித்து வந்த்வருக்கே வெற்றி. ஆனால் பல தடைகளை தாண்டிதான் வர வேண்டும்.
சரியாக வெட்டுபடாமல் காய் நகர்த்த தெரிந்து இருக்க வேண்டும்.
இது இன்னொரு ஆட்ட கட்டங்கள். இது சுற்றி, சுற்றி வெட்டுபடாமல் உள்ளே வந்து சேருபவருக்கே வெற்றி.

தாயம்...
நான் வளர்ந்தவுடன் எங்கள் ஊருக்கு ஏரோப்ளேன் தாயக்கட்டம் என்ற புது
வகை அறிமுகமானது. அதன் படம்தான் இது. இது இருவர் இரு முனைகளில் ஆரம்பித்து தலை வரை
சென்று கடைசி கட்டத்தில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு நகர்தலுக்கும் தாயத்தை உருட்ட
வேண்டும்.
பலவிதங்களில் விளையாடும் தாயத்தை ஒருமுறை குழந்தைகளோடு அமர்ந்து
விளையாடி பார்த்தால் டெக்னாலஜி, வளர்ச்சி என்று கூறிக்கொண்டு நாம் எதை இழந்து
இருக்கிறோம் என்ற அருமை புரியவரும். சிறு, சிறு சந்தொஷங்களில் ஒளிந்து இருக்கிறது
வாழ்க்கை. பழங்கால விளையாட்டுகள் மேலே வந்தால் வருவது விளையாட்டுகள் மட்டுமல்ல...நம்
வாழ்கையின் சந்தோஷங்களும்.
2 comments:
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......
http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_14.html
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
here is no photoes...
I can
t see....
Vetha. Langathilakam.
Post a Comment