ரொம்ப வாரமாக தேர்வு தேர்வுன்னு சொல்லி எனக்கே போரடித்து விட்டது..அதனால் ரிலாக்ஸாக படிக்க ஒரு ஆச்சர்யமான விஷயம் ..அதே சமயம் சிலருக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம்..சிலருக்கு உபயோகமாகவும்,சிலருக்கு வாய்ப்பாகவும் ,வேதனையாகவும் இருக்கலாம்.
அப்படி என்ன விஷயமா ? அந்த காலத்துல ஆறு வயசு ஆனாதான் பள்ளிக்கூடம் போவனும்..பிறகு கையால தலையை சுத்தி காதை தொடணும் ,அப்புறம் மூணு வயசு..அப்புறம் இரண்டு வயசு..அப்புறம் ஒன்றரை வரைக்கும் வந்து ..இப்போதெல்லாம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கே பாடம் எடுக்கிறார்கள். அது பகல் எல்லாம் தூங்கும்..ஆனா நம்ம ஆட்கள் நல்லா பாட்டு போட்டு அது கேட்கும் என்று நம்பி கொண்டுதான் இருக்கிறார்கள்..ஆனால் நம்பிக்கைதான் வாழ்க்கை.
சரி விஷயத்துக்கு வருகிறேன்..இன்று சொல்வது நான்கு மாத குழந்தைக்கு பொது அறிவை ஊட்டுவது எப்படி ? ...என்று, தாய்பால் ஊட்டுவாங்க..புட்டிப்பால் ஊட்டுவாங்க ? அறிவா? அப்படின்னு கேட்டா நீங்க இந்த நூற்றாண்டை சேர்ந்தவர் இல்லை என்பது போல ஒரு கூட்டமே பார்க்கும்..அதனால நம்ம பொது அறிவை வளர்க்க அது எப்படின்னு கட்டுரையில பார்ப்போம் ..
குழந்தையை எடுத்துகொண்டு படுக்க வைக்கவும் ,அந்த பொது அறிவை ஊட்டதான்..எப்படி இருந்தாலும் நாலு மாச குழந்தையை கிளாஸ்ல பெஞ்ச் போட்டு உக்கார வைக்க முடியாது இல்ல..அதனால இப்படியே ஊட்டுவோம்.
கொஞ்சம் நம்ப முடியவில்லை இல்லையா..ஆனால் நிஜம்..வெறும் ஆங்கிலம் இல்லாமல் கணக்கு,இசை,இன்னும் சில மொழிகளில் உள்ள முக்கிய வார்த்தைகள் எல்லாம் கற்றுகொடுக்கமுடியும். இதெல்லாம் வித்தை இல்லை..நிஜம்.பிளாஷ் கார்ட்ஸ் (Flash Cards) என்று அழைக்கப்படும் பலவித கார்டுகளை அடுக்கி வைத்து குழந்தை கண்முன்னால் காட்டும் முறை.வேகமாக மாற்றும் பொழுது ஒரு படம் போல மூளையில் பதியும்.
குழந்தைகளுக்கு போட்டோக்ராபிக் மெமரி மிக அதிகமாக இருக்கும்...மூன்று வயது வரை அவர்கள் மூளை வளர்ச்சி மிக்க அபரிதமாக இருக்கும்.அப்பொழுது பார்க்கும் அனைத்தையும் நினைவில் இருத்தி கற்றுக்கொள்ளும். அந்த முறையில் கற்றுகொடுக்க ஏற்பட்டது பிளாஷ் கார்ட்ஸ்.
இதற்காக இணைய தளங்கள், நிறுவனங்கள் கூட ஏற்படுத்தப்பட்டுவிட்டன.இப்பொழு து குழந்தைகளும் படிக்க ஆரம்பித்து விட்டனர. இந்த விடியோக்களை பார்த்தால் தெரியும். இது பாகம் ஒன்று..அடுத்த பாகத்தில் பிளாஷ் கார்டுகள் எப்படி உபயோகபடுத்துவது என்று விளக்குகிறேன்.
https://www.youtube.com/watch? v=oTMuU5Q-JdY இந்த லிங்க் ல் குழந்தை படிப்பது தெரியும்..
இப்பொழுது பார்க்கலாம் சிறு குழந்தை பாடம் படிப்பதை ..
https://www.youtube.com/watch? v=ATKTKOLu4QQ
ஏழு மாத குழந்தை பாடம் சரியாக சொல்லுவதை பார்க்கலாம்..
https://www.youtube.com/watch? v=H_omY6L44M4
சரி விஷயத்துக்கு வருகிறேன்..இன்று சொல்வது நான்கு மாத குழந்தைக்கு பொது அறிவை ஊட்டுவது எப்படி ? ...என்று, தாய்பால் ஊட்டுவாங்க..புட்டிப்பால் ஊட்டுவாங்க ? அறிவா? அப்படின்னு கேட்டா நீங்க இந்த நூற்றாண்டை சேர்ந்தவர் இல்லை என்பது போல ஒரு கூட்டமே பார்க்கும்..அதனால நம்ம பொது அறிவை வளர்க்க அது எப்படின்னு கட்டுரையில பார்ப்போம் ..
குழந்தையை எடுத்துகொண்டு படுக்க வைக்கவும் ,அந்த பொது அறிவை ஊட்டதான்..எப்படி இருந்தாலும் நாலு மாச குழந்தையை கிளாஸ்ல பெஞ்ச் போட்டு உக்கார வைக்க முடியாது இல்ல..அதனால இப்படியே ஊட்டுவோம்.
கொஞ்சம் நம்ப முடியவில்லை இல்லையா..ஆனால் நிஜம்..வெறும் ஆங்கிலம் இல்லாமல் கணக்கு,இசை,இன்னும் சில மொழிகளில் உள்ள முக்கிய வார்த்தைகள் எல்லாம் கற்றுகொடுக்கமுடியும். இதெல்லாம் வித்தை இல்லை..நிஜம்.பிளாஷ் கார்ட்ஸ் (Flash Cards) என்று அழைக்கப்படும் பலவித கார்டுகளை அடுக்கி வைத்து குழந்தை கண்முன்னால் காட்டும் முறை.வேகமாக மாற்றும் பொழுது ஒரு படம் போல மூளையில் பதியும்.
குழந்தைகளுக்கு போட்டோக்ராபிக் மெமரி மிக அதிகமாக இருக்கும்...மூன்று வயது வரை அவர்கள் மூளை வளர்ச்சி மிக்க அபரிதமாக இருக்கும்.அப்பொழுது பார்க்கும் அனைத்தையும் நினைவில் இருத்தி கற்றுக்கொள்ளும். அந்த முறையில் கற்றுகொடுக்க ஏற்பட்டது பிளாஷ் கார்ட்ஸ்.
இதற்காக இணைய தளங்கள், நிறுவனங்கள் கூட ஏற்படுத்தப்பட்டுவிட்டன.இப்பொழு
https://www.youtube.com/watch?
இப்பொழுது பார்க்கலாம் சிறு குழந்தை பாடம் படிப்பதை ..
https://www.youtube.com/watch?
ஏழு மாத குழந்தை பாடம் சரியாக சொல்லுவதை பார்க்கலாம்..
https://www.youtube.com/watch?
No comments:
Post a Comment