Friday, September 7, 2018

பெண்ணின் காதல்.

" அபிராமி...இந்த விஷயத்தை தொட மனமில்லை. ஏன் என்றால் . கொலை, தற்கொலை எதற்காகவும் சமூக வலைத்தளத்தில் ஆதரித்தோ, எதிர்த்தோ எழுதக்கூடாது என்பது என் முடிவு.

அனிதா விஷயத்திலும் மவுனமே காத்து வந்தேன். அந்த தற்கொலை தியாகபடுத்தி அதீத செய்திகள் வந்தால் மேலும் பல மாணவர்களை கையில் எடுக்க தோன்ற வைக்குமோ என்ற பயம் உண்டு. நமக்கு தெரியாத ஒரு அதீத சக்தி எழுத்துக்கு உண்டு. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும்.

அபிராமியிலும் மவுனத்தை எடுக்க விரும்புகிறேன். ஆயிரம் இருந்தாலும் கொலை அளவுக்கு உச்சம் தொடும் பொழுது அதை நூறு சதவிகிதம் எதிர்க்கிறேன். 

இந்த சமயத்தில் சில விஷயங்கள்..domestic abuse பற்றிய விழிப்புணர்வு. முகநூல் வரும் பல பெண்களுக்கு வார்த்தைகளாம் நடப்பது. 

ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பேசும் பொழுது அது உண்மையாகி விட சாத்தியமுண்டு. 

நீ ஃபேஸ்புக் வந்திருக்கிறதே சாட் செய்யவும், ஆண்களுடன் பழகவும் என்ற பார்வை பல ஆண்களுக்கு இருக்கு. ப்ரொஃபைல் எதுக்கு மாத்தனும்? ஆண்களிடம் லைக் வாங்கி அவர்களை இம்ப்ரஸ் செய்யவே..என்றும் எதுக்கு எப்போ பாரு வாட்ஸ் அப் .யார்கிட்டயோ பேசிக்கிட்டுருக்கா இப்படியும்..

ஆண்கள் இதற்காகவே வலை வீசுவது நடக்காமல் இல்லை. சிறு பாராட்டு கூட இல்லாமல் உழைத்து, சலித்து எந்த recognition ம் வீட்ல கிடைக்காத பெண்களுக்கு லைக்ஸ் கூட பெரும் வரமாய் தோன்றுகிறது. சில சமயம் அது அடிமை படுத்தும் விஷயமாகவும்..அதற்காக எதை வேண்டுமானலும் செய்து எழுதுவது..

அதாவது செய்ததை எழுதி லைக்ஸ் வாங்குவது வேறு...இதற்காகவே எதையாவது செய்து எழுதுவது..எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி..கூட்டங்களில் பங்கெடுப்பார், பிரபலங்களை சந்திப்பார்..எல்லா இடத்திலும் செல்ஃபி. தமிழில் எழுதி வாங்கி பதிவார்..அவருக்கு லைக்ஸ் கொடுக்கும் சுகம்..அதற்காக ஒரு அடி அதீதமாய் எடுத்து வைப்பார்..அவருக்கு அதுதான் மகிழ்வாக இருக்கும்..பெண்களுக்கான சமூக அழுத்தங்கள் எளிதில் புரியாது.

ஏதாவது ஒரு விதத்தில் ஆணுக்கு அங்கிகாரம் .அல்லது அதிகாரமாவது கிடைக்கும். அதிகாரமும் இல்லை..அங்கிகாரமும் இல்லை.உழைப்பும், பிள்ளை வளர்ப்பு..கூடுதலாய் நாகரிக வளர்ச்சியில் சக மனிதனின் வார்த்தைகளற்ற தனிமை வேறு..இணையம் தவிர வெளி நட்புகள் குறையும் பொழுது தனிமையின் ஆபத்து அதிகரிக்கிறது.

இதில் துணையின் வார்த்தைகள். சில  ஆண்கள் இப்பொழுதெல்லாம் பல கெட்ட வார்த்தைகளை மனைவி மீது பிரயோகிப்பதை கேள்விப்படுகிறேன்.எதுக்குடி வாட்ஸ் அப் ல அப்படி போஸ் தரன்னு ஒரு மனைவி கணவன் கேட்டதாய் சொன்னாள்.

இதுப்போன்ற விஷயங்கள் நடக்கும் பொழுது பொருளாதர, சமூக சுதந்திரம் அவசியம் தேவை. ஒரு பெண் பத்து, இருவது வருடம் வீட்டில் இருக்கிறாள். கேரியர் வளர்த்துக்கொள்ள கண்டிப்பாக சாத்தியமில்லை. காமம் பெண்ணுக்கும் இருக்கும்தானே...அந்த சமயத்தில் ஏதோ தவற வேண்டியிருக்கு. அப்பொழுது தன் தவறை உணர்ந்து சரி செய்திட ஆணுக்கு இருக்கும் வாய்ப்பு பெண்களுக்கு கிடையாது. அதாவது ஆண் மனைவிக்கு தெரியாமல் ஏதாவது செய்துவிட்டால் ஒரளவுக்கு மன்னிப்பு கிடைக்க வாய்ப்புண்டு ..திருமண பந்தத்தில் சீட்டீங் மிகப்பெரிய தவறு ..ஆனால்   இந்தியாவில் நடப்பெதெல்லாம் மனமொற்றிய திருமணமா என்ன? 

சிறு வயது திருமணம் கூட தவறுதான். இன்னும் என்னால் எல்லாம் அந்த அழுத்ததில் இருந்து வெளியேற , மன்னிக்க் முடியவில்லை. விவரம் தெரியுமுன்னே குடும்பம் .பிறகு குழந்தை. உலகமே குழந்தையோடுதான் பார்த்தேன் எனலாம் அது வரை பள்ளி,  கல்லூரி மட்டும்தான். நாலு இடம் போய் .சம்பாதிக்க அல்லல்பட்டு..தன் காலால் தானே நிற்கும் சுதந்திரம் பெண்களுக்கு இங்கு தருகிறோமா? சுயம் எந்தளவுக்கு கற்றுத் தருகிறோம்? 

காதலில் கூட பக்குவமாய் இருக்க வேண்டும் என ஏதாவது பேசுகிறோமா? எதிர்பாலின இனக்கவர்ச்சி ஐம்பது வயதில் கூட நடக்கிறது  என்பதை அறிவோமா? 

அதுமட்டுமல்ல..இணையம், உலகம், விளம்பரம், சினிமா எல்லாவற்றிலும் அதீத காமம் நிரம்பி வழிகிறது. இளைய சமூகத்திற்கு காமம் ஒரு சிறு விஷயம்.அதை தாண்டி அற்புத உணர்வுகள் உண்டு என்று உணர்வோமா?

ஒரு ஆண் நண்பர்..அவருக்கு காமம் மிக முக்கியமாய் இருக்கும். அதைதாண்டி அவருக்கு உலகம் இருக்கு என்று உணர்த்த முயற்ச்சித்தேன்..ஆனால் உலகமே அவருக்கு அதுவாக ஆனது. ஆண், பெண் ஈர்ப்புதான் உலகில் எல்லாம் என்பதை தீவிரமாக நம்புகிறார். ஏன் என்றால் அவருக்கு கற்பித்த உலகம் அது. 

நாலு நண்பர்களோடு மகிழ்வாய் இருக்க தெரிந்தவர்களுக்கு காம இச்சை கூட பிறகுதான்..மாதக் கணக்கில் சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சுகம், குழந்தை வளர்ப்பில் ஒரு சுகம் .அதையெல்லாம் விட திறமை வளப்படுவதுதான் சுகம்  என்னைக் கேட்டால் நாள் முழுக்க இதுப்போல எழுத சொன்னால் சோறு தண்ணியில்லாமல் எழுதுவேன்..இதுப்போல் உலகில் பிறந்த அனைவருக்கும் தன்னை மறக்குமளவுக்கு ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கும்.

சச்சினுக்கு கிரிக்கெட், ஸ்ரீதேவிக்கு நடிப்பு, கமலுக்கு சினிமா , ஸ்டெபிக்கு டென்னிஸ் இதுப்போல இவர்களின் flow சிறு வயதிலியே தெரிந்து அதில் மட்டும் ஈடுப்பட்டனர்.  இந்த flow எப்படி இருக்க வேண்டும் என்றால் தானும் உலகம் மறந்து அதில் முழ்கி உலகமும் அதனால் ஈர்க்கப்படும். அகாஸ்டியின் டென்னிஸ் பந்துகள் பறக்கும் பொழுது அதை தவிர  கண் எதயும் பார்க்க விரும்பாது..அதுதான் அழகான flow energy.. இதற்கு முன்னால் காமம் எல்லாம் சிறு விஷயம்.

ஆம் இயற்கை உடலுக்கு இரு பசி அளித்துள்ளது. உடற் பசி அதீதமாவதும், அதற்கு உணவளிக்காமல் நீண்ட நாள் இருப்பதும் தவறுதான். அப்பொழுதுதான் அது தன் தேடலை ஆரம்பிக்கும். அப்பொழுது தவறுகள் நடக்க் அதீத வாய்ப்புண்டு
 என்னைக் கேட்டால் விபச்சாரம் என்ப்தை பொதுவாக்கி..அந்தப் பசி ஏற்பட்டால் ஹோட்டல் போய் சாப்பிடுவது போல் விடுதிக்கு அதாவது பாலின வேறுபாடு இல்லாத , மனதுக்கு பாதிப்பு இல்லாத, வெறும் உடல் பசி தீர்க்கும் விபச்சாரம். அவ்ளோதான்..பிறகு குளிச்சிட்டு ஹப்பாடா.முடிச்சிட்ட்டோம். வேலய் பார்க்கலாம் போன்ற ஒரு விபச்சாரம்..ஆம் இது இருபாலாருக்கும் பொதுவில் இருக்கும் உணர்வு..இருவரும் தீர்த்துக்கொள்ள சுதந்திரமும். அவ்ளோதான்..அதுக்கு மேல் காமத்தில் பேச ஏதுமில்லை.

மிக மிகச்சிறு விஷயத்தை ..அதாவது காலை உணவுப்போல அது இரவின் உடலின் உணவு..அதைபோய் புனிதம், லொட்டு, லொசுக்கு என்றுப்போய். பெண் உடலை அதீதமாக்கி அவளை உடலுக்காக ஆகா, ஓகோ என்று சொல்லி.
அவள் திறமைகளை மேலே வராமல் முடக்கி.. அவள் உடலே பிரதானம்..அதுக்காக என்ன வேணா செய்யலாம் என்று தேவையில்லாமல் போற்றி..நிஜமா வடிவேலுப் போல் ஷ்ப்ப்ப்ப்ப்ப்பா..முடில என்று தோன்றுகிறது.


சமிபத்தில் ஒரு கேள்வி பதில் இணையத்தில். பெண் ஆணை கற்பழிக்கும் வாய்ப்பு இருக்கா என்று...அதற்கு ஒரு ஆண்..அந்த கொடுப்பினை எல்லாம் எங்களுக்கு இருக்கா என்ன என்று பதில் ..நகைச்சுவையாக இருப்பினும்..காமம் என்பது ஆணுக்கு மகிழ்வை மட்டும் தருவதாகவும்..பெண்ணுக்கு அத்து மீறல், வலி போன்றவையாகவும் இருக்கு. அதில் புனிததையும் வேறு போர்த்தி..தேவடியா, கெட்டுப்போனவ, ஏமாத்துக்காரி என்ற பட்டங்கள் கொடுக்கவும் தவறுவதில்லை..இந்தப்பக்கம் போற்றல். அந்தப்பக்கம் தூற்றல்..வசவெல்லாம் பெண் சார்ந்த வன்முறை சொற்கள்..அம்மா, அக்கான்னுட்டு ச்ச்சேய். எப்படா சக மனுஷியா பார்ப்பீங்கன்னு அலுப்பு வருது.  

ஒரு ஆண் பிரபலம்..அவரோட லைக் எல்லா பெண்களின் புகப்படத்திலும் இருக்கும்
 அவள் எழுத்தில், திறமையில் கவனம் வைக்கும் ஆண் மிக குறைவு. அதை ஊக்கபடுத்தும் ஆண்களும் பசுத்தோல் போர்த்திய புலியாகவே வல்ம் வருகிறார்கள் இப்படி எல்லாத்திலும் காமத்தை, உடலைப் போற்றுவதை மட்டும் பார்க்கும் பெண்கள் அதற்கு விட்டில் பூச்சியாக மாறும் வாய்ப்புண்டு 

போகும் வேகத்தில் கணவன், மனைவி ரொமான்ஸ் என்பதையே தொலைத்துவிட்டோம். காதல் என்றாலே அது கணவன் மனைவிக்கு இல்லை என்றாகிவிட்டது போன்ற ஒரு காலகட்டத்தில் உள்ளோம்.  உறவு என்பதை டேக் இட் கிராண்டட்..என்று மிக அலட்சியப்படுத்துகிறோம்.பெரும்பாலும் பெண்களுக்கு அதிகம்..ஆணுக்கு வெளி உலகம் இருப்பதால் இதில் இருந்து தப்பிவிட வாய்ப்புண்டு. . 

இணையத்துணை, ஆபிஸ் துணை அல்லது இணையவர். ( இணையத்தில்  இணைந்ததால் :) )  என்னுமளவுக்கு ஆண், பெண் நட்புகளை இங்கு காண்கிறேன். சரியா , தவறா இதெல்லாம் புரியாத காலமாகிவிட்டது. அது குடுமபதை பாதிக்காதவரை சரி..அது அதீதமாவதும் பிர்ச்சனைதான்.  அதைதான் கள்ளக்காதல் என்று தினம் தந்தியும், பூவும் கொச்சைப்படுத்தி பெரிதுப்படுத்துகிறது. டாய்லெட் கதவை திறந்து பார்க்கும் அசிங்கம்தான். அடுத்தவரின் அந்தரங்கத்தை திறந்து பார்ப்பதும். எங்கும், எதிலும் பெண்ணுடலை மட்டும் மையப்படுத்தி..அவளை மட்டும் அசிங்கப்படுத்தும் சமூகமா மாறிவிட்டோம்.

மாணவர்களுக்கு போன அக்சஸ் போல் திறமை ஊக்கப்படுத்தும் அக்சஸ் செய்துள்ளோமா? காமத்தை மலிவாக்கியது போல அறிவியலை, கணிதத்தை, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை சந்தோஷமாக்கி கொடுத்துள்ளோமா?  வாசிப்பதில் ஆர்வம் உள்ளவனுக்கு , ஆராய்ச்சியில் , விளையாட்டில் , சம்பாதிப்பதில் முனைபவர்களுக்கு காமம் பார்ட் டைம் கூட இருக்காது..ஜஸ்ட் லைக் தட் கடப்பார்கள். பெண்களுக்கும் இதை பொதுவாய் வைக்கிறேன்.

ஆம் காமம் தாண்டி .திறமைகளை கண்டெடுக்கும், வாசிப்பை அதிகப்படுத்தும், சமூக சார்ந்த செயல்களுக்கு தயார்படுத்தும் பணி மிக அவசியம் ..அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு அழகான நாட்டை நாம் உருவாக்கி தர முடியும் . அதைதான் நாம் ஒவ்வொரு செயலிலும் செய்ய வேண்டும். அதுவரை காமத்தை பேசுவதை கூட குறைத்துகொள்ளும் அவசியத்தில் உள்ளோம்.

17 comments:

Uma said...

எல்லாமே பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் கீர்த்தி. செயல்பாட்டுக்கு வரவேண்டும். அடுத்ததடுத்த தலைமுறையினருக்காவது சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய பெற்றோராக நாம் இருப்பது மிக அவசியம்.. தம்பதிகளில் யாராவது ஒருவராவது குழந்தைகளை உருவாக்கும் பணியை சீர்பட கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Uma said...
This comment has been removed by the author.
Unknown said...

கீர்த்திகா,

அடர்த்தியான கருத்துக்கள். இரு முறை வாசிக்க வேண்டியிருந்தது.

அபிராமியின் கள்ளக்காதலையும் அவள் கணவரின் தலைவர் தரிசனத்தையும் இக்னோர் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். இவை இல்லாவிடில், நிறைய ஜர்னலிஸ்ட நாளை வீட்டில்தான். நிற்க.

காமம் குறித்து என் எண்ணம் வேறாய் இருக்கிறது. லவ் இல்லாத காமம் அனிமல் இன்ஸ்டின்க்ட். இவால்வ் ஆகிவிட்டோம்தானே நாம்?

அட்டென்க்ஷன் சீக்கிங் அதீதமாகிவிட்டதை உணர்ந்து நகர வேண்டும் நாம். குழந்தை பிராயத்தில் நாம் அனைவரும் அட்டென்க்ஷன் தேடியவர்கள்தானே? அன்று கைதட்டல் இன்று லைக்ஸ்.

புதிதாய் நடை பழகும் குழந்தை வீழாது, விழுந்தாலும் அடிபடாது, அடிபட்டாலும் எழுந்து மீண்டிட - கற்றுக்கொடுத்தல் அவசியம். மகனுக்கும் மகளுக்கும் மட்டுமல்ல, மனைவிக்கும் கூடத்தான். ஆஸ் யு செட் தடம் மாறினால் துணை இல்லை என்றாகிடுமா? ஷன் செக்ஸ் என்றால் கேட்க்கும் சூழலில் நம் பிள்ளைகள் இல்லை, சேப் செக்ஸ் சொல்லித்தர பழகிக்கொள்ள வேண்டும்.

நாகரிக வளர்ச்சி என்பதை நாம் காஸ்மெடிக் லெவலில் புரிந்துகொண்டுள்ளோம். இது போன்ற உரத்த சிந்தனை படிக்க, பகிர நாகரிகம் இன்னும் ஆழமாய் புரிந்துகொள்ளப்படும் என நினைக்கிறேன்.

பை தி வே, என்னை தமிழில் எழுதத் தூண்டியமைக்கு நன்றி!

R.ராஜன் said...

Super... An real social writer... Thankyou.. go ahead with lot's of letters....

Unknown said...

அருமை சகோ...இந்த மாற்றம் ஒவ்வொரு மனிதனிடம் இருந்தும் வரவேண்டும்...

இணையத்தில் காமத்தை தேடும் அளவுக்கு காதலை தேடுவதில்லை...

காதலை தேடும் அளவுக்கு தேவையான வாசிப்பை தேடுவதில்லை...

Unknown said...

இதை விட அருமையாக..அழகாக எழுத முடியாது. நன்றிகள்

Avargal Unmaigal said...

மிக தெளிவாக சொல்லி சென்ற விதம் மிக அருமை...ஒளிவு மறைவு இல்லாமல் அப்பட்டமாக நன்றாக சிந்தித்து எழுதிய இருக்கிறீர்கள்...பாராட்டுக்கள்

sivakumarcoimbatore said...

கீர்த்தி மேடம் ...அருமையான பதிவு...எனது குழுக்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன் ..

Osai Chella said...

Nachunnu surukkama edit seythaal sirappu. Well written.

சிகரம் பாரதி said...

சிறப்பான கட்டுரை. வாசித்து புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் பதிவு எங்கள் தளத்தில்....

பலகை | கட்டுரை | பெண்ணின் காதல்
https://sigaram6.blogspot.com/2018/09/blog-post_29.html
#பெண்ணியம் #சுதந்திரம் #சமூகம் #ஆணாதிக்கம் #காமம் #காதல் #அன்பு #உணர்வுகள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம்

Unknown said...

அருமையான பதிவு

meghabore said...

This post needs a lot of improvement. After reading two posts, i'm getting the impression that women would like to work all alone in this world without men being present.

Without men there is no women and without women there is no men. This is the basic concept of the world. If you don't believe that this is true, then define what is wanted out of the society and education and work towards that. If not, then don't write that men are keeping women stifled. Believing that women's life is so, is not going to take you anywhere.

சிகரம் பாரதி said...

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 25 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

snk creation said...

Nice article, if You need the trusted and best loyal social media marketing agency for your all social media growth then visit Buy Instagram Followers India to get reliable and trustworthy services and support.

Regards,
SNK Creation

Aditi Gupta said...

Great post i must say and thanks for the information. I appreciate your post. Agra Same Day Tour Package

hont said...

Best IT Training in Chennai
Organic Chemistry tutor
Organic chemistry
online tutor
Organic chemistry

jaderaugolini said...

Wynn Casino And Hotel - JTM Hub
Located in Las Vegas Strip, this luxury resort 양주 출장안마 offers 속초 출장샵 a casino, an outdoor pool, 군포 출장마사지 and a 하남 출장마사지 fitness center. All 오산 출장안마 the amenities at Wynn Las Vegas are designed to