"இணையம் முழுக்க வன்புணர்வு , பாலியல் செய்திகள். தொலைகாட்சி திருப்பினால் பேராசிரியை குரல். செய்தி தாளில் வன்புணர்வு இல்லாத நாள் குறைவு. பெண் என்பவள் நதி, தெய்வம் , தாய், புனிதம் லொட்டு , லொசுக்கு என்று பெயர்தான் ..பிறக்கும் முன்பே இன அழிப்பு அபார்ஷன்...இன்றும் நடக்கிறது. ஸ்கேன் செண்டர்களில் சட்டம் கடுமை என்பதால் வெளிநாட்டில் கூட போய் ஸ்கான் செய்து கொல்லும் அவலம்.
அதில் இருந்து தப்பி பிறந்தால் கள்ளிப்பால். அப்படியா..இக்காலத்திலுமா என்றால் இணையம் செல்லவும். இந்தியாவில் மட்டுமில்லை..சீனாக்கு 2500 வருட வரலாறு..அங்கு தண்ணி குடுவை. பெண் என்பவளின் நிலைமை எப்படியெல்லாம் வரலாறு பேசுது. பாகிஸ்தானிலும் வழக்கம் உண்டு.
அதற்கும் தப்பி பிழைத்தால் சுற்றி வளைய வரும் பீடோஃபைல் எனும் கயவர்கள் ..அடுத்து சொந்த் பந்த அத்து மீறல்கள் ..இதியாவில் ஒரு பாலியல் தொடுகை கூட சந்திக்காத் பெண் குழந்தை இல்லை என்றே சொல்லலாம். வன்புணர்வு பள்ளியில் வீட்டில் மிரட்டலில் என்று பல்வேறு விதமாக பாயும். இங்கு ஆப்ரிக்க நாடுகளில் பாலியல் உறுப்பு அறுக்கும் அவலம், சீனாவில் காலை நசுக்கும் அவலம், ஒரு ஸஹரா பாலைவன நாட்டில் குண்டுதான் அழகு என்று வலுக்காட்டாய உணவு சித்திரவதை..அதாவது இருவது லிட்டர் ஒட்டக பால், இரண்டு கிலோ வென்னையுடன் மாவு இது சாப்பிடாவிடில் இரு மரப்பலகை கிடுக்கியில் விரல் நசுக்கப்படும்.
இதிலும் தப்பித்தால் வயது பெண்.டேட்டிங் செல்லும் நாகரிக சமுதாயம் ஒரு பக்கம் கதற அடிக்கும் என்றால் கல்லூரியில் விலை பேசும் ஆண்கள், வேலை செய்யும் இடத்தில்...ஈவ் டீசிங்கில் இறந்த சரிகா ஷா மறக்க் முடியாது. இன்ஸெஸ்ட் எனப்படும் சொந்த்ங்கள் மூலம் சூறையாடப்படுவது. அடுத்து இள வயது கட்டாய திருமணம். பாலியல் பலாத்காரம்.
அதை தவிர மாதவிடாய் கொடுமைகள். எந்தக் கொடுமையை எழுத ..விட்டு விட..கட்டாய கல்யாணம்..வல்லுற்வு திருமணம், இன்னும் சில நாடுகளில் பெண் கடத்தி திருமணம்.. இஸ்லாமிய நாடுகள், இந்தியா உள்பட கவுர்வக்கொலைகள் அதற்கும் வன்புணர்வு..சாதிய கொலைகள், டவுரி எரிப்புகள், கொடுமைகள், கணவன் செய்யும் பாலியல் பலாத்காரங்கள், அடி , அசிங்க பேச்சுகள்..அடிக்கிற கை அணைக்கும் என்ற பழமொழி வேற..லூசுங்க
உலகில் பெண் கொலைகளில் 38% கணவர் மூலமாகத்தான் நடை பெறுகிறதாம். இங்கு குடும்ப அமைப்பு என்பது பெண்ணுக்கு மிகப்பெரிய எதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ள து. அபார்ஷன் , பிள்ளை பெறல் , குடும்பக்கட்டுபாடு அனைத்திலும் சர்வ சாதர்ணமாக அத்து மீறல் கட்டாய விபச்சாரம் , கடத்தல் ஒரு பக்கம் என்றால் போர்னோ கிராபி ..குளிப்பதில் இருந்து பல விதமாய்..கட்டாய போர்ன் வன்முறை நவீன வடிவ வன்முறை ..ஆனால் மறைமுகமாக எடுத்து வெளியிடுவது வேறு வகை. பல பெண்கள் தற்கொலை வரை போகிறது போர்ன் பிரச்சனை. இணையம் வந்தாக் ஆகா ஓஹொ என்று பேசி மயக்கி படுக்கை அழைக்கும் அல்லது ரகசியமாய் வன்புணர்வு செய்ய பெருங்கூட்டம். அதை தவிர் முகம், கால் என்று ஒன்றுவிடஃமல் புகைப்படம் பார்த்தே கிளர்ச்சி அடையும் கூட்டம். பேசி பேசி ஆன்லைன் போர்னுக்கு வலை விரிக்கும் கூட்டம் ..கவிதை , அன்பு , காதல் , நேச்ம் என்று பெயரிட்டு காரியம் ஆகி கை கழுவி தற்கொலை வரை தூண்டும் நவின வன்புணர்வு குற்றங்கள் ..
போர், கூட்ட்ம், மாப் வெறி , குடி , பழங்குடி மக்கள் , போலிஸ் , ஆர்மி என்று இன்னும் இன்னும் பெண் மேல் அவிழும் கொடுமைகள் முடிவே இல்லை.
ஆஸிட் வீச்சு , காதல் கொலை எல்லாம் இன்னொரு பக்கம்
படித்தா சரியாகும்னா துணை வேந்தரே படுத்தா ..கொடும் அவலம்.
கல்வி என்ன அளித்துள்ளது? பள்ளியில் ஆசிரியர்கள் மேல் பல புகார்கள்..இதில் உலகத்தில் அதிகம் பதியப்படாத உலகுக்கு வெளிவராத் கொடுமைகள் பாலியல் வன்புனர்வுதான்..
கல்லூரிகளை விபச்சார கூடங்கள் ஆக்க மும்முரமாக வேலை செய்கிறார்கள்..பட்டம் பெற்ற கல்வியாளர்கள்.
ஆணை எப்படி வளர்க்கிறோம்? நாகரிகமான ஆண் என்றால் பெண்ணை துளியும் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. சக மனுஷியாக ஒவ்வொரு இடத்திலும் பார்க்க தேவை. பாலியல் கல்விகள் தேவை. கடவுள் பற்று குறைந்த ஆனாள் மனித நேயத்தில் மேம்பட்ட பல் நாடுகளில் கற்பழிப்பு மிக குறைவு.
யூ.என் செய்திப்படி உலகில் எந்த மதம், கலாச்சாரம், நாடு எதுவும் பெண் சமத்துவத்தை முழுமையாக வழங்கவில்லை. இன்னும் நூற்றாண்டுகளிலும் இதான்..
இதற்கு என்ன விடிவு? பெண் சம உரிமை மட்டுமே!!
ஒவ்வொரு தலையும் பிறப்புறுப்பு மூலமே வந்துள்ளது . தான் வந்த இடத்தை சிதைப்பதில் என்ன மகிழ்வு கிடைக்கும்? பால் குடித்த உணவுக்கான இடத்தை ..என்ன சொல்ல வார்த்தை வரல..பொய்யான எதோ ஒன்றை தேடியே இக்குற்றங்க்ள். ஆண்மை என்பதன் அர்த்தமே அறியாமல் மன நிலை பிறழ்த செய்ல்கள். எல்லாருக்கும் சட்டம் இருக்கு..ஆனால் எதையும் தடுக்க முடியவில்லை, சந்தர்ப்பம் கிடைத்தால் மூன்றில் ஒரு ஆண் ஏதாவது ஒரு வடிவ ரேப் செய்ய தயாராக இருப்பதாய் சைக்காலஜி ஆய்வு சொல்கிறது
புக்கர் டி வாஷிங்டன் up from slavery வாசிக்கிறேன். பல் தேய்த்து , உடுத்தக் கூட தெரியாத மாற்று நிற மனிதர்கள் அடிமையில் இருந்து மீண்டு வந்த நிஜக்கதை. சுத்ந்திரம் வந்தும் பல அடிமைகளுக்கு என்ன செய்ய என்று தெரியாமல் அடிமையாகவே இருக்க சில்ர் முதலாளி களிடம் கேட்டார்களாம்..படித்து, பெரும் பத்வி வந்தும் சம உரிமை இல்லை. இங்கு அவர்கள் போராடடம் சமூகம் நோக்கி அல்லது முதலாளிகளை நோக்கி...ஆனால் பெண் விடுதலை என்பது வேறு வடிவம்..
எனவே எழும் நேரத்தில் எல்லாம் பாசம் காட்டி முடக்கப்படுகிறாள்..
பெண் என்பவள் பெற்றவனை, சகோதர்களை, கணவனை, மகன்களை என்று தன் உரிமைகள் நோக்கி பேச் வேண்டி இருக்கு. குடும்ப பெண், கலாசாரம் போன்ற சொற்களால் தன்மானம் இழக்கிறாள். . எதிர்த்தால் வெளி உலக பயம்..இல்லாவிடில் அடிமை வாழ்வு..எது சரி..பறவைகளை பறக்க விடு என்றால் பல கழுகுகள்..அதற்காக கொடும் துணையுடன் அல்லது இல்லாமல் கூண்டில் என வாழ்வு. ஆக மொத்தம் ஒவ்வொரு பெண்ணை சுற்றியும் கூண்டு., அவள் காலம் காலமாய் அன்பை அளித்து இப்போது தன் உரிமைக்காக கூண்டை விட்டு விட் விரும்புகிறாள்..அடிமை என்பதை அன்பு என்று சாயம் பூசும் குடும்ப அமைப்பு..அதில் பிறக்கும் வன்முறைகள் .,யாரை எதிர்த்து என்ன சாதிப்பாய் என்றை கேள்வியில் திரும்பவும் அடிமைத்தன் சுழ்ளில் சிக்குவாள். இங்கு பெரும் அளவில் மன மாற்றம் தேவை.
இங்கு இதையெல்லாம் மாற்ற பெண் என்ன செய்ய வேண்டும்?
மதம் அடிமை படுத்தினால் அதை எதிர்த்து பலமாய் குரல் கொடுக்க வேண்டும், கலாச்சார பெயரில் என்றால் அது தேவையே இல்லை, குடும்ப அமைப்பு என்ற பெயரில் கட்டியபோடடால் அப்புறம் பார்த்துக் கொள்வோம் அதையெல்லாம், முதலில் வேண்டியது விடுதலை என்போம், நாட்டின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் , அமைப்பின் பெயரால் பல வடிவங்களில் வரும்..முதலில் தேவை சம உரிமை பிறகு அமைப்புகளை கவனிப்போம், சமுகத்தை புதிதாய் சமமாய் கட்டமைப்போம் என்று போராடும் துணிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. அமெரிக்கன் சிவில் வார் மூலம், பேருந்தில் சமாய் உக்கார வைக்காத ரோசா பார்க்ஸ் மூலம், மார்டின் லூதர் கிங் மூலம் அடிமைகள் உரிமை பெற்றனர். ஆனால் நமக்கான போராட்டம் யா செய்வார்? எப்படி செய்வார்? நாம்தான்..ஒவ்வொரு அடக்கு முறையும் எதிர்க்க வேண்டும்..சொல்லால் செய்யும் வன்புணர்வுகள், செயலால், அமைப்பால் என்று எல்லாவற்றையும் எதிர்க்கும் துணிவு வேண்டும். பெண் மேல் கை வைக்க பயம் வேண்டும். அதற்கு ஆணின் துணை வேண்டும்.
விலங்குகளை துரத்த நாம்தான் விலங்குகளை உடைக்க வேண்டும். காப்பாற்ற யாரும் வரமாடடார்கள். ஒரு நாள் வேண்டுமானால் முகநூலில் துணை பதிவு போடலாம். தன்னம்பிக்கை, வேலை, கல்வி , உழைப்பு இவற்றை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது. எக்காரணமும் முன்னிட்டும் பொருளாதாரத்தில் வலுவாக இருக்க வேண்டும். கல்வியும், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இருந்து கேள்வி கேக்கும் விழிப்புணர்வு வந்தால் சுதந்திரம் பற்றி பேசலாம்.
எதையும் விட தன்மானம் மிக முக்கியம் என கருத வேண்டும். நம்மை மாற்றிக்கொள்ளாமல் ஆணை சமமாக நடத்து என்று நாம் சொல்ல முடியாது. துணிவாய் சமமாய் இருக்க முயற்சிப்போம். பிறகு ஒவ்வொன்றையும் எதிர்த்து செயல்பட வேண்டும். நம் வீட்டின் ஆண்களுக்கு நாம் அடிமையில்லை என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்த்தும் பொழுது நாடு முழுக்க ஆண்களுக்கு ஆண் என்றால் பெண்ணை சமமாய் நடத்துவது என்பது புரியும். அது நடந்தால் மட்டுமே பாலியல் வான் கொடுமைகள் குறையும். சக மனிதராய் மதிக்கும் வேளையில் கொடுமை செய்யும் மனம் வராது.
அது வரை காதல், பிரியம் , நாணம் எல்லாம் ஒதுங்கி வழி விடட்டும். பொருளாதாரம் ஆம் சரி சமமாய் வேலை வாய்ப்பில் உயரத்தால், தன்மானத்தோடு வாழ் குரல் கொடுத்தல் என இருந்தால் வர்றியா என்று கேக்கும் ஒவ்வொரு ஆணையும் ஒதுக்கி வைக்கலாம். கேவலமாய் பார்க்கலாம். அவன் நம்மை உபயோகிக்க முடியாது, போகப் பொருள் இல்லை என்பதை மனதளவில் உணர்த்த வேண்டும். ஆண் பேசினால் மயங்க கூடாது. ஆம் என் குடும்பம்தான், என் காதல்தான், பிரியம்தான் ஆனால் இன்றைய தேவை என் சுதந்திரம் , தன்மானம் என்று குரல் உயர்த்த அவசியம் உள்ளது/ சட்ட்ங்கள் சட்ட்ங்களாய்தான் இருக்கு. ஆனால் எந்த பெண்ணும் அதை தொட தைரியம் இல்லை.
உலகெங்கும் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமே மிக குறைந்த சதவிகிதத்தில் பதியப் படுகிறது. ஐம்பது சாதிவிதம் மேல் கண்ணுக்கு தெரியாத வன்முறைகள். எப்படி நிறுத்த போகிறோம்?
பள்ளிக்கு அனுப்பினால், கல்லூரிக்கு அனுப்பினால் , வேலைக்கு அனுப்பினால் என்று கேள்வி கேட்டுக்கொண்டு முன்னேற விடாமல் ஓர் பகுதி செயல்படும்..ஆம் கல்லூரிக்கு அனுப்புவேன் ..அங்கு நடைபெறும் அசிங்கங்களை தட்டி கேக்கும் துணிவை ஏற்படுத்துவேன். ஆம் வேலைக்கு செல்வேன் தட்டி கேப்பேன் என்று நாடு முழுக்க இயக்கமாய் செயல்படும் பொழுது நம்மில் மாற்றம் வரும். நம்மை சக மனிதராய் மதித்தல் நடைபெறும். இல்லாவிடில் ஊருக்கு ஒரு தாலிபான் இயக்கம் ஏற்பட்டு இடுப்பில் தார் பூச தயாராய் இருக்கும்?
எதை தேர்ந்தெடுக்க போகிறோம்? சிறகுகளாயையா அல்லது கூண்டையா? எனக்கும் இக்கேள்வியை கேட்டுக் கொள்கிறேன்..நாளை என் பெண்களுக்காய் தாய்மையுடன்.
எனக்கு ஒரு கனவு..
என் பெண்களும் , ஆண்களும் அரசியலில் ஒரே இடத்தில்
என் பெண்களும், ஆண்களும் பாதுகாப்பாய் பயணம் செய்வது
என் பெண்களும், ஆண்களும் ஒரே இனமாய் மதிக்கப்படுவது
என் பெண்களும் ஆண்களும் உலகம் முழுக்க கல்வி
என் பெண்களும் , ஆண்களும் வாழ்வை தேர்ந்தெடுக்கும் சரி சம வாய்ப்பு
இரவு நேர பயணம், பொருளாதார சுதந்திரம், சரி சமமாய் குடும்ப அமைப்பு.
எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
ஆணும் பெண்ணும் சமம் எனும் காலம் காண..
9 comments:
ம்
பெண் பொருளாதாரத்தில் முன்னேற முன்னேற தனக்கான வாய்ப்பு பறிபோவதாக மனதில் தாழ்வுணர்ச்சி கொண்டு தத்தளிக்கும் ஆண் வன்முறையைக் கையிலெடுக்கிறான்.பெண்கள் இன்னும் வலிவோடு மனதில் உறுதி கொள்ள வேண்டிய காலம் இது கீர்த்தி. தவிர ஒரு பெண்ணாக தனக்கு அடுத்த தலைமுறை ஆணை மனிதம்போற்றும்படி வளர்த்தெடுப்பதும் பெண்ணின் கடமை.அதற்கு பெண்ணை தயார்படுத்த வேண்டும். நிறைய பெண்கள் இதில் தவறுகிறார்கள்.
பெண் பொருளாதாரத்தில் முன்னேற முன்னேற தனக்கான வாய்ப்பு பறிபோவதாக மனதில் தாழ்வுணர்ச்சி கொண்டு தத்தளிக்கும் ஆண் வன்முறையைக் கையிலெடுக்கிறான்.பெண்கள் இன்னும் வலிவோடு மனதில் உறுதி கொள்ள வேண்டிய காலம் இது கீர்த்தி. தவிர ஒரு பெண்ணாக தனக்கு அடுத்த தலைமுறை ஆணை மனிதம்போற்றும்படி வளர்த்தெடுப்பதும் பெண்ணின் கடமை.அதற்கு பெண்ணை தயார்படுத்த வேண்டும். நிறைய பெண்கள் இதில் தவறுகிறார்கள்.
உங்கள் கனவு நனவாக வேண்டும் ஆனால் அந்த கனவின் ஆரம்ப நிலையில்தான் நாம் இருக்கிறோம் அதற்காக செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம்
கீர்த்தி உங்கள் பதிவில் உங்களின் வேதனைகள் வலிகள் ஆதங்கம் தெரிகின்றன. ஆனால் ஒன்று கிர்த்தி இப்படி எழுதி பேசிக் கொண்டிருப்பதால் மட்டுமே மாறாது. அதற்கான முயற்சியில் உண்மையிலே மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் பெண்கள் உண்மையாக மனது வைத்தால்தான் மாற்றம் ஏற்படும்.. அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது தன் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு குறிப்பாக் ஆண் குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் அவர்கள் எப்போதும் பெண்களைவிட உயர்ந்தவர்கள் இல்லை அவர்களும் பெண்களுக்கு இணைதான் என்று சொல்லி வளர்த்தாலே பாதி வெற்றியை கைகொள்ளலாம் அதன் பின் மீதி ஆட்டோமேட்டிக்காக கிடைத்துவிடும்.... எந்த ஒரு ஆண்மகனும் தன் த்ந்தையின் பேச்சை மீறுவானே தவிர தாயின் பேச்சை மீற மாட்டான் அப்படி யாரும் மீறுகிறார்கள் என்றால் அவன் தன் தாயால் ஒழுங்காக வளர்க்கபடாதவன் என்றே கூறலாம் என் நான் கருதுகிறேன் தன் தாயை மனைவியை குழந்தையை பாதுக்காக்க நினைக்கும் ஆண் எப்படி ம்ற்ற பெண்களை பாதுகாக்க முயல்வதில்லை என்றால் அது அவனை வளர்த்த முறை என்று சொல்லாம்... அதானல் பெண்கள் மாற்றத்தை தன் வீட்டில் இருந்தே துவங்கினால் அடுத்த ஜென்ரேஸ்னில் நிச்சய்ம ஒரு நல்ல ஆண் பெண் புரிந்துணர்வு ஏற்படும்
மிகச்சிறப்பானப் பதிவுத் தோழர். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி
என்னால் மொத்தமாக படிக்கக் கூட முடியவில்லை. எல்லாம் அறிந்தவை தான் என்றாலும், ஆணாய் நான் என்ன செய்யக் கூடாது என்பதை அழுத்தமாய்ச்சொல்லும் பதிவு
me your blog and I have been reading it ever since.
Partnership Firm Registration in Chennai
Private limited Consultant in Chennai
Private Limited Company Registration
Private Limited Company Registration in Chennai
Proprietorship Company Registration
ROC registration Consultants in Chennai
Sales Tax Auditors in Chennai
Sales Tax Consultant in Chennai
Service Tax Consultant in Chennai
Tax Consultant in Chennai
TDS Refund Consultant in Chennai
TIN number in Chennai
விலங்குகளை துரத்த நாம்தான் விலங்குகளை உடைக்க வேண்டும். இதைவிட அழகாய் தெளிவாய் யாரும் சொன்னதாக நினைவிலில்லை. நாடு விடுதலைக்கு முன் பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்ணைத்தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்,விரைவில் காண எனக்கும் ஒரு ஆவல்.
முஹமது ஹாரூன்
Post a Comment