Sunday, February 7, 2016

ஒரு நினைவு.

பெங்களூர் செய்தி ஒரு பழைய நினைவை கிளறியது. ஒரு முறை கோவையில் இருந்து பெங்களூரு ரயிலில் திரும்பிக்கொண்டு இருந்தேன். திருப்பூர் ஸ்டேஷனில் ஒரு ஆப்ரிக்கப் பெண். குட்டி, குட்டியா பின்னியிருந்த முடிகளை விட்டுக்கொண்டு, கைக்குழந்தையை கட்டிக்கொண்டு ஏறினாள். எக்கச்சக்க லக்கேஜ் வேறு. யாரும் பெரிதாக உதவிவில்லை. அவள் சத்தம் போட்டு பேசினாள். கடின உழைப்புகாரி என்று தெரிந்தது.

ரயில் கிளம்பியதும் படு பயங்கரமா கூச்சலிட்டாள். அவள் சின்ன கைப்பை ஐ  லக்கேஜ் ஏற்றும் பொழுது யாரோ திருடிவிட்டார்கள். அவளின் பணம், பாஸ்போர்ட் எல்லாம்  இருந்தது என்று கூறினாள். அவளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல் கம்பார்ட்மென்ட் கம்பார்ட்மென்ட் ஆக பைத்தியகாரி போல அலைந்தாள். பின்னாடி குழந்தை. வேறு. மனசு கேக்காமல் விசாரித்ததில் சொன்னாள். ஆனால் மிகுந்த பதட்டம் அடைந்து மிக அதிகமாக சத்தம் போட்டு பேசினாள். அவளை யாருக்கும் புரிந்துகொள்ள முடியவில்லை. யாரும் தேடவோ, உதவவோ முன் வரவில்லை.

மனசு கேக்காமல் பேசி, உக்கார வைத்து. TTR கூப்பிட்டு, கடைசியில் ஈரோட்டில் இறக்கி போலீசிடம் ஒப்படைத்தோம். சிலர் சேர்ந்து சிறிது பணமும் கொடுத்தோம்.

இதே ஒரு சாதாரண பெண் என்றால் கண்டிப்பாக உடனே உதவிக்கு யாராவது வந்து இருப்பார்கள். ஒரு ஆப்பிரிக்கபெண் , சத்தம் போட்டு பேசுகிறாள் என்றவுடன் யாரும் உதவிக்கு வரவில்லை. சென்ற என்னையும் எச்சரித்து அமர சொன்னார்கள். உலகம் தெரியவில்லை என்றும் குறை கூறினார்கள்.


நிற பேதமும் ஆழமாக வேருன்றி இருக்கும் சமூகத்தில் உள்ள நாம்தான் வெளிநாடு செல்லும் வேளைகளில், சில நாடுகளில்  ரேசிசம் இருக்கு, நம்மை மதிக்க மாட்டார்கள் அந்த நாடு மிக மோசம் என்கிறோம்.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

நிற பேதம் மட்டுமே காரணமில்லை... அவர் சத்தமாக பேசியதும் உதவாமல் இருக்க காரணமாக இருக்கலாம். இருந்தாலும் பாஸ்போர்ட், பணம் எல்லாம் போச்சு என்கிறபோது உதவியிருக்க வேண்டும்... தாங்கள் செய்ததும் நல்ல செயலே...

கிருத்திகாதரன் said...

ம்ம்ம்ம்...இருக்கலாம். இருப்பினும்..

கிருத்திகாதரன் said...
This comment has been removed by the author.