நானும் ப்ளாக் ஓபன் செஞ்சுருக்கேன் பேர்வழின்னு ஓபன் செஞ்சாச்சு..என்ன பண்றது..அப்ப அப வந்து ஒட்டடை அடித்து,பெருக்கி துடைச்சி வச்சாதானே யாராவது வந்தா பார்க்க பளபளன்னு சுத்தமா இருக்கும்..
அடுத்து இன்னொரு பிரச்சனை..நானே என் ப்ளாக் க்கு வராட்டி வேற யார் வருவா ? அதுக்காக அப்பஅப்ப வரதா புத்தாண்டு தீர்மானம் போல எடுத்து வச்சுருக்கேன்..
சரி அப்பப்ப பரபரப்பா சில விஷயங்களை கொளுத்தி போட்டதானே நானும் ப்ளாகர்ன்னு சமூகம் ஒத்துக்கும்..எழுத்தாளர் மட்டும் இல்லை..ப்ளாகர்குள்ளையும் நிறைய அரசியல் செஞ்சாதான் நாமும் பிரபலம் ஆகலாம்..இப்ப ரெண்டு பேர் இருக்கணும் ..ரஜினி,கமல் மாதிரி ,அஜித் ,விஜய் மாதிரி..பிரிஞ்சு நிக்கோணும்..(உள் குத்து பத்தி எல்லாம் சொல்லபிடாது) நீ அடிக்கற மாதிரி அடி..நான் அழுவுற மாதிரி அழுவுறேன்ன்னு டீலிங்..
இந்த டீலிங் வச்சுக்கிட்டு நம்மளை மாதிரி நாலு ஏமாளிகள் ரெண்டு பக்கமும் சேருவாங்க..இந்த பக்கத்தை அங்க திட்டறதும் அவங்களை இவங்க பதிலுக்கு வம்பு செய்யறதும்..இதை பத்தி பக்கம்பக்கமா பேஸ்புக் ,ட்விட்டர் ன்னு பரபரக்க வைக்கரதும்னு செஞ்சுகிட்டே இருக்கணும்..
இப்படி ரெண்டு பக்கத்தையும் உற்சாகபடுத்த நல்லா தீனி போட்டுகிட்டே இருக்கணும்..அப்பப்ப செய்திகள்,சர்சைகள்னு அறிக்கை விட்டுகிட்டே இருக்கணும்..இல்லாட்டி ப்ளாக் ல திட்டி எழுதணும்..விமர்சினம் வந்தா ரொம்ப சந்தோசம்..கன்னாபின்னா ன்னு திட்டுவாங்க.அது ரொம்ப முக்கியம்..எத்தனைஎத்தனை திட்டு வாங்கரங்களோ அத்தனை நல்லது..பிரபலம் ஆக ..
சரி நல்லா திட்டு வாங்கினா கஷ்டமா இருக்காதான்னு கேக்கபிடாது..இருக்கும்..கொஞ்ச நாள் ஆனா பிரபலம் ஆக கொடுத்த விலைன்னு நினைச்சா அப்புறம் நினைக்கவே மாட்டோம்..அந்த அளவுக்கு ஆகிடுவோம்..அதுக்கும் ஒரு வழி இருக்கு..நம்மளை திட்டி போட்டா நாமளும் பதிலுக்கு நல்லவைங்க மாதிரி எழுதி விளக்கம் கொடுக்கலாம் இல்லாட்டி திருப்பி திட்டி போடலாம்..ஆனா ரெண்டு அணியா இருக்கணும் அது ரொம்ப முக்கியம்.
இப்படி பரபரப்பா ப்ளாக் எழுதனும்னு எனக்கும் ஆசை..யாரவாது எனக்கு எதிரா திரும்பி ஏதாவது சொல்ல மாட்டாங்களான்னு ஏங்கிகிட்டு இருக்கேன்..ஆனா நான் எது எழுதினாலும் எல்லாரும் சிரிச்சிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி போறாங்களே ஏன் இந்த கொடுமை ?
நீங்க இப்ப பிரபல ப்ளாகர் ஆகணுமா ..வாங்க கோதா ல இறங்குவோம்..ரெண்டு அணியா பிரிவோம்..டீல் சரியா போட்டுபோம்..நாலு வார்த்தை நான் திட்டினா நீங்களும் நாலு தடவை திட்டலாம்னு..இப்படியே நூல் பிடிச்சி பிரபலம் ஆயிடுவோம்..
இப்போ நீங்களும் ஆகலாம் பிரபல ப்ளாகர்..

3 comments:
இப்படியும் ஒரு வழி இருக்கா?
இது வேறயா?
நல்லாத்தானே போயிட்டிருக்கு அப்புறம் என்ன? நான் ரோபோ இல்லைனெல்லாம் ப்ரூஃப் பண்ண சொல்றீங்களே நியாயமா அதை எடுத்திடுங்க ...நீங்க கண்டிப்பா பிரபலமாயிடுவீங்க...
Post a Comment