Tuesday, June 4, 2013

எஞ்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் மட்டுமா உலகம்?

என்ஜினியரிங், மெடிக்கல் மட்டுமா உலகம்..அதை தாண்டி எத்தனை எத்தனையோ உலகத்தில் வேலைகள் உள்ளன. சில மாணவர்கள் மிகுந்த கலைதிறனுடன் வடிவமைப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள். அதற்கெனவே மிக புகழ் பெற்ற கல்லூரிகள் இந்தியாவிலேயே இருக்கின்றன. இங்கும் எப்போதும் போல சீட் கிடைக்க பெரும்பாடுதான் பட வேண்டும். முடிந்தவர்கள் தானாகவே உள்ளே போகிறார்கள்..இல்லாவிடில் இருக்கவே இருக்கு கோச்சிங் கிளாஸ்கள்.
13 - Kiruthika Career-After-12th
NID தேர்வு.
நேஷனல் இன்ஸ்ட்யுட்ஆப் டிசைன் NID மிக்க புகழ்பெற்ற டிசைன் கல்லூரி. அதற்கென்று தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டும்.இங்கு முக்கியமாக படைப்பு திறன் அதாவது கிரியேட்டிவிட்டி பார்த்தே தேர்ந்து எடுகிராகள்.அதற்கேற்றவாறு கேள்விகள் வடிவைமக்க பட்டிருக்கும். இங்கு டிப்ளமா இன் டிசைன் நான்கு வருடம் ப்ளஸ் டூ பிறகு படிக்கலாம். அதில சில பிரிவுகளும் இருக்கின்றன. மேற்படிப்புக்கு நான்கு வருட டிப்ளமா இல்லாவிடில் அந்த துறை சம்பந்தப்பட்ட டிகிரி தேவை.மிகப்பெரிய வேலை கிடைத்தவர்கள் கூட வேலையில் சலிப்பு வந்து இங்கு சேர்ந்து படித்த கதைகள் உண்டு. நம் படைப்பு திறனுக்கு தீனி போடும் படிப்புகள். அகமதாபாத் ,பெங்களூர் கல்லூரிகள் சிறந்து விளங்குகிறது.
மேலும் விளக்கங்கள் http://www.admissions.nid.edu/gdpd-pgdpd.html#gdpd
NIFT நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி.
இந்திய அரசாங்கம் மூலம நடைபெறும் புகழ்பெற்ற பேஷன் டெக்னாலஜி படிப்பு கல்லூரிகள்.
இப்போது பேஷன் டெக்னாலாஜி துறை அதிகம் வளர்ந்து வருகிறது.அதில் தேசிய அளவில் புகழ்பெற்ற பேஷன் டெக்னாலஜி படிப்பை தரும் கல்வி நிறுவனம் நுழைவு தேர்வின் மூலம மாணவர்களை தேர்ந்து எடுக்கிறது. இங்கு பாசிலர் படிப்புக்கு
B. Des GAT 2 Hrs 40% க்கும் CAT 3 hrs. 40%க்கும்
Situation Test
(Second tier) 20% க்கும் தேர்வு நடைபெறுகிறது..
B.F Tech GAT 2 hrs 60% க்கும்
MAT 2 hrs 40% ஆக தேர்வு நடைபெறுகிறது. அதை தவிர மேற்படிப்புகளும் உள்ளன.
இங்கு லெதர் டிசைன், கணித் வேர் டிசைன்,பேஷன் ப்ரொடக்ஷன்,பேஷன் டெக்னாலஜி பிரிவுகள் உள்ளன. பெங்களூர்,சென்னை உள்பட பதினாறு இடங்களில் சென்டர்கள் உள்ளது.
link :http://www.nift.ac.in/theinstitute.html
NATA தேர்வு.
அடுத்து சிலர் மேற்படிப்பு வாய்ப்புகளுக்காக பி.டெக் படிப்பபை தேர்ந்து எடுப்பார்கள்..அதில் படைப்பு திறன் கலந்த வாய்ப்புகள் உள்ள ஆர்கிடேக்சர் படிப்பு .அதற்கு உள்ள இந்தியா முழுமைக்கும் உள்ள கல்லூரிகளுக்கு நேட்டா என்று கூறப்படும் NATA நுழைவு தேர்வு உள்ளது.இரு பகுதி தேர்வு முறையை அப்படியே பகிர்ந்து இருக்கிறேன்.
Drawing Test
This is a two hour paper where candidate has to attempt three questions. The drawing
aptitude is judged on the following aspects -
Ability to sketch a given object proportionately and rendering the same in
visually appealing manner.
Visualizing and drawing the effects of light on the object and shadows cast on
surroundings.
Sense of perspective drawing.
Combining and composing given three dimensional elements to form a
building or structural form.
Creating visual harmony using colours in given composition.
Understanding of scale and proportions.
Drawing from memory through pencil sketch on themes from day to day
experiences.
15.2 Aesthetic Sensitivity Test
This is computer based test where candidate has to answer 40 multiple choice
questions.
The aesthetic sensitivity test measures perception, imagination and observation,
creativity and communication along with architectural awareness and comprises of Visualizing three dimensional objects from two dimensional drawings.
Visualizing different sides of three dimensional objects.
Identifying commonly used materials and objects based on their textural
qualities.
Analytical reasoning.
Mental Ability.
Imaginative comprehension and expression.
Architectural awareness.
http://portal.nata.in/www13/default.aspx
இந்த லிங்க் மூலம எத்தனை கல்லூரிகள் நேட்டா தேர்வு மூலம எடுத்து கொள்கிறது என்று அறியலாம். எடுத்துகாட்டாக கர்நாடகாவில்மட்டும் 23 கல்லூரிகள் உள்ளது.
http://www.coa.gov.in/STATUS.pdf
CLAT தேர்வு.
அடுத்து முன்பே டாக்டர் இஞ்சினியர் அடுத்து வக்கீல என்று கூறப்பட்ட படிப்பு..அது என்னவோ நடுவில் கொஞ்சம் தேக்க பட்டு விட்டது.இன்றும் மிக விரும்பி வக்கீலுக்கு படிக்கும் மாணவர்கள் உள்ளனர். இதில பெங்களூருவில் இருக்கும் நேஷனல லா காலேஜ் மிக புகழ்பெற்றது..வழக்கம்போல கடினமான தேர்வு வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் .இந்தியா முழுமைக்கும் உள்ள நேஷனல் லா காலேஜ் களுக்கு CLAT நுழைவு தேர்வு மூலமாகத்தான் செல்ல வேண்டும். அங்கு இந்த முறைப்படி தேர்வு உண்டு.
Total Marks 200
Total number of multiple-choice questions of one mark each 200
Duration of examination Two Hours
Subject areas with weightage:
English including Comprehension 40 Marks
General Knowledge/ Current Affairs 50 Marks
Elementary Mathematics (Numerical Ability) 20 Marks
Legal Aptitude 50 Marks
Logical Reasoning 40 Marks
http://www.clat.ac.in/index.php அதற்கான லிங்க்.

1 comment:

Unknown said...

Your article is very useful. Can you please help me by suggesting a good institute for TOEFL coaching? We live in Bangalore.