வெளிநாட்டு படிப்புக்கு தேவையான தேர்வுகள்..
போன வாரம் SAT பற்றி அறிந்துகொண்டோம்..அதான் தொடர்ச்சியாக IELTS, TOEFL பற்றிய சிறிய அறிமுகங்கள்.
SAT என்பது ஒரு தகுதி தேர்வு..கிட்டத்தட்ட நம் நுழைவு தேர்வு போல..ஆனால் அதை தவிர வெளிநாட்டு பல்கலைகழகங்கள் அனுமதி கிடைக்க ஆங்கில தகுதி தேர்வுகளும் தேவைப்படுகின்றன. அதில் மிக முக்கியாமானவை TOEFL, IELTS போன்ற தேர்வுகள் ஆகும்.
இவை வெறும் மொழி தேர்வு. ஆங்கில பாடத்துக்கான எழுதுதல், படித்தல்,பேசுதல் போன்றவற்றின் அடிப்படையை எந்த அளவுக்கு மாணவர் அறிந்து இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் தேர்வாகும். ஆங்கில வழி படிப்பில் பாடங்கள் நடத்தப்படுவதால் மாணவர்கள் எந்த அளவுக்கு ஆங்கில அறிவு பெற்று இருக்கிறார்கள் என்று சோதிக்கும் தேர்வு முறைகளாகும்.
இரண்டும் ஆங்கில தகுதி தேர்வுகள் என்றாலும் TOEFL தேர்வு பெரும்பாலும் அமெரிக்க,கனடா பல்கலைகழகங்களின் சேர்க்கைக்கும் IELTS தேர்வு இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து போன்ற நாட்டின் பல்கலைகழகங்களின் சேர்க்கைக்கும் தேவைப்படுகிறது. இருப்பினும் பல பல்கலைகழகங்கள் எந்த தேர்வானாலும் ஒப்புகொள்கின்றன. IELTS தேர்வை மட்டும் சில கல்வி நிறுவனங்கள் ஏற்றுகொள்கின்றன.
IELTS ( International English Language Testing system. ) :
ஆங்கில அறிவை சோதிக்கும் படித்தல், மொழி பேசுதல், கேளுதல், எழுதுதல் போன்றவற்றில் மொழி ஆளுமையை சோதிக்கும் தேர்வு.
உலகத்தில் எந்த மூலையிலும் இருப்பவர்கள் எழுதலாம்.
பல்கலைகழகங்கள் மட்டுமில்லாமல் நிறுவனங்கள்,அரசாங்கம் ,MNC போன்றவைகளும் இந்த தேர்வை ஏற்றுகொள்கின்றன.
இது மாதத்துக்கு சில சமயம் நான்கு முறை கூட நடத்தபடுகிறது.
பிரிட்டிஷ் கவுன்சில் மூலமே தேர்வுகள் நடைபெறுகின்றன.
நேரில் விவரங்கள் வேண்டும் என்றால் அருகில் இருக்கும் பிரிட்டிஷ் கவுன்சிலை அணுகலாம்.
பேசுதல் தேர்வுக்கு இன்டர்வியூ மூலம் கேள்வி கேட்பார்கள்.
ஒன்பது பாயின்ட் அளிக்கப்படுகிறது. ஒன்பது பாயிண்டுகள் பெற்றவர்கள் நேடிவ் ஸ்பீக்கர் அளவுக்கு தகுதி இருப்பதாய் கொள்ளபடுகிறது.
குறைந்தபட்சம் 5.5 பாயிண்டுகள் பல்கலைகழகங்கள் எதிர்பார்க்கிறது.மேற்படிப்புக்கு 6.5 தேவை.
தேர்வு எழுத ஆன்லைன் மூலம் அப்ப்ளிகேஷன் எடுத்து பாஸ்போர்ட் போட்டோ ஒட்டி கட்டணத்துடன் பக்கத்தில் இருக்கும் தேர்வு மையத்தில் கட்டினால் அவர்கள் தேர்வு நாள் கொடுப்பார்கள்.
இதற்கு பெரும்பாலும் மாணவர்கள் ஒரு வருடம் வரை பயிற்சி எடுத்துகொள்கிரார்கள்.
சுயமாய் புத்தகங்கள் மூலம் படித்து மதிப்பெண் வாங்கும் மாணவர்களும் உண்டு.
பெரும்பாலும் கோச்சிங் சென்டர்கள் கோச்சிங் கொடுத்து நன்கு சம்பாதிக்கின்றனர்.
இதில் இரண்டு முறைகள் உண்டு.ஒன்று அகடேமிக்,மறறொன்று ஜெனெரல். சில நிறுவனங்கள் ஜெனெரல் தேர்வு போதும் என்றால் அதை எடுத்துக்கொண்டால் போதுமானது.
மேலும் விவரங்களுக்கும்,மாதிரி வினா விடைகளுக்கும் உரலி http://www.ielts.org/default.aspx.
TOEFL (The Test Of English as a Foreign Language )
TOEFL iBT என்பது இன்டர்நெட் மூலம நடக்கும் டோபல் தேர்வாகும்.
பெரும்பாலும் பிசினெஸ் பள்ளிகளும், அமெரிக்க ,கனடா பல்கலைகழகங்கள் டோபல் தேர்வு முறை மதிப்பெண்ணை ஏற்றுகொள்கின்றன.
பல நிறுவனங்கள் இருந்தாலும் முக்கியமாக் kaplan நிறுவனம் இந்த தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.
இங்கும் படித்தல்,கேளுதல்,பேசுதல்,எழுத்து என அனைத்திலும் மொழி ஆளுமையை சொதிகிரார்கள்.
இங்கு 0 -120 ஸ்கேலில் ஸ்கோர் கணக்கு இடப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலும், ஆயிரகணக்கான பல்கலைக்கழகங்களும் இந்த ஸ்கோரை எற்றுகொள்கின்றன.
பேப்பர் தேர்வு,இன்டர்நெட் தேர்வு இரண்டு முறைகள் உள்ளன.
இதில் நூறுக்கு மேல் எடுப்பதே நல்ல மதிப்பெண்களாக எடுத்துகொள்ளபடுகிறது.இரண்டுமே ஆங்கில தகுதி தேர்வுதான்..மாணவர்கள் எது தேவையோ அதை மட்டும் எழுதினால் போதும். இரண்டையும் எழுத தேவை இல்லை. பெரும்பாலும் IELTS தேர்வுக்கு சில பல்கலைகழகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன,
Friday, September 13, 2013
IELTS, TOEFL அறிமுகம்.
Labels:
கட்டுரை,
கல்வி,
குழந்தைகள்,
தொடர்,
விழிப்புணர்வு
Subscribe to:
Posts (Atom)