Friday, October 24, 2014

அமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா? பயணம்-இரண்டு.

பயணம் இரண்டு.. சென்ற பதிவின் தொடர்ச்சி..

கடவு சீட்டை இன்னும் பத்து வருடத்துக்கு ரினிவல் செய்யவும், கடைசி பெயரை சேர்க்க பெயர் மாற்றத்துக்கும் மாரத்தஹள்ளி அலுவலகத்துக்கு கடவு சீட்டு அதிகாரி அனுமதி சீட்டு கொடுத்தார். நடுவில் விடுமுறை , கையழுத்து என்று அலைச்சலில் பத்து நாட்கள் மேல் கழிந்துவிட்டது. அங்கு வரிசையில் நின்றேன். ஆனால் எனக்கு என்னமோ கார்பரெட் ஸ்டைல் வேலைகளில்  அலுவலகர்கள் சக்கையாக பிழியப்படுவதாக உணர்ந்தேன்..ப்ரொடக்டிவிட்டி என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் அங்கு இயந்திரம் போல வேலை  செய்துக்கொண்டு இருந்தார்கள்.
TCS  நிறுவனம் எல்லாரையும் செயற்கை புன்னகை ஏந்திய கம்ப்யூட்டர் ஆக்கி இருந்தது.

       நான் சந்தித்துக்கொண்டு இருந்த  அதிகாரிக்கு மூச்சு விடக்கூட நேரமில்லை. ஒரு மணி நேரத்துக்கு எக்கச்சக்க கோப்புகள் மற்றும் நேரடி விசாரணைகள்..என் சொந்தம் ஒருவர் முன்னாள் கடவு சீட்டு அதிகாரி,    (சொந்தம் போன் செய்தாலும் அங்கு இருக்கிற கூட்டத்துக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது..சிபாரிசு இருந்தால் மட்டும் போதாது..கடவு சீட்டு பெற சில வழிமுறைகள் உள்ளன..சரியான ஆவணங்கள் இல்லாமல் விரலை கூட அங்கு  அசைக்க முடியாது )  நல்லவேளை நான் வாலண்டரி ரிடயர்மென்ட் வாங்கிட்டேன் இல்லாவிடில் அவரின் கதிதான்..நிஜமா அத்தனை அழுத்தமாக ஆகி விட்டது வேலை என்று சொன்னார். இன்னும் சிலரை வேலைக்கு அமர்த்தினால் போதும்..மக்கள் கூட்டத்தை அவர்கள் டென்ஷன், அழுத்தம் இல்லாமல் சமாளிக்கலாம்..நம் மக்கள் தொகைக்கு ...வேலைக்கும் குறைவு இல்லை..வேலை இல்லாதவர்களுகும் குறைவு இல்லை..ஒரு பேலேன்ஸ் வர வேண்டும்..அவ்வளவுதான்..

மாரத்தஹள்ளி போனால் எல்லாம் முடிந்து..போட்டோ எல்லாம் ஆச்சு..கடைசியாக அதிகாரி பாஸ் செய்ய வேண்டும்..அவர் இது தட்காலில் செய்ய முடியாது..நேம் சேஞ் கேஸ்..கண்டிப்பாக போலிஸ் வெரிபிகேஷன் வேண்டும் என்று சொல்ல..திரும்ப பெரிய அதிகாரியிடம் கொஞ்சம் வாக்குவாதம் செய்து பார்த்தேன்..பழைய பாஸ்போர்ட்...உங்கள் தவறுதானே லாஸ்ட் நேமாக  தந்தை பெயர் போடாதது என்று.. அதுவும் இல்லாமல் பெற்றோர் பெயர்களை சேர்க்கவில்லை வேறு..எடுத்து சொல்லியும் அவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை..என் பையன்தான் உன் நியாயத்தை இங்கெல்லாம் கேக்காதேம்மா..வா போவோம் என்று சொல்ல அலைச்சலின் எரிச்சல் எனக்கு  உச்சப்பச்சத்தை அடைந்து இருந்தது...

திரும்ப அதே..கோரமங்களா விடிகாலை வரிசை..காபி டே சாண்ட்விட்ச், காபி, லெமன் டீ.. போலிஸ் வெரிபிகேஷன் செய்யுங்கள் உடனே செய்வோம் என்றார். உடனே மளமளவென்று லோக்கல் போலீசிடம் பேசி (இந்த கொடுமையில் ஆபிசர் முதல் போலிஸ் வரை எல்லா இடங்களிலும் தெரிந்தவர் யாரோ ஒருவர் இருந்தனர்)  வெரிபிகேஷன் முடித்து இதுக்கு மட்டும் தரனை அனுப்பி இருந்தேன்..அவரிடம் டாக்டர் நான் உடனே அனுப்பி விடுகிறேன்..மூன்று நாட்களில் போய்விடும் எனசொல்ல ..

அதை நம்பி திரும்ப கோரமங்களா படையெடுக்க வரிசை அலைச்சல்..அங்கு பார்த்தால் சிஸ்டமில் அப்டேட் ஆகவில்லை என்ற விஷயம் தெரிந்தது..இனி எல்லாம் வரிசையாக நம் பக்கத்தில் அப்டேட் ஆகும் என்ற விஷயமும்..

பத்து நாள் ஆச்சு..அப்டேட் ஆகவே இல்லை..சரி என்று தரன் லோக்கல் போலிசுக்கு போன் செய்து கேட்க..அனுப்பிவிட்டோம் என்ற பதில் வர புரியவில்லை..அடுத்து என்ன செய்ய , எங்கு போகும் என்ற விசாரித்ததில் கமிஷனர் ஆபிஸ் போகும் என்று தெரிந்தது...எனக்கு தெரிந்து கடவு சீட்டை இத்தனை நுணுக்கமாக யாராவது துரத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை..

அடுத்து படையெடுப்பு..பையனுக்கு அலுத்துவிட்டது..அன்று ரிசல்ட் மார்க் வாங்க செல்ல வேண்டும் என கழண்டுக்கொண்டு நண்பர்களுடன் சினிமாக்கும் போய்விட்டான். அங்கு போனால் அப்ளிகேஷன் பேப்பர் பிரிண்ட் அவுட்ல் நம் நம்பர் இருக்கும்..அதை வைத்தே ட்ராக் செய்ய முடியும்..அதை பிரிண்ட் இல்லாமல் ஸ்மார்ட் போன் நம்பிக்கொண்டு போனேன்..மிச்ச வேண்டாத பேப்பர்களை தூக்கிக்கொண்டு..

சினிமாவில் இருந்த பையனுக்கு போன் செய்து பாஸ்வேர்ட் வாங்கி தேடி அலைந்து பிரிண்ட் அவுட் எடுத்து.திரும்ப போலிஸ் கமிஷினர் ஆபிசில் உள்ள கடவு சீட்டு அலுவலகத்துக்கு சென்றேன்..ஆனால் மாணவர், கல்லூரி என்பதால் அனைவரும் மதிப்பு கொடுத்தார்கள்.. எல்லார் வீட்டிலும் ஒரு மாணவர் இருப்பார்கள் இல்லையா..


அங்கு இருந்தவர் ட்ரேஸ் (trace) அவுட் செய்து தேடியதில் லோக்கல் போலிஸ் இன்னும் கோப்பை அனுப்பவே இல்லை என்று தெரிந்தது..தலைக்கு மேல் கோபம் ஏறியது..என்ன செய்ய முடியும்..அங்கிருந்தே அந்த அதிகாரியை லோக்கல் போலிசுக்கு போன் செய்ய வைத்தேன்..உடனே பதற்றம் தெரிந்தது..ஏன் மேடம் கமிஷனர் ஆபிசுக்கு எல்லாம் போனிங்க..இங்க வந்து இருக்கலாமே என்று பணிவாக பேசினார்..

தட்கால் அவசரம் என்று தெரியவில்லை..இந்த மாதம் கோப்புகள் அதிகம்..அப்படி, இப்படி என்று தரனுக்கு சமாதானம் சொன்னார்களாம்....உடனே இரண்டு நாட்களில் வெரிபிகேஷன் அப்டேட் ஆனது.. திரும்ப கோரமங்களா படையெடுத்து..மாரத்தஹள்ளிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கி (இல்லாவிட்டால் சிஸ்டம்ப்படி ஒரு மாதம் கழித்துதான்  அடுத்த அப்பாயின்ட்மென்ட் தேதி) அங்கு மூன்று நாட்கள் கழித்து சென்றோம்..

சின்னவனுக்கு எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரு மாதம் கழித்து அப்பாயின்ட்மென்ட் வாங்கி செய்ததில் இருவது நாளில் கடவு சீட்டு கையில்..

கடைசியாக அங்கு எல்லாம் முடிந்து பிரிண்டிங், டெஸ்ட்பாட்ச், போஸ்டல் எல்லாம் வரிசையாக சிஸ்டமில் பார்த்துக்கொண்டே வந்து ஒரு நாள் காலையில் ஏழு மணிக்கே போஸ்ட் ஆபிஸ் போய் பறித்துக்கொண்டேன்..ஹப்பாடா..

அடுத்து விசா என்ற பூதம் பற்றி அறியாமலே...

5 comments:

Rathnavel Natarajan said...

தேவையான இடத்தில் அப்படியே எழுதுங்கள்: பாஸ் போர்ட் - கடவுச் சீட்டு. ஒரு பாடம், எந்த ஆவணங்களும் முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா ஆவணங்களிலும் பெயர் ஒன்று போல் இருக்கிறதா, Spelling சரியாக இருக்கிறதா, பிறந்த தேதி சரியாக இருக்கிறதா என. கடைசி நேரத்தில் என்றால் ஓட்டம் தான், இடையில் அரசு விடுமுறைகள், அதிகாரிகள் லீவில் செல்தல், மாற்றலில் செல்தல் என. அவசியமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Kirthika Tharan

Anonymous said...

முகநூலிலிருந்து வலைப்பூவிற்குக் காலடியெடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
மேலும், மேலும் தங்களின் எண்ண ஓட்டங்களை, இங்கே வார்த்தைகளின் நடையாக்கி தமிழுலகில் வெற்றிக்கொடி நாட்டிட வாழ்த்துக்கள்!

கிருத்திகாதரன் said...

நன்றி..

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

நல்ல தகவல்களை சொல்லியிருக்கீங்க..

கவிதை பூக்கள் பாலா said...

அடுத்து விசா என்ற பூதம் பற்றி அறியாமலே...