Friday, September 7, 2018

பெண்ணின் காதல்.

" அபிராமி...இந்த விஷயத்தை தொட மனமில்லை. ஏன் என்றால் . கொலை, தற்கொலை எதற்காகவும் சமூக வலைத்தளத்தில் ஆதரித்தோ, எதிர்த்தோ எழுதக்கூடாது என்பது என் முடிவு.

அனிதா விஷயத்திலும் மவுனமே காத்து வந்தேன். அந்த தற்கொலை தியாகபடுத்தி அதீத செய்திகள் வந்தால் மேலும் பல மாணவர்களை கையில் எடுக்க தோன்ற வைக்குமோ என்ற பயம் உண்டு. நமக்கு தெரியாத ஒரு அதீத சக்தி எழுத்துக்கு உண்டு. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும்.

அபிராமியிலும் மவுனத்தை எடுக்க விரும்புகிறேன். ஆயிரம் இருந்தாலும் கொலை அளவுக்கு உச்சம் தொடும் பொழுது அதை நூறு சதவிகிதம் எதிர்க்கிறேன். 

இந்த சமயத்தில் சில விஷயங்கள்..domestic abuse பற்றிய விழிப்புணர்வு. முகநூல் வரும் பல பெண்களுக்கு வார்த்தைகளாம் நடப்பது. 

ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பேசும் பொழுது அது உண்மையாகி விட சாத்தியமுண்டு. 

நீ ஃபேஸ்புக் வந்திருக்கிறதே சாட் செய்யவும், ஆண்களுடன் பழகவும் என்ற பார்வை பல ஆண்களுக்கு இருக்கு. ப்ரொஃபைல் எதுக்கு மாத்தனும்? ஆண்களிடம் லைக் வாங்கி அவர்களை இம்ப்ரஸ் செய்யவே..என்றும் எதுக்கு எப்போ பாரு வாட்ஸ் அப் .யார்கிட்டயோ பேசிக்கிட்டுருக்கா இப்படியும்..

ஆண்கள் இதற்காகவே வலை வீசுவது நடக்காமல் இல்லை. சிறு பாராட்டு கூட இல்லாமல் உழைத்து, சலித்து எந்த recognition ம் வீட்ல கிடைக்காத பெண்களுக்கு லைக்ஸ் கூட பெரும் வரமாய் தோன்றுகிறது. சில சமயம் அது அடிமை படுத்தும் விஷயமாகவும்..அதற்காக எதை வேண்டுமானலும் செய்து எழுதுவது..

அதாவது செய்ததை எழுதி லைக்ஸ் வாங்குவது வேறு...இதற்காகவே எதையாவது செய்து எழுதுவது..எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி..கூட்டங்களில் பங்கெடுப்பார், பிரபலங்களை சந்திப்பார்..எல்லா இடத்திலும் செல்ஃபி. தமிழில் எழுதி வாங்கி பதிவார்..அவருக்கு லைக்ஸ் கொடுக்கும் சுகம்..அதற்காக ஒரு அடி அதீதமாய் எடுத்து வைப்பார்..அவருக்கு அதுதான் மகிழ்வாக இருக்கும்..பெண்களுக்கான சமூக அழுத்தங்கள் எளிதில் புரியாது.

ஏதாவது ஒரு விதத்தில் ஆணுக்கு அங்கிகாரம் .அல்லது அதிகாரமாவது கிடைக்கும். அதிகாரமும் இல்லை..அங்கிகாரமும் இல்லை.உழைப்பும், பிள்ளை வளர்ப்பு..கூடுதலாய் நாகரிக வளர்ச்சியில் சக மனிதனின் வார்த்தைகளற்ற தனிமை வேறு..இணையம் தவிர வெளி நட்புகள் குறையும் பொழுது தனிமையின் ஆபத்து அதிகரிக்கிறது.

இதில் துணையின் வார்த்தைகள். சில  ஆண்கள் இப்பொழுதெல்லாம் பல கெட்ட வார்த்தைகளை மனைவி மீது பிரயோகிப்பதை கேள்விப்படுகிறேன்.எதுக்குடி வாட்ஸ் அப் ல அப்படி போஸ் தரன்னு ஒரு மனைவி கணவன் கேட்டதாய் சொன்னாள்.

இதுப்போன்ற விஷயங்கள் நடக்கும் பொழுது பொருளாதர, சமூக சுதந்திரம் அவசியம் தேவை. ஒரு பெண் பத்து, இருவது வருடம் வீட்டில் இருக்கிறாள். கேரியர் வளர்த்துக்கொள்ள கண்டிப்பாக சாத்தியமில்லை. காமம் பெண்ணுக்கும் இருக்கும்தானே...அந்த சமயத்தில் ஏதோ தவற வேண்டியிருக்கு. அப்பொழுது தன் தவறை உணர்ந்து சரி செய்திட ஆணுக்கு இருக்கும் வாய்ப்பு பெண்களுக்கு கிடையாது. அதாவது ஆண் மனைவிக்கு தெரியாமல் ஏதாவது செய்துவிட்டால் ஒரளவுக்கு மன்னிப்பு கிடைக்க வாய்ப்புண்டு ..திருமண பந்தத்தில் சீட்டீங் மிகப்பெரிய தவறு ..ஆனால்   இந்தியாவில் நடப்பெதெல்லாம் மனமொற்றிய திருமணமா என்ன? 

சிறு வயது திருமணம் கூட தவறுதான். இன்னும் என்னால் எல்லாம் அந்த அழுத்ததில் இருந்து வெளியேற , மன்னிக்க் முடியவில்லை. விவரம் தெரியுமுன்னே குடும்பம் .பிறகு குழந்தை. உலகமே குழந்தையோடுதான் பார்த்தேன் எனலாம் அது வரை பள்ளி,  கல்லூரி மட்டும்தான். நாலு இடம் போய் .சம்பாதிக்க அல்லல்பட்டு..தன் காலால் தானே நிற்கும் சுதந்திரம் பெண்களுக்கு இங்கு தருகிறோமா? சுயம் எந்தளவுக்கு கற்றுத் தருகிறோம்? 

காதலில் கூட பக்குவமாய் இருக்க வேண்டும் என ஏதாவது பேசுகிறோமா? எதிர்பாலின இனக்கவர்ச்சி ஐம்பது வயதில் கூட நடக்கிறது  என்பதை அறிவோமா? 

அதுமட்டுமல்ல..இணையம், உலகம், விளம்பரம், சினிமா எல்லாவற்றிலும் அதீத காமம் நிரம்பி வழிகிறது. இளைய சமூகத்திற்கு காமம் ஒரு சிறு விஷயம்.அதை தாண்டி அற்புத உணர்வுகள் உண்டு என்று உணர்வோமா?

ஒரு ஆண் நண்பர்..அவருக்கு காமம் மிக முக்கியமாய் இருக்கும். அதைதாண்டி அவருக்கு உலகம் இருக்கு என்று உணர்த்த முயற்ச்சித்தேன்..ஆனால் உலகமே அவருக்கு அதுவாக ஆனது. ஆண், பெண் ஈர்ப்புதான் உலகில் எல்லாம் என்பதை தீவிரமாக நம்புகிறார். ஏன் என்றால் அவருக்கு கற்பித்த உலகம் அது. 

நாலு நண்பர்களோடு மகிழ்வாய் இருக்க தெரிந்தவர்களுக்கு காம இச்சை கூட பிறகுதான்..மாதக் கணக்கில் சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சுகம், குழந்தை வளர்ப்பில் ஒரு சுகம் .அதையெல்லாம் விட திறமை வளப்படுவதுதான் சுகம்  என்னைக் கேட்டால் நாள் முழுக்க இதுப்போல எழுத சொன்னால் சோறு தண்ணியில்லாமல் எழுதுவேன்..இதுப்போல் உலகில் பிறந்த அனைவருக்கும் தன்னை மறக்குமளவுக்கு ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கும்.

சச்சினுக்கு கிரிக்கெட், ஸ்ரீதேவிக்கு நடிப்பு, கமலுக்கு சினிமா , ஸ்டெபிக்கு டென்னிஸ் இதுப்போல இவர்களின் flow சிறு வயதிலியே தெரிந்து அதில் மட்டும் ஈடுப்பட்டனர்.  இந்த flow எப்படி இருக்க வேண்டும் என்றால் தானும் உலகம் மறந்து அதில் முழ்கி உலகமும் அதனால் ஈர்க்கப்படும். அகாஸ்டியின் டென்னிஸ் பந்துகள் பறக்கும் பொழுது அதை தவிர  கண் எதயும் பார்க்க விரும்பாது..அதுதான் அழகான flow energy.. இதற்கு முன்னால் காமம் எல்லாம் சிறு விஷயம்.

ஆம் இயற்கை உடலுக்கு இரு பசி அளித்துள்ளது. உடற் பசி அதீதமாவதும், அதற்கு உணவளிக்காமல் நீண்ட நாள் இருப்பதும் தவறுதான். அப்பொழுதுதான் அது தன் தேடலை ஆரம்பிக்கும். அப்பொழுது தவறுகள் நடக்க் அதீத வாய்ப்புண்டு
 என்னைக் கேட்டால் விபச்சாரம் என்ப்தை பொதுவாக்கி..அந்தப் பசி ஏற்பட்டால் ஹோட்டல் போய் சாப்பிடுவது போல் விடுதிக்கு அதாவது பாலின வேறுபாடு இல்லாத , மனதுக்கு பாதிப்பு இல்லாத, வெறும் உடல் பசி தீர்க்கும் விபச்சாரம். அவ்ளோதான்..பிறகு குளிச்சிட்டு ஹப்பாடா.முடிச்சிட்ட்டோம். வேலய் பார்க்கலாம் போன்ற ஒரு விபச்சாரம்..ஆம் இது இருபாலாருக்கும் பொதுவில் இருக்கும் உணர்வு..இருவரும் தீர்த்துக்கொள்ள சுதந்திரமும். அவ்ளோதான்..அதுக்கு மேல் காமத்தில் பேச ஏதுமில்லை.

மிக மிகச்சிறு விஷயத்தை ..அதாவது காலை உணவுப்போல அது இரவின் உடலின் உணவு..அதைபோய் புனிதம், லொட்டு, லொசுக்கு என்றுப்போய். பெண் உடலை அதீதமாக்கி அவளை உடலுக்காக ஆகா, ஓகோ என்று சொல்லி.
அவள் திறமைகளை மேலே வராமல் முடக்கி.. அவள் உடலே பிரதானம்..அதுக்காக என்ன வேணா செய்யலாம் என்று தேவையில்லாமல் போற்றி..நிஜமா வடிவேலுப் போல் ஷ்ப்ப்ப்ப்ப்ப்பா..முடில என்று தோன்றுகிறது.


சமிபத்தில் ஒரு கேள்வி பதில் இணையத்தில். பெண் ஆணை கற்பழிக்கும் வாய்ப்பு இருக்கா என்று...அதற்கு ஒரு ஆண்..அந்த கொடுப்பினை எல்லாம் எங்களுக்கு இருக்கா என்ன என்று பதில் ..நகைச்சுவையாக இருப்பினும்..காமம் என்பது ஆணுக்கு மகிழ்வை மட்டும் தருவதாகவும்..பெண்ணுக்கு அத்து மீறல், வலி போன்றவையாகவும் இருக்கு. அதில் புனிததையும் வேறு போர்த்தி..தேவடியா, கெட்டுப்போனவ, ஏமாத்துக்காரி என்ற பட்டங்கள் கொடுக்கவும் தவறுவதில்லை..இந்தப்பக்கம் போற்றல். அந்தப்பக்கம் தூற்றல்..வசவெல்லாம் பெண் சார்ந்த வன்முறை சொற்கள்..அம்மா, அக்கான்னுட்டு ச்ச்சேய். எப்படா சக மனுஷியா பார்ப்பீங்கன்னு அலுப்பு வருது.  

ஒரு ஆண் பிரபலம்..அவரோட லைக் எல்லா பெண்களின் புகப்படத்திலும் இருக்கும்
 அவள் எழுத்தில், திறமையில் கவனம் வைக்கும் ஆண் மிக குறைவு. அதை ஊக்கபடுத்தும் ஆண்களும் பசுத்தோல் போர்த்திய புலியாகவே வல்ம் வருகிறார்கள் இப்படி எல்லாத்திலும் காமத்தை, உடலைப் போற்றுவதை மட்டும் பார்க்கும் பெண்கள் அதற்கு விட்டில் பூச்சியாக மாறும் வாய்ப்புண்டு 

போகும் வேகத்தில் கணவன், மனைவி ரொமான்ஸ் என்பதையே தொலைத்துவிட்டோம். காதல் என்றாலே அது கணவன் மனைவிக்கு இல்லை என்றாகிவிட்டது போன்ற ஒரு காலகட்டத்தில் உள்ளோம்.  உறவு என்பதை டேக் இட் கிராண்டட்..என்று மிக அலட்சியப்படுத்துகிறோம்.பெரும்பாலும் பெண்களுக்கு அதிகம்..ஆணுக்கு வெளி உலகம் இருப்பதால் இதில் இருந்து தப்பிவிட வாய்ப்புண்டு. . 

இணையத்துணை, ஆபிஸ் துணை அல்லது இணையவர். ( இணையத்தில்  இணைந்ததால் :) )  என்னுமளவுக்கு ஆண், பெண் நட்புகளை இங்கு காண்கிறேன். சரியா , தவறா இதெல்லாம் புரியாத காலமாகிவிட்டது. அது குடுமபதை பாதிக்காதவரை சரி..அது அதீதமாவதும் பிர்ச்சனைதான்.  அதைதான் கள்ளக்காதல் என்று தினம் தந்தியும், பூவும் கொச்சைப்படுத்தி பெரிதுப்படுத்துகிறது. டாய்லெட் கதவை திறந்து பார்க்கும் அசிங்கம்தான். அடுத்தவரின் அந்தரங்கத்தை திறந்து பார்ப்பதும். எங்கும், எதிலும் பெண்ணுடலை மட்டும் மையப்படுத்தி..அவளை மட்டும் அசிங்கப்படுத்தும் சமூகமா மாறிவிட்டோம்.

மாணவர்களுக்கு போன அக்சஸ் போல் திறமை ஊக்கப்படுத்தும் அக்சஸ் செய்துள்ளோமா? காமத்தை மலிவாக்கியது போல அறிவியலை, கணிதத்தை, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை சந்தோஷமாக்கி கொடுத்துள்ளோமா?  வாசிப்பதில் ஆர்வம் உள்ளவனுக்கு , ஆராய்ச்சியில் , விளையாட்டில் , சம்பாதிப்பதில் முனைபவர்களுக்கு காமம் பார்ட் டைம் கூட இருக்காது..ஜஸ்ட் லைக் தட் கடப்பார்கள். பெண்களுக்கும் இதை பொதுவாய் வைக்கிறேன்.

ஆம் காமம் தாண்டி .திறமைகளை கண்டெடுக்கும், வாசிப்பை அதிகப்படுத்தும், சமூக சார்ந்த செயல்களுக்கு தயார்படுத்தும் பணி மிக அவசியம் ..அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு அழகான நாட்டை நாம் உருவாக்கி தர முடியும் . அதைதான் நாம் ஒவ்வொரு செயலிலும் செய்ய வேண்டும். அதுவரை காமத்தை பேசுவதை கூட குறைத்துகொள்ளும் அவசியத்தில் உள்ளோம்.

Tuesday, April 17, 2018

விலங்குளால் விலங்கில்...பெண்

"இணையம் முழுக்க வன்புணர்வு , பாலியல் செய்திகள். தொலைகாட்சி திருப்பினால் பேராசிரியை குரல். செய்தி தாளில் வன்புணர்வு  இல்லாத நாள் குறைவு. பெண் என்பவள் நதி, தெய்வம் , தாய், புனிதம் லொட்டு , லொசுக்கு என்று பெயர்தான் ..பிறக்கும் முன்பே இன அழிப்பு அபார்ஷன்...இன்றும் நடக்கிறது. ஸ்கேன் செண்டர்களில் சட்டம் கடுமை என்பதால் வெளிநாட்டில் கூட போய் ஸ்கான் செய்து கொல்லும் அவலம். 

அதில் இருந்து தப்பி பிறந்தால் கள்ளிப்பால். அப்படியா..இக்காலத்திலுமா என்றால் இணையம் செல்லவும். இந்தியாவில் மட்டுமில்லை..சீனாக்கு 2500 வருட வரலாறு..அங்கு தண்ணி குடுவை. பெண் என்பவளின் நிலைமை எப்படியெல்லாம் வரலாறு பேசுது. பாகிஸ்தானிலும் வழக்கம் உண்டு. 

அதற்கும் தப்பி பிழைத்தால் சுற்றி வளைய வரும் பீடோஃபைல் எனும் கயவர்கள் ..அடுத்து சொந்த் பந்த அத்து மீறல்கள் ..இதியாவில் ஒரு பாலியல் தொடுகை கூட சந்திக்காத் பெண் குழந்தை இல்லை என்றே சொல்லலாம். வன்புணர்வு பள்ளியில் வீட்டில் மிரட்டலில் என்று பல்வேறு விதமாக பாயும்.  இங்கு ஆப்ரிக்க நாடுகளில் பாலியல் உறுப்பு அறுக்கும் அவலம், சீனாவில் காலை நசுக்கும் அவலம், ஒரு ஸஹரா பாலைவன நாட்டில் குண்டுதான் அழகு என்று வலுக்காட்டாய உணவு சித்திரவதை..அதாவது இருவது லிட்டர் ஒட்டக பால், இரண்டு கிலோ வென்னையுடன் மாவு இது சாப்பிடாவிடில் இரு மரப்பலகை கிடுக்கியில் விரல் நசுக்கப்படும்.  

இதிலும் தப்பித்தால் வயது பெண்.டேட்டிங் செல்லும் நாகரிக சமுதாயம் ஒரு பக்கம் கதற அடிக்கும் என்றால் கல்லூரியில் விலை பேசும் ஆண்கள், வேலை செய்யும் இடத்தில்...ஈவ் டீசிங்கில் இறந்த சரிகா ஷா மறக்க் முடியாது. இன்ஸெஸ்ட் எனப்படும் சொந்த்ங்கள் மூலம் சூறையாடப்படுவது. அடுத்து இள வயது கட்டாய  திருமணம். பாலியல் பலாத்காரம். 

அதை தவிர மாதவிடாய் கொடுமைகள். எந்தக் கொடுமையை எழுத ..விட்டு விட..கட்டாய கல்யாணம்..வல்லுற்வு திருமணம், இன்னும் சில நாடுகளில் பெண் கடத்தி திருமணம்.. இஸ்லாமிய நாடுகள், இந்தியா உள்பட கவுர்வக்கொலைகள் அதற்கும் வன்புணர்வு..சாதிய கொலைகள், டவுரி எரிப்புகள், கொடுமைகள், கணவன் செய்யும் பாலியல் பலாத்காரங்கள், அடி , அசிங்க பேச்சுகள்..அடிக்கிற கை அணைக்கும் என்ற பழமொழி வேற..லூசுங்க 

உலகில்  பெண் கொலைகளில்  38% கணவர் மூலமாகத்தான் நடை பெறுகிறதாம். இங்கு குடும்ப அமைப்பு என்பது பெண்ணுக்கு மிகப்பெரிய எதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ள து. அபார்ஷன் , பிள்ளை பெறல் , குடும்பக்கட்டுபாடு அனைத்திலும் சர்வ சாதர்ணமாக அத்து மீறல் கட்டாய விபச்சாரம் , கடத்தல் ஒரு பக்கம் என்றால் போர்னோ கிராபி ..குளிப்பதில் இருந்து பல விதமாய்..கட்டாய போர்ன் வன்முறை நவீன வடிவ வன்முறை ..ஆனால் மறைமுகமாக எடுத்து வெளியிடுவது வேறு வகை. பல பெண்கள் தற்கொலை வரை போகிறது போர்ன் பிரச்சனை. இணையம் வந்தாக் ஆகா ஓஹொ என்று பேசி மயக்கி படுக்கை அழைக்கும் அல்லது ரகசியமாய் வன்புணர்வு செய்ய பெருங்கூட்டம். அதை தவிர் முகம், கால் என்று ஒன்றுவிடஃமல் புகைப்படம் பார்த்தே கிளர்ச்சி அடையும் கூட்டம். பேசி பேசி ஆன்லைன் போர்னுக்கு வலை விரிக்கும் கூட்டம் ..கவிதை , அன்பு , காதல் , நேச்ம் என்று பெயரிட்டு காரியம் ஆகி கை கழுவி தற்கொலை வரை தூண்டும் நவின வன்புணர்வு குற்றங்கள் ..

போர், கூட்ட்ம், மாப் வெறி , குடி , பழங்குடி மக்கள் , போலிஸ் , ஆர்மி என்று இன்னும் இன்னும் பெண் மேல் அவிழும் கொடுமைகள் முடிவே இல்லை. 

ஆஸிட் வீச்சு , காதல் கொலை எல்லாம் இன்னொரு பக்கம் 


படித்தா சரியாகும்னா துணை வேந்தரே படுத்தா ..கொடும் அவலம்.

கல்வி என்ன அளித்துள்ளது? பள்ளியில் ஆசிரியர்கள் மேல் பல புகார்கள்..இதில் உலகத்தில் அதிகம் பதியப்படாத உலகுக்கு வெளிவராத் கொடுமைகள் பாலியல் வன்புனர்வுதான்..

கல்லூரிகளை விபச்சார கூடங்கள் ஆக்க மும்முரமாக வேலை செய்கிறார்கள்..பட்டம் பெற்ற கல்வியாளர்கள். 

ஆணை எப்படி வளர்க்கிறோம்? நாகரிகமான ஆண் என்றால் பெண்ணை துளியும் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. சக மனுஷியாக ஒவ்வொரு இடத்திலும் பார்க்க தேவை. பாலியல் கல்விகள் தேவை. கடவுள் பற்று குறைந்த ஆனாள் மனித நேயத்தில் மேம்பட்ட பல் நாடுகளில் கற்பழிப்பு மிக குறைவு.

யூ.என் செய்திப்படி உலகில் எந்த மதம், கலாச்சாரம், நாடு எதுவும் பெண் சமத்துவத்தை முழுமையாக வழங்கவில்லை. இன்னும் நூற்றாண்டுகளிலும் இதான்..

இதற்கு என்ன விடிவு? பெண் சம உரிமை மட்டுமே!! 

ஒவ்வொரு தலையும் பிறப்புறுப்பு மூலமே வந்துள்ளது . தான் வந்த இடத்தை சிதைப்பதில் என்ன மகிழ்வு கிடைக்கும்? பால் குடித்த உணவுக்கான இடத்தை  ..என்ன சொல்ல வார்த்தை வரல..பொய்யான எதோ ஒன்றை தேடியே இக்குற்றங்க்ள். ஆண்மை என்பதன் அர்த்தமே அறியாமல் மன நிலை பிறழ்த செய்ல்கள்.  எல்லாருக்கும் சட்டம் இருக்கு..ஆனால் எதையும் தடுக்க முடியவில்லை, சந்தர்ப்பம்  கிடைத்தால் மூன்றில் ஒரு ஆண் ஏதாவது ஒரு வடிவ ரேப் செய்ய தயாராக இருப்பதாய் சைக்காலஜி ஆய்வு சொல்கிறது

புக்கர்  டி வாஷிங்டன் up from slavery வாசிக்கிறேன். பல் தேய்த்து , உடுத்தக் கூட தெரியாத மாற்று நிற மனிதர்கள் அடிமையில் இருந்து மீண்டு வந்த நிஜக்கதை. சுத்ந்திரம் வந்தும் பல அடிமைகளுக்கு என்ன செய்ய என்று தெரியாமல் அடிமையாகவே இருக்க சில்ர் முதலாளி களிடம் கேட்டார்களாம்..படித்து, பெரும் பத்வி வந்தும் சம உரிமை இல்லை. இங்கு அவர்கள் போராடடம் சமூகம் நோக்கி அல்லது முதலாளிகளை நோக்கி...ஆனால் பெண் விடுதலை என்பது வேறு வடிவம்..

எனவே எழும் நேரத்தில் எல்லாம் பாசம் காட்டி முடக்கப்படுகிறாள்.. 

பெண் என்பவள் பெற்றவனை, சகோதர்களை, கணவனை, மகன்களை என்று தன் உரிமைகள் நோக்கி பேச் வேண்டி இருக்கு. குடும்ப பெண், கலாசாரம் போன்ற  சொற்களால் தன்மானம் இழக்கிறாள். . எதிர்த்தால் வெளி உலக பயம்..இல்லாவிடில் அடிமை வாழ்வு..எது சரி..பறவைகளை பறக்க விடு என்றால் பல கழுகுகள்..அதற்காக கொடும் துணையுடன் அல்லது இல்லாமல் கூண்டில் என வாழ்வு. ஆக மொத்தம் ஒவ்வொரு பெண்ணை சுற்றியும் கூண்டு., அவள் காலம் காலமாய் அன்பை அளித்து இப்போது தன் உரிமைக்காக கூண்டை விட்டு விட் விரும்புகிறாள்..அடிமை என்பதை அன்பு என்று சாயம் பூசும் குடும்ப அமைப்பு..அதில் பிறக்கும் வன்முறைகள் .,யாரை எதிர்த்து என்ன சாதிப்பாய் என்றை கேள்வியில் திரும்பவும் அடிமைத்தன் சுழ்ளில் சிக்குவாள். இங்கு பெரும் அளவில் மன மாற்றம் தேவை. 

இங்கு இதையெல்லாம் மாற்ற பெண் என்ன செய்ய வேண்டும்?

மதம் அடிமை படுத்தினால் அதை எதிர்த்து பலமாய் குரல் கொடுக்க வேண்டும், கலாச்சார பெயரில் என்றால் அது தேவையே இல்லை, குடும்ப அமைப்பு என்ற பெயரில் கட்டியபோடடால் அப்புறம் பார்த்துக் கொள்வோம் அதையெல்லாம், முதலில் வேண்டியது விடுதலை என்போம், நாட்டின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் , அமைப்பின் பெயரால் பல வடிவங்களில் வரும்..முதலில் தேவை சம உரிமை பிறகு அமைப்புகளை கவனிப்போம், சமுகத்தை புதிதாய் சமமாய் கட்டமைப்போம் என்று போராடும் துணிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. அமெரிக்கன் சிவில் வார் மூலம், பேருந்தில் சமாய் உக்கார வைக்காத ரோசா பார்க்ஸ் மூலம், மார்டின் லூதர் கிங் மூலம் அடிமைகள் உரிமை பெற்றனர். ஆனால் நமக்கான போராட்டம் யா செய்வார்? எப்படி செய்வார்? நாம்தான்..ஒவ்வொரு அடக்கு முறையும் எதிர்க்க வேண்டும்..சொல்லால் செய்யும் வன்புணர்வுகள், செயலால், அமைப்பால் என்று எல்லாவற்றையும் எதிர்க்கும் துணிவு வேண்டும். பெண் மேல் கை  வைக்க பயம் வேண்டும். அதற்கு ஆணின் துணை வேண்டும். 

விலங்குகளை துரத்த நாம்தான் விலங்குகளை உடைக்க வேண்டும். காப்பாற்ற யாரும் வரமாடடார்கள். ஒரு நாள் வேண்டுமானால் முகநூலில் துணை பதிவு போடலாம். தன்னம்பிக்கை, வேலை, கல்வி , உழைப்பு இவற்றை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது. எக்காரணமும் முன்னிட்டும்  பொருளாதாரத்தில் வலுவாக இருக்க வேண்டும். கல்வியும், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இருந்து கேள்வி கேக்கும் விழிப்புணர்வு வந்தால் சுதந்திரம் பற்றி பேசலாம். 

எதையும் விட தன்மானம் மிக முக்கியம் என கருத வேண்டும். நம்மை மாற்றிக்கொள்ளாமல் ஆணை சமமாக நடத்து என்று நாம் சொல்ல முடியாது. துணிவாய் சமமாய் இருக்க முயற்சிப்போம். பிறகு ஒவ்வொன்றையும் எதிர்த்து செயல்பட வேண்டும். நம் வீட்டின் ஆண்களுக்கு நாம் அடிமையில்லை என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்த்தும் பொழுது நாடு முழுக்க ஆண்களுக்கு ஆண்  என்றால் பெண்ணை சமமாய் நடத்துவது என்பது புரியும். அது நடந்தால் மட்டுமே பாலியல் வான் கொடுமைகள் குறையும். சக மனிதராய் மதிக்கும் வேளையில் கொடுமை செய்யும் மனம் வராது. 

அது வரை காதல், பிரியம் , நாணம் எல்லாம் ஒதுங்கி வழி விடட்டும். பொருளாதாரம் ஆம் சரி சமமாய் வேலை வாய்ப்பில் உயரத்தால், தன்மானத்தோடு வாழ் குரல் கொடுத்தல் என இருந்தால் வர்றியா என்று கேக்கும் ஒவ்வொரு ஆணையும் ஒதுக்கி வைக்கலாம். கேவலமாய் பார்க்கலாம். அவன் நம்மை உபயோகிக்க முடியாது, போகப் பொருள் இல்லை என்பதை மனதளவில் உணர்த்த வேண்டும். ஆண்  பேசினால் மயங்க கூடாது. ஆம் என் குடும்பம்தான், என் காதல்தான், பிரியம்தான் ஆனால் இன்றைய தேவை என் சுதந்திரம் , தன்மானம் என்று குரல் உயர்த்த அவசியம் உள்ளது/ சட்ட்ங்கள் சட்ட்ங்களாய்தான் இருக்கு. ஆனால் எந்த பெண்ணும் அதை தொட தைரியம் இல்லை. 

உலகெங்கும் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமே மிக குறைந்த சதவிகிதத்தில் பதியப் படுகிறது.  ஐம்பது சாதிவிதம் மேல் கண்ணுக்கு தெரியாத வன்முறைகள். எப்படி நிறுத்த போகிறோம்?

பள்ளிக்கு அனுப்பினால், கல்லூரிக்கு அனுப்பினால் , வேலைக்கு அனுப்பினால் என்று கேள்வி கேட்டுக்கொண்டு முன்னேற விடாமல் ஓர் பகுதி செயல்படும்..ஆம் கல்லூரிக்கு அனுப்புவேன் ..அங்கு நடைபெறும் அசிங்கங்களை தட்டி கேக்கும் துணிவை ஏற்படுத்துவேன். ஆம் வேலைக்கு செல்வேன் தட்டி கேப்பேன் என்று நாடு முழுக்க இயக்கமாய் செயல்படும் பொழுது நம்மில் மாற்றம் வரும்.  நம்மை சக மனிதராய் மதித்தல் நடைபெறும். இல்லாவிடில் ஊருக்கு ஒரு தாலிபான் இயக்கம் ஏற்பட்டு இடுப்பில் தார் பூச தயாராய் இருக்கும்?

எதை தேர்ந்தெடுக்க போகிறோம்? சிறகுகளாயையா  அல்லது கூண்டையா? எனக்கும் இக்கேள்வியை கேட்டுக் கொள்கிறேன்..நாளை என் பெண்களுக்காய் தாய்மையுடன். 

எனக்கு ஒரு கனவு..

என் பெண்களும் , ஆண்களும் அரசியலில் ஒரே இடத்தில் 

என் பெண்களும், ஆண்களும் பாதுகாப்பாய் பயணம் செய்வது 

என் பெண்களும், ஆண்களும் ஒரே இனமாய் மதிக்கப்படுவது 

என் பெண்களும் ஆண்களும் உலகம் முழுக்க கல்வி 

என் பெண்களும் , ஆண்களும் வாழ்வை தேர்ந்தெடுக்கும் சரி சம வாய்ப்பு 

இரவு நேர பயணம், பொருளாதார சுதந்திரம், சரி சமமாய் குடும்ப அமைப்பு. 

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. 

ஆணும் பெண்ணும் சமம் எனும் காலம் காண..