Wednesday, October 22, 2014

அமெரிக்க அனுபவம் ..கானல் நீரா? பாலைவன சோலையா?

கானல் நீரா? பாலைவன சோலையா? பயணம் _1

இன்று வெளிநாடு பயணம் என்பது பெரிய விஷயமில்லை..இந்திய குழந்தைகள படிப்புக்காக செல்வது மிக சகஜமாகி விட்ட விஷயம்..இந்த நேரத்தில் நான் சொல்வது என்ன புதிதாக இருக்க போகிறது என்று நினைத்தேன்..ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு, பயணம் கொடுக்கும் பாடங்கள் அதிகம்..இந்த தொடரில் திடீர் என்று பயணத்தில் இருந்து பிளாஷ் பேக்க்கு மாறும் அபாயம் இருக்கு..த்ரில்லர் கதை இருக்கலாம்..ஆனால் எதுவும் இல்லாமல் ஒரு சக பயணியுடன் பயணிப்பது போல எழுத வேண்டும் என்பதுதான் எண்ணம..

பையனை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டிய அவசியமோ, லட்சியமோ இல்லை..பிறகு ஏன் என்றால் சில விஷயங்கள் அப்படியே அடுக்கு அடுக்காக நிகழும், நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்போம், அதற்காக உழைப்போம் நம்மை அறியாமலே அப்படி நிகழ்ந்துதான் பையனின் வெளிநாடு படிப்பு.

ஒரு போன் ..சுபஸ்ரீ மோகன் சீனாவில் இருந்து...நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருந்தபொழுது உன் பையன் திறமை உள்ளவன் என்று சொல்கிறாய்..ஏன் நீ அமெரிக்காவிற்கு அனுப்ப கூடாது என்று கேட்க..அன்று பொறி பற்றி கொண்டது ..ஆனால் இதை அறியாமலே பையன் நிறைய தகவல்கள் சேகரித்து வைத்து இருந்தான். வெளிநாட்டு கல்வியில் பெற்றோரின் பங்கு மற்றும் அவசியம் பற்றி தனி தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன்.

அட்மிஷன் பிப்ரவரி மாதமே வந்தாயிற்று...விசா மே மாதம் எடுத்தால் போதும் என்று எல்லா வேலையையும் தள்ளி போட்டாச்சு. விசாக்கு லெட்டர் வாங்க காலேஜ்க்கு அப்ளை செய்தோம். பார்த்தால் உங்கள் பையனின் கடைசி பெயர் (last name ) பாஸ்போர்ட்ல் இல்ல..சரி செய்து அப்ளை செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

அன்று ஆரம்பித்தது பாஸ்போர்ட் ஆபிஸ் அலைச்சல். ஒரு நாள், இரு நாள் எல்லாம் இல்லை..கிட்டத்தட்ட இருபது நாட்கள்..நம் சிவப்பு நாடாவா என்னவென்றே புரியவில்லை..ஆனால் எங்கு சென்றாலும் சின்சியராகதான் செய்தார்கள்.

முதலில் ரீஜினல் பாஸ்போர்ட் ஆபிஸ் ... பாஸ்போர்ட் ஆபிசருக்கு தட்கால் முறையில் அப்பாயின்ட்மென்ட்  வாங்க விடியலில் போய் நிற்க வேண்டும். சிலர் காலையிலேயே பைல்களை  நாற்காலிகளில்  போட்டு வைத்து இருந்தார்கள். அதன் ரகசியம் அப்ப புரியவில்லை. போய் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சில சமயம் மூன்று மணி நேரமும் ஆகும்.. வரிசையில்  நின்று விட்டு அப்பாயின்ட்மென்ட் வாங்கிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். பெரும்பாலும் ரிநிவல், அரபு நாடுகள் செல்பவர்களும், மாணவர்களும், சில கம்ப்யூட்டர் வல்லுனர்களும் இருந்தனர். பெரிய பெரிய குளிருட்டப்பட்ட அறைகள். உள்ளே காபி டே விற்பனை, அப்ளை செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி என்று எல்லாம் தரத்துடன் இருந்தது.


டோக்கன் வரிசைப்படி அழைத்தனர்..பயங்கர ஒழுக்க முறையுடன் நடப்பதாக இருந்தது.. ஆனால் எங்கயோ சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது என்று பல முறை சென்றதில் அறிந்துக்கொண்டேன். பாஸ்போர்ட் அதிகாரி செக் செய்துவிட்டு ஏன் தட்கால் என்றார்..அவசரமாக கல்லூரிக்கு  அனுப்ப வேண்டிய அவசியத்தையும் , கல்லூரி  அட்மிஷன் லெட்டர்களை காட்டியவுடன் போய் மாஜிஸ்ட்ரேட் அளவு பதவி இருப்பவர்களிடம் உடனே கடிதம் , சில நோட்டரி பப்ளிக் கையழுத்து எல்லாம் கொண்டு வாருங்கள்..இவரின் மகன் என்றும், பெயர் மாற்ற சில விஷயங்களையும் மேற்கொள் செய்து குறிப்பிட்டார் . ஏற்கனவே பேப்பரில் விளம்பரம் எல்லாம் கொடுத்து ஆயிற்று. ஜாதி பெயர் கடைசி பெயராக சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இங்கு உண்டு..ஏற்கனவே எல்லாரும் என்னை  வற்புறுத்தி இருந்தனர்..ஏன் கடைசி பெயர் சேர்க்கவில்லை என்று..அதற்கு பின்னாடி இத்தனை பெரிய அலைச்சல் இருக்கும் என தெரியவில்லை..அப்பா பெயரை கடைசி பெயராக போட்டுக்கொள்ளும் பழக்கம் இங்கு இல்லை..எனவே பாஸ்போர்ட் ல் கடைசி பெயர் போடாமலே கொடுத்து விட்டார்கள். கடைசி பெயர் இல்லாவிட்டால் வெளிநாட்டில் ஒரு டிக்கட் கூட பதிவு செய்ய முடியாது..அங்கு உள்ள முறைகள் அப்படி..


உடனே தோழி மூலமாக ஒரு கமிஷனருக்கு சமமான  பதவியில் இருக்கும் அதிகாரியிடம்  கடிதம் வாங்கினேன்..அங்கு ஏற்கனவே இது போன்று கொடுத்து பழக்கம் இருக்கு..ஆனால் எல்லாமே நேரடியாக சென்றால் அலைச்சல் மட்டுமே மிஞ்சும்.. விஷயம் தெரியாதவர்கள் உள்ளே நுழைய முடியாத கோட்டையாக மட்டுமே பல அரசாங்க அலுவலகங்கள் உள்ளது. நல்லவேளை தோழி போன் உடனே வேலை செய்தது..அங்கு அமர்ந்து ஆபிசரிடம் செம அரட்டை..என் போன் நம்பர் வாங்கிக்கொண்டு என் மகளுக்கு உங்கள் உதவி வேண்டும் என்று அன்போ அன்பை கொட்டினார்..நாம் பேசும் வரை மட்டுமே..போய் பேசினால் எல்லா காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு..தரன் எனக்கு கொடுக்கும் ஒரே பாராட்டு இதுதான்..உன்னை மார்கெட்டிங் அனுப்பினால் சாதித்து விடுவாய் என்று. மகளை அவர் பிறகு தகவல்களுக்கு அனுப்பியது வேறு கதை.

லெட்டர் வாங்கிக்கொண்டு மறுநாள் ஓடுகிறோம்..திரும்ப க்யு ..திரும்ப அதே பாஸ்போர்ட் ஆபிஸ்.. ஆபிசர் பார்த்துவிட்டு பெயர் மாற்றம் மட்டும் பத்தாது..பதினெட்டு வயதில் பாஸ்போர்ட் எக்ஸ்பயர் ஆகிறது..அதற்கும் சேர்த்து அப்ளை செய்யுங்கள் என்று சொல்ல..திரும்ப அதற்க்கான டாகுமென்ட்ஸ் சேர்த்துக்கொண்டு இரண்டு நாள் கழித்து படை எடுத்தோம்..அதற்குள் அங்கு போலிஸ் நண்பர் ஆகி விட்டார்.. ஆகவே முன்னாடி சேர்களில் பைல்கள் கிடக்கும் ரகசியம் கூட தெரிந்து கொண்டாயிற்று..என் போன்றவர்களின் கண்களில் இருந்து குறுக்கு வழிகள் தப்புவது கஷ்டம்..கண்டுபிடிதுவிடுவேன்..மிக அவசரம் என்றால் பயன்படுத்திக்கொள்வேன்..வேறு வழி இல்லாவிட்டால் மட்டுமே..இது நம் சிஸ்டம் என்று பழகி கொள்ளும் மனம்...இதான் நிதர்சனம்.பிறகு உடனே கிடைத்ததா? ஏன் ஒரு மாதம்? அடுத்த பதிவில்..

6 comments:

N.Ravi Shankar said...

நிலையான முடிவு எடுக்காதவரை யாருக்குமே
வெற்றி ஒரு கானல் நீர் தான்...

நீங்க ஸ்ட்ராங் Planning Preparation பண்ணி

இருந்திங்க So you WON

Congrats

KANNAA NALAMAA said...

"..இது நம் சிஸ்டம் என்று பழகி கொள்ளும் மனம்...இதான் நிதர்சனம்!ஆம் ! இதுதான் நிதர்சனம் !

bala said...

அதற்குள் அங்கு போலிஸ் நண்பர் ஆகி விட்டார்.. ஆகவே முன்னாடி சேர்களில் பைல்கள் கிடக்கும் ரகசியம் கூட தெரிந்து கொண்டாயிற்று..என் போன்றவர்களின் கண்களில் இருந்து குறுக்கு வழிகள் தப்புவது கஷ்டம்..கண்டுபிடிதுவிடுவேன்..மிக அவசரம் என்றால் பயன்படுத்திக்கொள்வேன்..வேறு வழி இல்லாவிட்டால் மட்டுமே..இது நம் சிஸ்டம் என்று பழகி கொள்ளும் மனம்...இதான் நிதர்சனம். humm unmai than ungal pativu kal padikkum pothu therikinrathu ............ neengal than inraiya ulakin ethaartha manitharkalaai mari ponathai pirathi palikinreerkal ........

Avargal Unmaigal said...

இதற்கெல்லாம் போலிஸ் கமிஷனரிடம்கடிதம் வாங்கி இருக்கதேவையே இல்லை .. நீங்க் பேஸ்புக் பிரபலம் என்று சொல்லி இருந்தால் உடனே பாஸ்போர்ட் தந்திருப்பார்களே.

Avargal Unmaigal said...

இந்தியாவில் வசிக்கும் போது இதெல்லாம் அன்றாட பழக்கம் என்று நாம் நினைத்து மேலே தொடர்ந்து செல்வோம் ஆனால் வெளிநாட்டில் வசித்துவிட்டால் நம் சிஸ்டத்தின் மீது படும் கோபம்தான் வருகிறதுங்க

jayakumar said...

hmmmmmmm.....