Tuesday, April 30, 2013

பள்ளி அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளும்,விவரங்களும்.



பள்ளி அளவில் நடைபெறும்  போட்டி தேர்வுகளும்,விவரங்களும்.

பள்ளி அளவில் பலவித போட்டித் தேர்வுகளும் அதற்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன. பல பள்ளிகள் அதற்காக மாணவர்களைத் தயார் செய்து அனுப்புகின்றன. ஆனால் பல மாணவர்கள் அதைப் பற்றித் தெரியாததால் அதன் மூலம் வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் கூட எப்படிக் கலந்து கொள்வது எனத் தெரியாததால் நல்ல வாய்ப்புகளை இழக்கின்றனர்.

இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒலிம்பியாட் தேர்வுகள் அரசாங்கத்தின் ஆதரவில் நடைபெறுகி
ன்றன. அது தவிர பல தனியார் தன்னார்வ நிறுவனங்கள் தனியாகத் தேர்வை நடத்துகின்றன. நன்கு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல அனுபவம் வழங்கும். ஆனால் இதற்காக மாணவர்களைப் பிழிந்து எடுக்காமல் ஒரு அனுபவம் கிடைக்க எழுதுவதினால் நாளை இது போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.  

NTSE தேர்வு
இந்திய அளவில நடக்கும்
NTSE தேர்வு. இதன் மூலம் வருடா வருடம்  படிப்பு முடியும் வரை ஸ்காலர்ஷிப் பணம் கொடுக்கப்படுகிறது. மிகப் பெருமை வாய்ந்த தேர்வுகளில் ஒன்று. சென்ற வருடம் வரை எட்டாம் வகுப்புக்கு நடந்துகொண்டு இருந்தது. இந்த வருடம் முதல் பத்தாம் வகுப்புக்கு நடைபெறுகிறது. அதன் லிங்க்
http://www.ncert.nic.in/programmes/talent_exam/talent3.html

KVPY தேர்வு KishoreVaigyanicProtsahanYojana:
இந்த IISC  எனப்படும் இந்தியன் இன்ஸ்டியுட் ஆப் சைன்ஸ்-ஆல்  பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வு. கல்லூரி மாணவர்களுக்கும் நடைபெறுகிறது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு IISC ல் சீட் கிடைக்கும் வாய்ப்பும் அதை தவிர PhD படிப்பு வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. அதன் லிங்க்
http://www.kvpy.org.in/main/


NSEC or National Standard Examination in Chemistry:

 வேதியல் பாடத்திற்கு நடக்கும் போட்டித் தேர்வு.

IAPT or Indian Association of Physics Teachers and HBCSE or HomiBhabha Centre for Science Education  அவர்களால் நடத்தபடுகிறது.

தகுதி :
11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEP or National Standard Examination in Physics:
மிக மதிப்பு மிகுந்த தேர்வு இயற்பியல் போட்டித் தேர்வு. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் உலக அளவில் நடக்கும் இயற்பியல் போட்டித் தேர்வுக்கு அனுப்பப் படுவார்கள் International physics Olympiad தகுதியாக இந்தத் தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEJS or National Standard Examination in Junior Science:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் அறிவியல் தேர்வு.

தகுதி : 10 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEA or National Standard Examination in Astronomy:

ஐந்து சுற்று நடக்கும் வானவியல் ஒலிம்பியாட் முதல் சுற்று தேர்வு.

தகுதி : 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை உள்ள இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEB or National Standard Examination in Biology:
உயிரியல் பாடத்தில் வைக்கப்படும் போட்டித் தேர்வு. இதுவும் ஹோமிபாபா மூலமே நடத்தப்படுகிறது .

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன. இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/


RMO or Regional Mathematics Olympiad:

மிக முக்கியமானது கணக்கு பாடத்தில் நடத்தப்படும் ஒலிம்பியாட். தேர்வு செய்யப்பட்டவர்கள் IMO ல் பங்கு பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. பொதுவாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தேர்வு
.
தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புஇந்திய மாணவர்கள்.

சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

ZIO or Zonal Information Olympiad:

தகுதி : 8 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்


http://www.iarcs.org.in/inoi/


து தவிர தனியாரால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் விவரம் கீழே வருமாறு .

NSTSE or National Science Talent Search Examination:


தகுதி : 2 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன. இல்லாவிடில் இணைய தளம் மூலமா
விண்ணப்பிக்கலாம்.
http://www.unifiedcouncil.com/

unified council நடத்தும் மற்ற போட்டித் தேர்வு...



UCO or Unified Cyber Olympiad:

தகுதி : 3ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு
http://www.unifiedcouncil.com/why_uco.aspx



science Olympiad Foundation

நடத்தும் போட்டி தேர்வுகள்.

NCO or National Cyber Olympiad.
NSO or National Science Olympiad.
IMO or International Mathematics Olympiad.
IEO or International English Olympiad.

தகுதி : 2 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய
ளம் மூலமா விண்ணப்பிக்கலாம்

http://www.sofworld.org/


silver zone அமைப்பு நடத்தும் போட்டி தேர்வுகள் .

IIO or International Information Olympiad.
IOM or International Olympiad in Mathematics.
IOS or International Olympiad in Science.

IOEL or International Olympiad of English Language.

SKGKO or  Smart Kid General Knowledge Olympiad.

ICGC or International Computer Graphics championship.

ITHO or Internationa Talent Hunt Olympiad
.
http://silverzone.org/newweb/index.asp

Spelling Bee தேர்வுகள்.

http://www.marrsspellingbee.com/index.php.

பள்ளிகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டி. பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

HDFC நடத்தும் ஸ்பெல்லிங் போட்டித் தேர்வு. விவரங்களுக்கு,

http://www.spellbeeindia.in/

இதைத் தவிர பள்ளி  மாணவர்களுக்கு Mac Millan, Asset தேர்வுகள் அவர்களை மேம்படுத்தும் தேர்வுகளாக நடத்தப்படுகிறது. அதன் இணைய முகவரி .

http://www.ei-india.com/about-asset/how-do-i-prepare-for-asset/

http://iais.emacmillan.com/


கல்வி தொடர்..டெக்னோ பள்ளிகள் ஒரு சிறு அலசல்.

கல்வி தொடர்..டெக்னோ பள்ளிகள் ஒரு சிறு அலசல்.

IIT என்றாலே வட இந்திய மாணவர்கள் என்று இருந்த நிலைமை போய், இன்று அதிக ஆந்திர மாணவர்கள் ..எப்படி வந்தது இந்த மாற்றம் ? 

முன்பு IIT நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டுமென்றால் வடபகுதி மாணவர்களே சிறப்பாக எழுதி நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள். சமீப காலங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாணவர்கள் மிகப்பெரிய விகிதத்தை IIT ல் பெற்று வருகிறார்கள். இது எப்படி சாத்தியமானது ? இங்கும் வணிக கல்விதான்.. மிகச் சிறந்த கோச்சிங் (டெக்னோ பள்ளிகள் ) பள்ளிகள் விஜயவாடாவில் ஆரம்பித்து இப்போது தென் இந்தியா முழுக்க கிளைகளை பரப்பி வருகின்றன.

டெக்னோ ஸ்கூல் என்று அழைக்கப்படும் இப்பள்ளிகள் சிறு வயது மாணவர்களை குறி வைத்து செயல்படுகிறது அவர்களின் தாரக மந்திரம் “to catch students young”. ஆறாம் வகுப்பில் இருந்து IIT, மற்றும் இந்திய அளவிலான ஒலிம்பியாட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவது இவர்கள் வேலை.

இங்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் சிந்திக்க முடியாது. சில பள்ளிகள் காலை ஏழில் ஆரம்பித்து இரவு வரை கோச்சிங் தருகின்றன. பல பள்ளிகளில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை..ஏன் சில பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை..பொது மைதானத்துக்கு பெயருக்கு அழைத்து செல்வார்கள். விளையாட்டை விளையாட்டாக எடுத்து கொள்ளும் பள்ளிகள்.

போட்டி என்று வந்து விட்டால் ஸ்ட்ரெஸ் என்பதை தவிர்க்க முடியாதது. மிக இளவயதில் போட்டிக்கு தயார் படுத்துவது மாணவர்களை எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் கொண்டு விடும் என்று அறியாமலே பெற்றோர்கள் போட்டி போட்டு கொண்டு இந்த பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பல மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவு வளர குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பாவது வந்திருக்க வேண்டும். ஆனால் பெற்றோர்களின கனவை மாணவர்களை துரத்த செய்வது தான் நிலைமை.

ஆனால் இந்த டெக்னோ பள்ளிகள் IIT யின் தேர்வுமுறைகளை நன்கு புரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்கிறார்கள். கொஞ்சம் திறமை, அதிக கடின உழைப்பு இருந்தால் இந்த பள்ளிகள் மாணவர்களை IIT க்குள் அனுப்புவது உத்திரவாதம். ஆயிரக்கணக்கில் பெற்றோகள் இந்த பள்ளிகளை குறிவைத்து படைஎடுப்பதால் மாணவ இயந்திர தயாரிப்பு பழுதில்லாமல் நடைபெறுகிறது.

நாம் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க விரும்புகிறோமே தவிர எந்த துறை என்று கூட முடிவு செய்வதில்லை. எலெக்ட்ரானிக்ஸ் இல்லையா ஐ-டி ...இல்லையா கம்ப்யூட்டர் என்று கண்ணை மூடிக்கொண்டு மந்தை மனப்பான்மையில் இருப்பதால் இந்த பள்ளிகளை நாடி எப்படியாவது புகழ்பெற்ற கல்விநிறுவனங்களில் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து படித்தால் போதும் என்ற எண்ணம.அதில் மாணவர்க்கும் ஆர்வம் பற்றிய கேள்விகள் மழுங்கடிக்கபடுகின்றன. மாணவர்களும் எந்த கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு படிப்பு பற்றிய சிந்தனையில் மூழ்கடிக்கபடுகின்றனர்..இல்லாவிடில் மூளை சலவை செய்யபடுகின்றனர்.

கல்வி வணிக சூழலில் இருந்து வெளிய வரவேண்டும். மாணவர்களை பணம் சம்பாதிக்கத் தானே தயார்படுத்துகிறோம் என்று கூற முடியாத நிலை..அதற்கும் உத்திரவாதம் இல்லை..முடிவில் இளவயதை அருமையான பள்ளி பருவத்தை சாகடிக்கும் பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும்.

புகழ்பெற்ற டெக்னோ பள்ளிகளின் லிங்க்.

http://srichaitanyaschool.net/

http://www.narayanaetechnoschools.com/

இவை இரண்டும் மிகபுகழ் பெற்ற டெக்னோ பள்ளிகள்.அதை தவிர இந்த பள்ளிகளும் உள்ளன.

http://www.vaishnavitechnoschools.com/VTSIntro.ASPX
http://www.aksharaschool.com/
http://www.blueyetechnoschools.com/Academics.html
http://www.kkrgowtham.com/

இவற்றை தவிர்த்தும் பள்ளிகள் உள்ளன..அதை தவிர்த்து ராமையா போன்ற புகழ்பெற்ற கோச்சிங் சென்டர்கள் உள்ளன. இந்த பள்ளிகளின் தளங்களை பார்வை இடும்பொழுது மூன்றாம் வகுப்பில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்துகிறோம் என்ற வாசகங்கள் கொஞ்சம் அதிர்சிக்கரமாகதான் இருக்கு. அனைவரும் IIIT ல் படிக்க வேண்டும் என்றால் இத்தனை கல்விநிறுவனங்கள் திறப்பதுபோல IIT கல்லூரிகள் திறக்க வேண்டும். அப்போதே தயார் ஆகும் மாணவர்கள் IIT க்குள் நுழைய முடியும். கேள்விக்குறியான மாணவர்கள் வாழ்க்கை ?????? எங்கே போகிறோம் ?? கேள்விக்குறிகள்தான் இங்கு விடை சொல்கிறது.


போட்டி தேர்வுகள் ஒரு சிறு அலசல்.
 
IITJEE
போட்டி தேர்வு :

இந்தியாவில் மிகவும் பெருமை வாய்ந்த போட்டி, கடுமையான போட்டி தேர்வு.  மாணவர்களை விட பெற்றோர்களின் கனவு ....டி யன் என்று சொல்லி கொள்வதில் அத்தனை பெருமை,  ஆனால் அதற்காக உழைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை லட்சகணக்கில் ஆனால் தேர்வு ஆகி உள்ளே செல்ல போவதோ ஆயிரங்களில மட்டுமே. உலகத்திலேயே மிகுந்த போட்டி மிகுந்த தேர்வு IIT ENTRANCE தேர்வுதான்.

அங்கு சென்று என்ன சாதிக்க போகிறார்கள் என்பது வேறு விஷயம் ஆனால் அங்கு உள்ளே செல்வதே பெரும் சாதனைதான். எத்தனையோ கோடிகளில் பணம் புழங்கும் மிக பெரிய வியாபாரமாக மாறிவிட்டது இந்த கோச்சிங் கிளாஸ்கள். அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தனி தனி கோச்சிங் உண்டு..அனைத்துக்கும் சேர்த்து பேக்கேஜ் கூட உண்டு.
இதில் மிக புகழ் வாய்ந்த இடம் ராஜஸ்தான் கோட்டா பள்ளிகள். அந்த சிறு நகரம் கோச்சிங் கிளாஸ்களுக்கு பெயர் பெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து அங்கு வந்து படிப்பவர்கள் அதிகம் . சிறு வயதில் இருந்தே  சேர்க்கை நடைபெறுகிறது. ஆறாவதில் இருந்து,பிறகு ஒன்பாதவது அதுவும் இல்லாவிட்டால் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கை நடைபெறும்..இதெல்லாம் பள்ளி சேர்க்கை அல்ல வெறும் ஐ.ஐ.டி கனவுடன் வளரும் மாணவர்களுக்கான கோச்சிங்.

இங்கு பான்சல், ரிசோநன்ஸ்,ஆர்யன் ,கேரியர் பாயின்ட் இன்னும் பல பெருமை வாய்ந்த கோச்சிங் சென்டர்கள் உள்ளன. இதில் சிறந்த சென்டர்களில்  சேர நுழைவு தேர்வு உண்டு.  அந்த நுழைவு தேர்வு பற்றி பயம் வந்துவிடும் அல்லவா..கவலையே வேண்டாம் அதுக்கும் கோச்சிங் கொடுக்க கோட்டாவில் வசதி உண்டு. வருடத்திற்கு அறுபதாயிரம் மாணவர்களுக்கு குறையாமல் கோட்டாவில் தயார் ஆகிறார்கள். அத்தனை மாணவர்களும் மிக கஷ்டப்பட்டு படிக்கிறார்கள்.ஒவ்வொரு சென்ட்டரும் பெரும்பாலும் நன்கு படிக்க கூடிய மாணவர்களையே தேர்ந்து எடுக்கும்.

அங்கு பணம் கட்டி உள்ளே போய்விட்டால் ஐ.ஐ.டி.சீட் கிடைப்பது பற்றி ஒரு கியாரண்டியும் கிடயாது..ஆனால் பன்னிரெண்டாவது போகும் முன்னே சிலர் கூறிவிடுகிரார்கள். NITக்கு மட்டும் தயாரக சொல்லிவிடுவதால் ஒரு வசதி. பாடங்களை மட்டும் படிப்பது அல்லாமல் விடாமல் IITJEE தேர்வுக்கு தயாரக வேண்டும். இடைவிடாத தேர்வுகள், பாடத்திட்டங்கள் போன்றவற்றை  கால அட்டவணைகளாக அச்சடித்து கையில் கொடுத்துவிடுவார்கள்...சாப்பிட ஒதுக்கும் நேரம் கூட இந்த கால அட்டவணையில் இடம்பெறும். கோட்டாவில் ஒரு நாளைக்கு மாணவர்கள் ஆறு மணி நேரம் தூங்கினால் பெரிய விஷயமே .அத்தனை விஷயங்கள் படிக்க இருக்கும். எனக்கென்னமோ IITஉள்ளே போனால் கூட இத்தனை கஷ்டப்பட்டு கற்று கொள்வார்கள் என்று தெரியவில்லை. அத்தனை பாடங்கள் இங்கு படிக்கவேண்டும்.

இந்தியா முழுவதிலும் இருந்து கோட்டாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் அதிகம்..அதனால்  அது ஒரு கல்வி வியாபார கேந்திரமாக மாறிவிட்டது. நம் நாமக்கல் மாவட்டங்கள் இதற்கு முன் ஒன்றுமே இல்லை. அத்தனை பெரிய வியாபாரம் கார்பரேட் அளவில் நடைபெறுகிறது. ,நிறைய மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக விட்டு விட்டு வரும் அவலமும் நடக்கிறது.

இதற்கு நேரெதிராக புகழ்பெற்ற FIITJEE கோச்சிங் கிளாஸ் (இந்தியா முழுதும் FFITJEEக்கு கிளைகள் உள்ளன )  இருக்கும் பாட்னாவில் ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு சூப்பர் தேர்டி (super thirty ) என்ற கோச்சிங் நடத்தி வருகிறார். இங்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏன் முப்பது மாணவர்களுமே IIT க்கு செல்வது வருடா வருடம் நடக்கிறது. இவரது நூறு சதவிகித ஒற்றை மனித சாதனையை எந்த வியாபார கல்வியாலும் முறியடிக்க முடியவில்லை.

ஆனந்தகுமார் என்பவரால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி பல விருதுகளை அள்ளி சென்று இருக்கிறது இந்த சூப்பர் தேர்டி. இந்தியாவின் மிக சிறந்த கோச்சிங் சென்டர் ஆக அறியப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதனாக  நூற்றுகணக்கான நன்கு படிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்க்கையில ஒளி ஏற்றி வருகிறார். இவர் மூலம் IIT கல்வி நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்த பெரும்பான்மை மாணவர்கள் முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவர்கள். இப்படியும் கற்று கொடுக்கலாம் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துவோம். எல்லாவற்றையும் வியாபாரம் ஆக்கினாலும் இதிலும் நல்ல முறையில் சேவை செய்யமுடியும் நல்ல மாணவர்களுக்கு உதவ முடியும் என்று எடுத்துக்காட்டிய ஆனந்தகுமார் போன்ற நல்ல உள்ளங்களால் இந்தியா மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

http://www.youtube.com/watch?v=TYyIE3tstJ4

http://super30.org/