Tuesday, June 4, 2013

SAT பரீட்சை எழுதலாமா

இந்தியாவில் இப்பொழுது பலவித காரணங்களுக்காக வெளிநாட்டு படிப்பை பனிரெண்டாம் வகுப்பு முடிந்த நிலையிலையே வரவேற்க மாணவர்கள் தயாராகி விட்டார்கள் .அப்படி அங்கு செல்ல வேண்டுமானால் சில முக்கியமான பரீட்சைகளை எழுத வேண்டும். அதிலும் அங்கு படிக்க விண்ணப்பங்கள் ஆறு மாதங்கள் முன்பே அனுப்ப தொடங்க வேண்டும் என்பதால் பதினொன்று அல்ல்து பன்னிரெண்டாம் வகுப்பு துவக்கதிலையே பரிட்சைகள் எழுதி விட்டால் விண்ணப்பங்கள் அனுப்ப மிக வசதியாக இருக்கும்.

SAT
scholastic Aptitude Test என்பதன் சுருக்கம். இதில் ஆங்கில மொழிக்கும் பல்வேறு துறை சார்ந்த சப்ஜெக்ட் சாட் என்றும் இருக்கிறது. இதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் எழுதினால் அதற்குள் அங்கு அட்மிஷன் முடிந்தே இருக்கும்..எனவே பதினொன்று அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே எழுதிவிடுவது உத்தமம்.
ஏன் SAT பரீட்சை எழுத வேண்டும் ?
வெளிநாட்டு கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் சேருவதற்கு பல படிகள் உள்ளன. சில பல்கலைகழகங்கள் சாட் தேர்வு மதிப்பெண்களை இணைக்க கூறுகிறது. இதில் இரண்டு வித தேர்வுகள் உள்ளன. சாட் 1 , சாட் 2 இரண்டும். இதில் சாட் 2 என்பது subject sat அதாவது தனி பாடங்கள் உள்ள தேர்வு.நாம் என்ன பாடங்கள் தேவை என்று பார்த்து எழுதலாம்.
1 - vazhikatti graph_SAT
ஒவ்வொரு கல்லூரியிலும் ,பல்கலைகழகங்களிலும் ஒவ்வொரு விதமான தேர்வு முறைகள் உள்ளன.சாட் பரீட்சையும் அதில் ஒன்று..ஆனால அதை மட்டும் வைத்து தேர்வுகள் அமைவதில்லை. அதை எழுதினால் இன்னும் பாயின்ட் அதிகம் கிடைக்கும். அதனால் எந்த கல்லூரி தேர்ந்து எடுக்கிறோமோ அந்த கல்லூரிகளின் தேர்வு முறைகளை நன்கு படித்து பார்க்க வேண்டும்.
தற்பொழுது தேர்வுக்கட்டணம் 6000 ரூபாய்க்குள் இருக்கிறது. வருடத்திற்கு ஆறு முறை நடக்கிறது. வசதி உள்ளவர்கள் நான்கு முறை கூட எழுதுகிறார்கள்.
SAT 1 ..Reasoning Test.
Critical Reading,writing mathematics(quantitative aptitude) என்று மூன்று பேப்பர்கள் உள்ளது. இதில் கணக்கு முறைக்கு கால்குலேட்டர் வைத்துக்கொள்ளும் அனுமதி உண்டு. ஆங்கில பாடத்துக்கு முறையான பயிற்சி அவசியம்..இதற்கு பல தனியார் நிறுவனங்கள் பயிற்சி கொடுக்கின்றன..அறிந்த வரையில் முப்பதாயிரம் வரை வெறும் ஆங்கில பயிற்சிக்கு மட்டுமே வாங்குகிறார்கள். நன்கு படிப்பவர்கள் தானாக படித்தும் நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்.
writing பகுதியில் கட்டுரை எழுதுவதில் நன்கு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்..பிறகு ஆங்கில வார்த்தைகளில் நல்ல ஆளுமையும் தேவைபடுகிறது. ஆனால் மிகுந்த கடினமான தேர்வு அல்ல.
SAT 2..Subject Test.
சில பல்கலைகழகங்கள் SAT1 தேர்வு மட்டும் எடுத்துகொளவதில்லை..அவர்கள் SAT 2 தேர்வு மதிப்பெண்கள் வேண்டுவார்கள். எடுத்துக்காட்டாக ஹார்வேர்ட் பல்கலைகழகதிற்கு விண்ணபிக்க வேண்டும் என்றால் மூன்று சாட் பாடங்களின் மதிப்பெண்கள் தேவைப்படும்.
SAT 2..பாடங்கள்.
ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மொழி பாடங்களை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
கணிதத்தில் இரு பேப்பர்களில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம், அறிவியல் பாடத்தில் இயற்பியல்,வேதியல் ,உயிரியல் பாடங்கள் உள்ளது. அதை தவிர வரலாற்றில் அமெரிக்க வரலாறு,உலக வரலாறு பாடபிரிவுகள் உள்ளன.
மொழி பாடங்களில் பிரெஞ்ச,ஜெர்மன,ஸ்பானிஷ் உள்பட பல மொழிகள் உள்ளன. இந்த மதிப்பெண்கள் பல்கலைகழக தேர்வுக்கு உதவும்.நம் இந்திய மாணவர்கள் தற்பொழுது சிறந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
குறைந்தபட்ச தகுதி எதுவும் இல்லை..ஒன்பதாம் வகுப்பில் கூட எழுதலாம்.
குறைந்தபட்ச மதிப்பெண்கள் கட் ஆப் போன்றவை இல்லை.
இந்த தேர்வை எழுத கண்டிப்பாக பாஸ்போர்ட் தேவை.
பரிட்சைகள் வருடத்தில் ஆறு முறை நடக்கும். எத்தனை முறை வேண்டும் என்றாலும் எழுதலாம். பெரும்பாலும் இரண்டு முறை எடுத்துகொள்வது சகஜமாக இருக்கிறது.
காலேஜ் போர்ட் என்ற வலை தளத்தில் விண்ணபிக்க வேண்டும்.
அவர்கள் வரிசைப்படுதப்பட்டு குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களில் ஒன்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலும் புகழ்பெற்ற இண்டர்நேஷனல் பள்ளிகளே தேர்வு மையமாக இருக்கும்.
தவறான விடைகளுக்கு நெகடிவ் மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது.
அமெரிக்க பல்கலை கழகங்கள் சாட் பரீட்சை மதிப்பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிகின்றன.
முதல் தர பல்கலைகழகங்கள் சாட் தேர்வில் 2200/2400 மேல் மதிப்பெண்களை எதிர்பார்கின்றன.
நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்து சாட் தேர்விலும் முழு மதிப்பெண்கள் பெற்றால் நல்ல ஸ்காலர்ஷிப்புடன் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்காக இந்த தளத்தில் விண்ணபிக்க முடியும். http://sat.collegeboard.org/home.

No comments: