Tuesday, June 4, 2013

விவசாயம் மற்றும் விண்வெளி போன்ற ஆராய்ச்சித்துறைகள்

என்ஜினீயரிங், மெடிகல் படித்தும் கூட ஆராய்ச்சியில் ஈடுபடுவர்..ஆனால் அறிவியல் ஆராய்ச்சியில் விருப்பமுள்ளவர்களுக்கும் அறிவியல் சம்பந்தமாக படிக்க வேண்டும் என்றாலும் இந்தியாவில் மிக சிறந்த கல்லூரிகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான கல்லூரிகள் IISC, IISER, அப்புறம் ஸ்பேஸ் பற்றிய படிப்புகளுக்கு IIST.
பிறகு விவசாயம், பயோ டெக்னாலஜி போன்ற ஆராய்ச்சி படிப்புகளுக்கும் நிறைய கல்லூரிகள் உள்ளன..
IISC ..India Institute of science.
இங்கு B.S. படிப்புகள் ஆரம்பித்து உள்ளார்கள்..இங்கு சீட் கிடைப்பதும் மிக கஷ்டமே..இங்கு kvpy போட்டித்தேர்வு, IIT போட்டி தேர்வு ,மற்றும் AIEEE மூலம மாணவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள்..அதை தவிர ஒலிம்பியாட் தேர்வுகளில் இந்திய அல்லது உலக அளவில்வெற்றி பெற்றிருந்தாலும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இங்கு பாடங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆய்வு கூடங்களில் நடத்த படுகிறது. இந்திய அளவில் அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பெருமை வாய்ந்த கல்லூரி. அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த கல்லூரி ஆகும். இங்கும் 120 இடங்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து முப்பதாயிரம் விண்ணப்பங்களுக்கு மேல் வருகிறது.
http://www.iisc.ernet.in
22 m - kiruthika vazhikatti
IISER
அறிவியல் துறை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு முன்பு B.SC,M.sc போன்றவைகளை மட்டுமே தேர்ந்து எடுத்து படிக்க முடியும்..ஆனால் இப்பொழுது IISER மூலம ஐந்து வருட B.S,M.S ஒருங்கிணைக்கப்பபட்ட படிப்பை படிக்க முடியும்..பிறகு ஆராய்ச்சி படிப்பு டாக்டோரல் படிப்பை தொடர வாய்ப்பும்உண்டு.வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ ஆராய்ச்சியை தொடர முடியும். இங்கும் kvpy,IIT மற்றும் மாநில,மத்திய போர்டுகள் நடாத்தும் பன்னிரெண்டாவது மதிப்பெண்கள் மூலம் தேர்ந்து எடுக்கும் மாணவர்களுக்கு திறனாய்வு (aptitude) பரீட்சை மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.

அதை தவிர இந்தியா முழுவதும் உள்ள விவசாய கல்லூரிகளில் நான்கு வருட B.tech பட்டய படிப்புகள் வழங்கபடுகிறது. அங்கும் பயோ டெக்னாலஜி, பிளான்ட் டெக்னாலஜி போன்ற ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் பல்வேறு துறைகளில் வழங்கப்படுகிறது . வெறும் இன்ஜினியரிங் கல்லூரிகளை மட்டும் குறிவைத்து தேடி கொண்டு இருக்காமல் பலவேறு துறை சார்ந்த கல்லூரிகள் பற்றி அறிந்து வைத்துகொண்டால் மாணவர் சேர்க்கையின் பொழுது மிகுந்த வசதியாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் வேலை வாய்ப்புகள் இன்ஜினியரிங் படிப்புகளில் மிகுந்த போட்டி வாய்ந்ததாக மாறிக்கொண்டு இருப்பதால் வேறு துறைகளுக்கு மாறும் நிர்பந்தங்கள் எற்பட்டுகொண்டு இருகிறது.
IIST
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக நிலையம் மூலம B.tech பட்டய படிப்புகள் படிக்க IIT பரீட்சை மூலம மாணவர்கள் தேர்ந்து எடுக்க படுவர். அங்கு B.Tech. (AEROSPACE ENGINEERING),B.Tech. (AVIONICS) :B.Tech. (PHYSICAL SCIENCES) ஆகிய துறைகளில் சேரலாம்.
IIITB..
International Institute of Information Technology:
இதுவும் IT சிறந்த கல்லூரி ஆகும் . இந்த கல்லூரியிலும் IIT main பரீட்சை மூலமே மாணவர்கள் தேர்ந்து எடுக்கபடுவர்கள். இங்கு M.tech ஒருங்கிணைக்கப்பட்ட படிப்பு வழங்கபடுகிறது.
http://www.iiitb.ac.in/integrated-mtech#selection-proc
இந்திய அளவில் பெருமை வாய்ந்த பல கல்லூரிகள் பெரும்பாலும் IIT Main (AIEEE) மூலமே தேர்ந்து எடுக்கபடுகிறது. அந்த நுழைவு தேர்வு மிக முக்கியமாக கருதபடுகிறது. தமிழ்நாடு மாணவர்களும் இந்திய அளவில் தயாராகி அனைத்து பரீட்சைகளையும் உடைத்து மேலே வருவதற்கு வெறும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டும் இல்லாமல் நுழைவு தேர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

No comments: