Thursday, March 31, 2016

விகடனில்..

நன்றி  ஆனந்த  விகடன்.




உன்னை ஓர் அறையில் எட்டு மணி நேரம் அடைச்சுவெச்சு, உனக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, நான் ஏதாவது சொல்லித்தருவேன். அதை நீ படிக்கணும். சில சமயம் 
A, B, C, D-கூட எட்டு மணி நேரம் சொல்லிக்கொடுப்பேன். 

நீ அமைதியா உட்கார்ந்து படிக்கணும். முடியுமா?’ - ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகன், தன்னிடம் இப்படிக் கேட்டதாகச் சொல்கிறார் கிர்த்திகா தரன். பெங்களூரில் வசித்துவரும் இவர், தன் மகனை ஹோம் ஸ்கூலிங் முறையில் படிக்க வைத்து இன்று வெற்றிகரமாக கல்லூரிக்கு அனுப்பியிருக்கும் தாய்.

``ஆறாம் வகுப்பில் `ஸ்கூலுக்குப் போக மாட்டேன்' என்று அவன் சொன்னவுடன் வேறு என்ன வழிகள் இருக்கின்றன எனத் தேடி அலைந்தோம். மாற்றுப்பள்ளிகளில் சேர்த்துப் பார்த்தோம். அங்கேயும் சரிவரவில்லை. சலித்துப்போய் கடைசியாக நின்ற இடம்தான் ஹோம் ஸ்கூலிங். அப்போது முதல் என் மகனுக்கு வீடுதான் பள்ளி. 14 வயது ஆனவுடன் IGCSE முறையில் பத்தாம் வகுப்புக்குத் தேர்வு எழுத அவனைத் தயார்ப்படுத்தினேன்.

`யாராவது பத்தாம் வகுப்பில் ஹோம் ஸ்கூலிங் செய்வார்களா? பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு நல்ல பள்ளியில் அட்மிஷன் வாங்கிடுங்க' என்று அறிவுரை சொன்னவர்கள் பலர். ஆனால், மகன் `எக்காரணம் கொண்டும் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தான். 14 வயதில் அசாத்திய உறுதி அது. ஓர் அம்மாவாக அவனின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவன் விருப்பம் என்னவோ அதன்படியே படிக்கவைத்தேன்.

3 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாங்கும் இன்டர்நேஷனல் பள்ளிகள், IGCSE சிலபஸில்தான் பாடம் நடத்துகின்றன. எங்களுக்குத் தேர்வு செலவு 30 ஆயிரம் மட்டுமே. லண்டனில் இருந்து சான்றிதழ் வந்துவிடும். சாதாரண தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் சான்றிதழில் பெரிய வித்தியாசம் கிடையாது. சரியாக 16 வயதில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது முழு ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் (இரட்டை டிகிரி) இன்ஜினீயரிங் படிக்கிறான்.

இந்தியாவில் ஹோம் ஸ்கூலிங் என்றால், பலரும் பயமுறுத்துவார்கள். `எதிர்காலம் கேள்விக்குறி’ என்பார்கள். அப்படி எதுவுமே இல்லை. மிகச் சரியாகத் திட்டமிட்டால் பள்ளியில் ஒரு வருடம் சொல்லிக்கொடுப்பதை, நான்கு மாதங்களில் முடித்துவிட முடியும். அவ்வளவுதான் இருக்கிறது நம் பாடத் திட்டத்தில்’’ 

2 comments:

'பரிவை' சே.குமார் said...

பத்திரிக்கையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
இப்ப பசங்க எல்லாம் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கானுங்க...
எங்காளு ரெண்டாவது படிக்கிறான்...
நேற்றிரவு பேசும்போது அவன் ஏதோ சொன்னான்... உடனே மகள் அப்பா அவன் உங்களை அட்வான்ஸா ஏமாத்துறானாம் என்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவனிடம் நான் ஏதோ சொல்ல, என்ன அட்வான்ஸா எங்களை ஏமாத்துறீங்களாக்கும்... அதெல்லாம் இங்க முடியாது என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டான்....

உங்க பையன் கேட்டது சரிதானே... நாமெல்லாம் அப்படித்தானே செய்கிறோம்...

Anuprem said...

வாழ்த்துக்கள்...

home schooling..wow..