Thursday, December 18, 2014

பகிர்தல் சொர்க்கம்.

பகிர்வதின் சொர்க்கம்.

 கல்வி..கல்வி என்றால் என்ன..

அக்கா பையன் கௌதமிடம் கேட்டேன். ஆர்வம் உண்டாக்குவது. கவனமா ல் க்கு புள்ளி வைப்பது என்றான்.

நல்ல சென்ஸ் ஆப் ஹுயுமர் மட்டுமில்லை..ஹுமாநிடியும் இருக்கு அவனிடம்..M.Tech முடித்து அடுத்தப்படி செல்ல போகிறான்..நடுவில் கிடைத்த நாட்களில் ஏதாவது செய்ய வேண்டும் என்று பெங்களூரு வந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள்..காலையில் ஒரு பள்ளி, சாயங்காலம் வேறு பள்ளி.. மாலையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுகொடுத்தல் .பின்தங்கிய ..வருமானம் குறைந்த மாணவர்களுக்கான பள்ளிகள்.  பாதிக்கு மேல் முதல் தலைமுறை கல்வி கற்கும் குழந்தைகள்..

மிக அருமையான குழந்தைகள்..மிக அற்புத அறிவு..சொல்லிக்கொடுப்பதை அப்படியே உள்வாங்கும் சக்தி..முன்னுக்கு வர வேண்டும் என்ற உத்வேகம்..கண்களில் ஒளி..

அங்கு செல்லும் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம்..கௌதம் சயின்ஸ் லேப் நான் எடுத்துக்கொண்டு செய்கிறேன் என்றான்..அவர்கள் அது வரை லேப் சென்றதே இல்லை..

தினமும் ப்ராடிகல் வழியாக சயின்ஸ்..பயாலாஜிக்கு விடியோ பாடங்கள்..ஒவ்வொரு நாளும் குழந்தைகள் உற்சாகமாய் கற்றனர்..அவன் சொல்லிகொடுத்ததை உள்வாங்கி தினமும் ஒன்று அவர்களே செய்துக்கொண்டு வந்தனர்..அது வரை டாக்டர், இஞ்சினியர் என்றவர்களை சயின்டிஸ்ட் என்ற ஒருவர் இருக்கிறார் எண்று நினைவுப்படுத்தி சயின்ஸ் மேல் ஆர்வம் வரவைத்த நாட்கள்..

இப்பொழுது அவன் மேற்படிப்பு செல்லும் நேரம் வந்துவிட்டது..உடனடியாக குழந்தைகளிடம் விடைப்பெறும் வேலை..

சமூகத்தில் இருந்து எடுத்துக்கொண்டதை சமூகத்துக்கு திருப்பி கொடுக்க சிலருக்கே மனம் வருகிறது..மிகச்சிறிய காலம் என்றாலும்..இனி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வருகிறேன் என்று உறுதியும் அவனுக்கு இருப்பது எத்தனை அழகான விஷயம்..

குழந்தைகள் அவனுக்காக பிரார்த்தனைகள் செய்தும்..பத்து நிமிடத்தில் உடனே தோட்டத்தில் இருந்த பூக்களை வைத்து பொக்கே செய்தும், வாழ்த்து அட்டைகள் செய்தும் அசத்தி விட்டனர்..

பாதர் (Father) அவனுக்கு கொடுத்த அன்பளிப்பு..(எவ்ளோ என்று அவன் பார்க்கவில்லை) பணத்தை திருப்பி அவர்களிடமே கொடுத்து சயின்ஸ் லேப் க்கு தேவையானதை வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான்..

ஈன்ற பொழுதில் நம்ம பையனுக்கு மட்டுமில்லை..அவனை கையில் பெற்ற முதல் ஆள் நான்..பெற்ற பொழுதினும் பெரிதுவக்கும் பேறை ஒரு செயலால் செய்துவிட்டான்..அவனுடைய முதல் உழைப்பின் பணத்தை அப்படியே கொடுத்து விடுவது..ப்ச்..கிரேட்..

இருவருக்கும் கண் கலங்கியது..அவர்கள் செலுத்திய பாசத்தில்..போட்டோ எடுத்துக்கொண்டு , மனம் நெகிழ அவன் மேல் அத்தனை குழந்தைகளும் அன்பு செலுத்தி கண் மூடி பிரார்த்தனை  செய்வதை கவனித்தேன்..

நல்லாருப்போம்..இந்த இளைஞர்களும், குழந்தைகளும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

நம்பிக்கை வெளிச்சம்..மனமெங்கும், வெளியெங்கும்.






9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
குழந்தைகள் என்றால் எப்போதும் மகிழ்ச்சிதான்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Rathnavel Natarajan said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் கௌதம்.

Avargal Unmaigal said...

சமுகத்தை குறை கூறும் இளைஞர்கள் மத்தியில் சமுகத்திற்கு தான் பெற்ற அறிவை பகிரும் கெளதம் தனித்து நிற்கிறான். பாராட்டுக்கள் கெளதம்.. வாழ்க வளமுடன்

Avargal Unmaigal said...

இந்த மாதிரியான நல்ல காரியங்கள் செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

priyasundar said...

oru varudarthirkku mudhal mathame mothamaga fees vangum yugathil, sila kuringi poovum poothu thaniyaga nirka than seikirathu.


Unknown said...

கெளதமுக்கு அன்பும், வாழ்த்துகளும்..அம்மா சுதாவுக்கும்..உங்களுக்கும் கூட..கொடுக்க கொடுக்க குறையாத செல்வம்...கல்விச் செல்வம்தான்...

Unknown said...

அன்பும்
வாழ்த்துக்களும்..கௌதம்!

ezhil said...

இன்னம் நம்பிக்கை கொடுக்கிறார்கள் கௌதம் போன்ற இளைஞர்கள்.... வாழ்த்துக்கள்

umakanth tamizhkumaran said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் கௌதம்.